* நிராகரிக்கப்பட்ட கூட்டணியைக் கண்டு அஞ்சவில்லை * சமஷ்டியை சிங்களவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் * அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை

போர்க்­குற்றம் தொடர்பில் அர­சாங்கம் மேற்­கொள்ளும் உள்­ள­கப்­பொ­றி­மு­றையில் அர­சாங்­கத்தின் பக்கம் முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் உள்­ள­தென்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் முயற்­சி­யிலும் வடக்கின் சுயா­தீன செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­வ­திலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய சில விட­யங்­களை அர­சாங்கம் கையாண்­டாலும் அர­சியல் கைதி­களின் விடு­தலை, காணிகள் விடு­விப்பும், காணாமல் போனோர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதில் தாமதம் உள்­ளது என தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம். ஏ. சுமந்­திரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அவருடனான செவ்வி வருமாறு :
கேள்வி:- ஐக்­கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள் இலங்­கைக்­கான விஜ­யத்­தினை மேற்­கொண்­டி­ருந்­தனர். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவர்­க­ளுடன் சந்­திப்பை மேற்­கொள்­ளா­தது ஏன்?
பதில்:- ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு வரும் சந்­தர்ப்­பங்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் சந்­திப்­பு­களை மேற்­கொள்­வது வழ­மை­யா­னது. ஆனால் இவர்கள் எம்­முடன் சந்­திப்­பு­களை மேற்­கொள்­ள­வில்லை. காரணம் என்­ன­வென்­பதையும் தெரி­விக்­க­வில்லை.
கேள்வி:- கடந்த காலங்­களில் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்­சி­யாக அழுத்தம் கொடுத்­து­வந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இப்­போது ஏன் பின்­னிற்­கின்­றது?
பதில் :- நாம் பின்­னிற்க­வில்லை. தொடர்ந்தும் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கின்றோம்.
கேள்வி:- எனினும் கடந்த கால விரை­வுத்­தன்மை இப்­போது இல்­லா­மைக்கு அர­சாங்­கதின் மீதுள்ள நம்­பிக்­கையா காரணம்?
பதில்:- இல்லை, எமக்கு அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இல்லை. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் இலங்கை அர­சாங்­கத்தின் பூரண ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்ட ஒன்­றாகும். அந்த தீர்­மானம் வலு­வான ஒன்­றாக அமை­வ­தற்கு நாம் அங்­கி­ருந்து செயற்­பட்டோம். அதனால் தான் இலங்கை அர­சாங்­கமும் இணங்­க­வேண்­டிய சூழல் ஏற்­பட்­டது. அதன் பின்னர் தீர்­மா­னத்தை எவ்­வாறு நிறை­வேற்­று­வது என்­பது தொடர்பில் ஆராய ஜனா­தி­பதி தலை­மையில் இரு­த­ட­வைகள் சர்­வ­கட்சி கூட்டம் கூடி­யது. நாமும் அதில் கலந்­து­கொண்­டி­ருந்தோம். எனினும் எவ்­வாறு இந்த தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வது என்று கேட்டல் நாம் ஆலோ­ச­னை­களை முன்­வைப்போம். ஆனால் எதை தவிர்ப்­பது எதை நிறை­வேற்­று­வது என்ற கேள்­விகளுக்கு இட­மில்லை. இந்த தீர்­மானம் வேறு ஒரு நிறு­வ­னத்தின் தீர்­மானம் அல்ல. இது இலங்­கையில் சொந்தத் தீர்­மா­னமும் கூட. பாரா­ளு­மன்­றத்­திலும் எமது நிலைப்­பாட்டை தெளி­வாக கூறி­யி­ருந்தோம். சர்­வ­தேச நீதி­ப­திகள், விசா­ர­ணை­யாளர், வழக்­க­றிஞர் பங்­கு­பற்றும் விசா­ரணை என கூறப்­பட்­டுள்ள போதும் அது சர்­வ­தேச ஆலோ­ச­கர்­களை வைத்து செய்யும் ஒன்­றல்ல. உள்­ளக பொறி­மு­றை­யாக இருக்­கலாம். ஆனால் அவ்­வாறு உள்­ளக பொறி­மு­றை­யா­ளர்கள் தமக்­கான வேலையை சரி­யாக செய்ய வேண்டும். இதில் நாம் தெளி­வாக உள்ளோம்.
