எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் உள்ள இராணுவ முகாமிற்குள் Read more


(எம்.நியூட்டன்)

நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற எண் ணம் எமக்­கில்லை. சமஷ்டி என்ற Read more


(ஆர்.ராம்)

வடக்கு, கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்­காக முன்­னெ­டுக்­கப்­படும் 65ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்தில் காணப்­படும் பார­தூ­ர­மான விட­யங்­களை கருத்­திற்­கொண்டு அத்­திட்­டத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு கோரி ஜனாதிபதி

பிர­தமர்

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அவ­ச­ர­க­டி­த­மொன்றை அனுப்­பி­யுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுவில் எடுக்­கப்­பட்ட ஏகோ­பித்த தீர்­மா­னத்­திற்கு அமை­வா­கவும், துறைசார் நிபு­ணர்­களின் ஆய்­வ­றிக்­கையைக் கருத்­திற்­கொண்டும் குறித்த கடிதம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு நேற்­றைய தினம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வடக்கு கிழக்கில் வீட்டுத் திட்­டத்­திற்­கான தேவை­யா­னது மிகவும் பார­தூ­ர­மா­னது. கணிப்­பீ­டு­களின் பிர­காரம் யுத்த அழி­விற்கு பின்னர் வடக்கு கிழக்கில் வீடு­களின் தேவையை பூர்த்தி செய்­வ­தற்கு 137ஆயிரம் வீடுகள் தேவை­யாக உள்­ளன. இந்த பிரச்­சி­னை­யா­னது நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும்.

எனவே தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பா­னது இத்­தே­வையை தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்­பதை உணர்ந்து அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருக்கும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்­டத்­தினை வர­வேற்­கி­றது.

எனினும் இத்­திட்டம் தொடர்பில் நிலவும் பார­தூ­ர­மான விட­யங்கள் தொடர்பில் சிவில் சமூக ஆர்­வ­லர்கள், தொழிற்­துறை சார்ந்தோர், மற்றும் அர­சி­யல்­வா­திகள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்கும் கருத்­துக்கள் புறக்­க­ணிக்­கப்­பட கூடி­யவை அல்ல. இவற்றுள், மொறட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்தின் மேற்­கு­றிப்­பிட்ட வீடு­களின் பொருத்தம் தொடர்­பி­லான நிபு­ணர்­களின் அறிக்­கையும் உள்­ள­டங்கும். பின்­வ­ரு­வன இத்­திட்டம் தொடர்பில் எழுப்­பப்­பட்­டுள்ள மிக பிர­தா­ன­மான விட­யங்­க­ளாக காணப்படுகின்றன.

கட்­டு­மான நிறு­வ­னத்தை தெரிந்­தெ­டுப்­ப­தற்­கான கேள்­வி­மனு நடை­முறை தொடர்பில் எழுப்­பப்­படும் கேள்­விகள் இங்கு முக்கியமானதாகும்.

குறித்த தனியார் நிறு­வ­னத்­திற்­கான கேள்­வி­மனு ஒப்­பந்தம் தொடர்பில் காணப்­பட்ட பல்­வேறு ஒழுங்­கற்ற நடை­மு­றைகள் தொடர்பில் ஏரா­ள­மான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இவற்றுள் ஒன்­றாக, இந்த ஒப்­பந்­தத்தை குறிப்­பிட்ட நிறு­வ­னத்­திற்க்கு வழங்­கு­வ­தற்­கான தீர்­மா­ன­மா­னது கேள்­வி­மனு கோரல் அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே அதா­வது 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தீர்­மா­னிக்­கப்­பட்டு விட்­டது.

வீடு­களின் ஆயுட்­காலம்

தொடர்­பான கரி­ச­னைகள்

இந்த விடயம் தொடர்பில் பல்­வேறு கரி­ச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. நிபு­ணர்­களின் கருத்­துப்­படி முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள இந்த பொருத்து வீடுகள் 10 வரு­டங்­க­ளுக்கு மேல் தாக்கு பிடிக்­காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்­தி­ர­மன்றி தற்­போது அமைக்­கப்­பட்­டுள்ள மாதிரி வீடுகள் ஏலவே அமைத்து ஒரு சில வாரங்­க­ளுக்­குள்­ளேயே பொருத்­துக்கள் பிரிய ஆரம்­பித்து விட்­டன.யுத்­த­த்தி­னால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மக்­களுக்கு வீடு என்­பது வெறு­மனே ஒரு உறை­விடம் அல்ல, மாறாக அது அவர்­க­ளது கலாச்­சா­ரத்­தி­லி­ருந்து பிரித்து பார்க்க முடி­யாத ஒன்­றாகும். வீடா­னது ஒரு தலை­மு­றை­யி­லி­ருந்து இன்­னொரு தலை­மு­றைக்கு கைமா­று­கின்ற ஒன்­றாகும். என்­றா­வது ஒரு நாள் தமது பிள்­ளை­க­ளுக்கு கொடுப்­ப­தற்­கென்றே பெற்­றோர்கள் வீடு­களை அமைக்­கி­றார்கள். எனவே தமிழ் மக்­களை பொறுத்­த­வரை, வீடென்­பது அவர்­க­ளது கலாச்­சாரம் வர­லாறு,மற்றும் பாரம்­ப­ரி­யத்­தோடு பிணைந்­தது, மாத்­தி­ர­மன்றி பல தலை­முறை வரை நிலைத்­து­நிற்க வேண்­டிய ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. எனவே வீட்டின் ஆயுட்­காலம் என்­பது முக்­கி­ய­மான கரி­ச­னை­யாகும்

சுற்றுச் சுழ­லுக்கு ஒவ்­வாத வீடுகள்

முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள வீடுகள் கற்­க­ளி­னாலே கட்­டப்­ப­டாமல் பொருத்­துக்­க­ளி­னா­லேயே கட்­டப்­ப­டு­கின்­றன. அதிக உஷ்­ண­மான இலங்கை போன்ற நாட்­டிற்கு பொருத்­த­மற்ற ஒன்­றாகும். இது மேலும் உஷ்­ணத்­தன்­மையை அதி­க­ரிக்க செய்­கின்­ற­தா­கவே அமையும்.

