showImageInStoryயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் Read more


z_p15-We-are-runningதமிழ் மக்களின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இருக்கின்றமையே தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய Read more


10820_content_sampanthan3எமது கட்சி ஆரம்­பித்த காலத்­தி­லி­ருந்து தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும், அதி­காரப் பகிர்­வுக்­கா­கவும் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றது. தமிழ் மக்­கள்தான் அதி­காரப் பகிர்வை வேண்­டி­னார்கள். அதற்­காக போராட்­டங்­களைச் செய்தார் கள். சிங்­கள மக்­களோ, முஸ் லிம் மக்­களோ அதி­காரப் பகிர் வைக் கேட்­க­வில்லை. நாங் கள் மாத்­தி­ரமே அதி­காரப் பகிர் வைக்­கேட்டோம். அதி­காரப் பகிர்வு சகல மக்­க­ளுக்கும் சம­மாக இருக்க வேண்டும்.

இவ்­வாறு மு.கா.வின் தேசிய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன்

தெரி­வித்தார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

ஜன­நா­யகம் பாது­காக்­கப்­பட வேண்­டு­மாக இருந்தால் அர­சியல் கட்­சிகள் பல­மாக இருக்க வேண்டும். எமது தமி­ழ­ரசுக் கட்சி 1949ஆம் ஆண்டு தந்தை செல்­வா­வினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. அக்­க­ட­சி­யில்தான் நான் தொடர்ந்து இருந்து கொண்­டி­ருக்­கின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் 1981ஆம் ஆண்டு மர்ஹூம் அஷ்­ரப்­பினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. அவர் தந்தை செல்­வாவின் பாச­றையில் வளர்ந்­தவர். அவரின் பாதையில் பயணம் செய்தார். இன்று அவர் ஆரம்­பித்த கட்சி பெரி­ய­வ­ளர்ச்சி கண்­டுள்­ளது இதற்கு இந்­த­மா­நாடு நல்ல ஆதாரம்.

இன்று இலங்­கையின் அர­சி­யலில் பாரிய மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. நாட்டில் சர்­வா­தி­காரம் காணப்­பட்­டது. மனித உரி­மைகள் மீறப்­பட்­டன. சட்­டத்தின் ஆட்சி இல்­லா­தி­ருந்­தது. நிறு­வ­னங்­க­ளுக்கு சுதந்­தி­ர­மாக இயங்க முடி­யா­தி­ருந்­தன. ஆனால், 2015இல் ஏற்­பட்ட பாரிய ஆட்சி மாற்­றத்தின் கார­ண­மாக இன்று நாட்டில் மனித உரி­மைகள் மதிக்­கப்­படும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. சுதந்­திரம் காணப்­ப­டு­கின்­றது. இது போன்று பல முன்­னேற்­றங்கள் காணப்­ப­டு­கின்­றன. இதனை நாங்கள் வர­வேற்­கின்றோம். இது தொடர வேண்­டு­மென்று கேட்­கின்றோம்.

இவ்­வாறு நல்ல மாற்­றங்கள் ஏற்­பட்­டாலும், நாட்டின் ஸ்தீரத் தன்­மையை உறுதி செய்து கொள்­வ­தற்­காக அர­சியல் யாப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. இதற்­கான தீர்­மானம் ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அதற்­கான வேலைகள் விரைவில் ஆரம்­பிக்­கப்­படும் என்று நம்­பு­கின்றோம்.

நாட்டில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில்தான் தமிழ்­பேசும் மக்கள் அதி­க­மாக வாழ்­கின்­றார்கள். ஏனைய மாவட்­டங்­களில் சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்து கெண்­டி­ருக்­கின்­றார்கள். தமிழ் பேசும் மக்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும். ஒரு­மித்த நாட்டில், நாடு பிள­வு­ப­டாத தீர்­வு­களை வேண்­டு­கின்றோம்.

அர­சியல் தீர்­வு­களில் தமிழ் மக்­களின் கருத்­துக்கள் ஏற்­கப்­பட வேண்டும். தமிழ்­பேசும் மக்­களின்; கருத்­துக்­களும் ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். தமிழ் பேசும் மக்கள் சமத்­து­வத்­துடன் வாழ வேண்டும்.

1957ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்ட பண்டா – செல்வா உடன்­ப­டிக்­கை­யிலும், டட்லி- செல்வா ஒப்­பந்­தங்­க­ளிலும் வட, கிழக்கு தமிழ் பேசும் மக்­களைப் பற்றி குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. 1987ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்ட இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தில் வட, கிழக்கு தமிழ் பேசும் மக்­களைப் பற்­றியே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அஷ்­ரப்­புடன் நாங்கள் அதி­காலை 02 மணி வரை பேசி பல தீர்­வு­க­ளுக்கு வந்­தி­ருந்தோம்.

நாங்கள் ஒரு காலத்தில் தனி­நாட்டுக் கோரிக்­கையை முன் வைத்தோம். அதற்­காக போரா­டினோம். தனி­நாடு கேட்­ப­தற்­கான உரிமை எங்­க­ளுக்கு இருந்­தது. நாட்டில் ஒரு பகு­தியை நாங்கள் ஆட்சி செய்தோம். அதனால், அதனைக் கேட்டோம். இன்று அக்­கோ­ரிக்­கையை கைவிட்­டுள்ளோம். ஒன்று பட்ட நாட்­டிற்குள் அதி­காரப் பகிர்வை வேண்­டு­கிறோம். அதி­காரப் பகிர்வு சகல மக்­க­ளுக்கும் சம­மாக ற்­காக போரா­டினோம். தனிநாடு கேட்பதற்கான உரிமை எங்களுக்கு இருந்தது. நாட்டில் ஒரு பகுதியை நாங்கள் ஆட்சி செய்தோம். அதனால், அதனைக் கேட்டோம். இன்று அக்கோரிக்கையை கைவிட்டுள்ளோம். ஒன்று பட்ட நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வை வேண்டுகிறோம். அதிகாரப் பகிர்வு சகல மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=19&editionDate=20/03/2016


M.A.Sumanthiranவடக்கு, கிழக்கில் மக்களுக்கு அதிக வீடுகள் தேவைப்படும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு அமைக்கும் Read more


parathipuram_meeting_005கிளிநொச்சி மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மக்களின் கருத்துக்கள் தேவைகள் Read more