இலங்கை அர­சாங்கம் அடுத்த கூட்டத் தொடரில் தமது வாய்­மூல அறிக்­கையை சமர்­ப்பிக்க முன்னர் சில பொறி­மு­றை­களை கையாள்­கின்­றது. அதை நாம் அவ­தா­னித்து வரு­கின்றோம். சில விட­யங்­களில் எமது ஆலோ­ச­னை­களை வின­வி­யுள்­ளனர். அதேபோல் எமது நிலைப்­பாட்டை தெளி­வாக தெரி­வித்­துள்ளோம். வரும் இரு­மாத காலத்­தினுள் அர­சாங்கம் இந்த விட­யங்­களில் பல­மான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்டும். குறிப்­பாக காணா­மல்­போ­னோரை கண்­ட­றியும் பொறி­முறை, உண்­மை­களை கண்­ட­றியும் செயற்­பா­டுகள் விட­யத்தில் உறு­தி­யான நிலைப்­பாட்டை எட்ட வேண்டும். இந்த விட­யங்கள் தொடர்பில் அர­சாங்கம் பொறி­மு­றையை முன்­வைக்கும் போது அது நாம் ஏற்­று­கொள்ள கூடிய வகையில் உள்­ளதா இல்­லையா என்­பது தொடர்பில் எமது நிலை­ப்பாட்டை முன்­வைப்போம். இந்த விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் அனு­ச­ரணை அவ­சியம். அவர்­களின் பிர­தி­நி­திகள் நாம். ஆகவே நாம் அதை ஏற்­று­கொள்ள வேண்டும்.
கேள்வி:- அப்­ப­டி­யாயின் உள்­ளகப் பொறி­முறை தொடர்பில் அர­சாங்கம் உங்­களை ஆலோ­சித்து தீர்­மானம் எடுக்­கின்­றதா?
பதில்:- முற்­று­மு­ழு­தாக எம்­முடன் அவர்கள் ஆலோ­சிக்­க­வில்லை. ஒரு­சில முக்­கிய விட­யங்­களில் எம்­முடன் ஆலோ­சிக்­கின்­றனர். ஆனால் அவர்­கள் தமது பொறி­மு­றையை முன்­வைக்கும் போதும் நாம் எமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­துவோம்.
கேள்வி:- இறு­தி­யாக இடம்­பெற்ற மனித உரி­மை­கள் பேர­வையின் கூட்­டத்­திலும் அர­சாங்க பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டனர், உங்­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொள்­ள­வில்­லையே ஏன்?
பதில்:- மார்ச் மாதத்தில் இலங்கை தொடர்பில் எந்த விவ­கா­ரங்­களும் ஐக்­கிய நாடுகள் சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. கடந்த ஒக்­டோபர் முதலாம் திகதி தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட போதும் ஜூன் மாதத்தில் தான் இலங்கை தொடர்பில் வாய்­மூல அறிக்­கையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பூரண அறிக்­கையும் கொண்­டு­வ­ரப்­படும் என கூறப்­பட்­டுள்­ளது. அர­சாங்க தரப்பு கட்­டாயம் போக­வேண்டும். ஆகவே மார்ச் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டனர். ஆனால் எமக்கு அந்தத் தேவை இருக்­க­வில்லை.
கேள்வி:- நல்­லி­ணக்கம் என்ற பெயரில் அர­சாங்கம் மேற்­கொண்­டு­வரும் செயற்­பா­டுகள் சர்­வ­தேச அழுத்­தங்­களில் இருந்து தப்­பித்­துக்­கொள்ள சாத­க­மாக அமை­யுமே?