வீடொன்றின் செல­வீனம்

தற்­போது உள்ள திட்­டத்தின் படி, ஒரு வீட்­டிற்­கான செல­வாக 2.1 மில்­லியன் ரூபா மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த தொகை­யா­னது, சூழ­லிற்கு ஏற்ற அதிக ஆயுளைக் கொண்ட கற்­க­ளி­னாலே அண்­மையில் இந்­திய அர­சி­னால் வடக்­கில் கட்­டப்­பட்ட 50,000 வீடு­க­ளுக்­கான செல­விலும் பார்க்க இரண்டு அல்­லது மூன்று மடங்கு அதி­க­மா­ன­தாகும். இது மிக முக்­கி­ய­மான ஒரு கரி­ச­னை­யாகும், ஏனெனில் 130,000 வீடுகள் தேவைப்­ப­டு­கின்ற சூழ் நிலையில் அர­சாங்­க­மா­னது அதிக செலவில் அத்­தே­வையின் அரை­வா­சி­யையே பூர்த்தி செய்­கி­றது.

வீட்­டுத்­திட்டம்

செயற்­ப­டுத்­தப்­படும் முறை

வீட்டுத் தேவையை போலவே வடக்­கில் உள்ள இன்­னு­மொரு பிரச்­சினை வேலை­யில்லா பிரச்­சி­னை­யாகும். இந்த நிலை­மையில் உள்ளூ­ரிலே காணப்­படும் தொழி­லா­ளி­க­ளுக்கு இந்த திட்­டத்­தில் தொழ்ில் வழங்­கப்­ப­டு­வ­தனை உறுதி செய்ய வேண்­டிய தேவைப்­பாடும் உள்­ளது.

எனவே அர­சாங்­க­மா­னது இந்த திட்டம் தொடர்பில் கேள்­வி­யுடன் கூடிய ஒரு மீளாய்வை செய்து இந்த திட்­டமோ அல்­லது வட கிழக்­கில் காணப்­படும் வீட்டு தேவை­களை நிவிர்த்தி செய்யும் வேறு எந்த திட்­டத்­தி­னையோ நடை­மு­றை­ப­டுத்தும் போது, மேல் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கரி­ச­னை­களை சரி­யான விதத்­தில் கையாள வேண்டும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பா­னது ஆணித்­த­ர­மாக பரிந்­துரை செய்­கின்­றது.

வேண்­டுகோள்

வடக்கு கிழக்­கில் காணப்­படும் வீட்டு தேவையை பூர்த்தி செய்ய அர­சாங்கம் எடுத்­துள்ள பிர­யத்­த­ன­மா­னது வர­வேற்க்­க­தக்­கது. ஆயினும் அந்த முயற்­சிகள் மக்­க­ளது தேவை­யையும் கலாச்­சா­ரத்­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது மாத்­தி­ர­மன்றி, செயற்­ப­டுத்­தப்­படும் திட்­டங்­களின் மூலம் நீண்ட காலத்­திலே சமூ­கத்­திலே ஏற்ப்­ப­டுத்­தக்­கூ­டிய கூடிய பின் விளை­வு­க­ளையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். அப்­ப­டி­யாக அமை­கின்ற போது மாத்­தி­ரமே இப்­ப­டி­யான முயற்­சிகள் நல்­லி­ணக்­கத்­திற்கு பக்க பல­மாக அமையும். மாறாக இப்­ப­டி­யான முயற் ­சிகள் ஊழலின் பக்கம் சாய்ந்து அதி­காரம் படைத்த ஒரு சில­ருக்கு மாத்­திரம் நன்மை பயக்­கின்­ற­தாக அமை­யக்­கூ­டாது.

நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் தமக்­குள்ள அர்ப்­ப­ணிப்பை பகி­ரங்­க­மாக இந்த அர­சாங்கம் வெ ளிக்­காட்­டி­யுள்­ளது. அந்த வகையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட சமூ­கத்­திற்கு உதவும் முக­மான அவர்­க­ளது இல்­லங்­களை மீளக் கட்­டி­யெ­ழுப்பும் இப்­ப­டி­யான திட்­டங்கள் மிக முக்கியமான நல்ல சந்தர்ப்பங்களாகும். எனினும் அரசியல் இலாபங்களுக்காக வடக்கு கிழக்கு மக்களின் உண்மையான தேவைகளை புறக்கணித்து இப்படியான திட்டங்களை முன்னெடுப்பதானது, அந்த அர்ப்பணிப்பை செயற் படுத்த முடியாத ஒரு நிலைமையையே எடுத்துக்காட்டும்.

தமிழ் மக்களின் சார்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் இந்த நல்ல வாய்ப்பை வீணடிக்க வேண்டாம் என நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நல்லிணக்கத்திற்கு அரசாங்கம் அர்ப்பணித்துள்ளதாயின் அந்த அர்ப்பணிப்பு செயற்பாடுகளில் பிரதிபலிக்க வேண்டும். எமது பங்கிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பானது, உண்மையான நல்லிணக்கத்தை கொண்டுவரும் அரசாங்கத்தினது எந்தவொரு முயற்சிக்கும் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=19/04/2016