பதில்:- இல்லை, வடக்கில் காணிகள் விடு­விப்பு, மீள்­கு­டி­யேற்றம் போன்ற விட­யங்­களை காட்டி அர­சாங்­கத்­தினால் தப்­பித்­துக்­கொள்ள முடி­யாது.என்ன நடந்­தாலும் ஜூன் மாதத்­துக்கு முன்னர் அவர்கள் அறிக்கை முன்­வைத்தே ஆக­வேண்டும். அர­சாங்­கத்தின் பக்கம் முன்­னேற்­ற­மான சில விட­யங்கள் உள்­ளன. அவற்­றையும் நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். குறிப்­பாக புதிய அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்­கு­வது தொடர்பில் அர­சாங்கம் விரை­வாக நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. வழி­காட்டல் குழு­விலும், அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யிலும் இது­வ­ரையில் எடுத்­துள்ள தீர்­மா­னங்கள் அனைத்தும் ஏக­ம­ன­தான தீர்­மா­னங்­க­ளா­கவே அமைந்­துள்­ளன. அதேபோல் காணிகள் விடு­விப்பு, கைதிகள் விடு­விப்பு, காணா­மல்­போனோர் தொடர்பில் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களில் தாமதம் உள்­ளது. ஆனால் அதையும் தாண்டி பொறுப்­புக்­கூறல் என்ற விட­யத்தில் அர­சாங்கம் கவ­ன­மாக செயற்­பட வேண்டும். இந்த கார­ணங்­களை முன்­வைத்து தப்­பிக்க முடி­யாது.
கேள்வி:-வட­மா­காண சபையின் பிரே­ரணை மற்றும் வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ரனின் செயற்­பா­டுகள் தெற்கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது இன­வாத செய­லாக அமைந்­துள்­ளதா?
பதில்:- எமது அர­சியல் நிலை­ப்பாட்­டையே வட­மா­காண தீர்­மா­ன­மாக நிறை­வேற்­றி­யுள்­ளனர். இணைந்த வட­கி­ழக்கு முறை­யி­லான ஆட்­சி­முறை வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பு. அதைத்தான் வட­மா­காண சபையின் பிரே­ர­ணை­யிலும் நிறை­வேற்­றி­யுள்­ளனர். எனினும் தெற்கின் இன­வா­தி­க­ளுக்கு எம்மை எதிர்க்க ஏதேனும் ஒரு காரணம் தேவைப்­ப­டு­கின்­றது. ஆகவே எமது பிரே­ர­ணையை கார­ண­மாக வைத்­துக்­கொண்டு சமஷ்டி என்­பது நாட்டை பிரிப்­பது என்ற ஒரு பொய்­யான கருத்தை பரப்பி வரு­கின்­றனர். எனினும் இவர்­களின் செயற்­பா­டு­க­ளையே நாம் கரு­வி­யாக பயன்­ப­டுத்தி சமஷ்டி என்றால் என்ன என்­பதை சிங்­கள மக்­க­ளுக்கு விளங்­கப்­ப­டுத்த வேண்டும். நாங்கள் சமஷ்­டியை முன்­வைத்தால் அதை ஏற்­று­கொள்ளும் நிலையில் சிங்­கள மக்கள் இல்லை. ஆகவே அவர்­களே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் நாங்கள் அவர்­க­ளுக்கு கூறும் மறு­மொழி பல­த­ட­வை­களில் அவர்­களை சென்­ற­டை­கின்­றது. ஆகவே தெற்கின் இன­வா­திகள் இன­வாத புர­ளியை கிளப்­பி­யுள்­ளமை எமக்கு மிகவும் பிர­யோ­ச­ன­மான ஒன்று என நான் கரு­து­கின்றேன். இது எமக்கு நல்­ல­தொரு சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கண்­டிய தலை­வர்­களே முதலில் நாட்டில் சமஷ்­டியை கோரி­னார்கள். ஆகவே இது சிங்­கள மக்­க­ளுக்கு மாறாக அமைய வாய்ப்­பில்லை. தமிழ் பிர­தி­நி­திகள் அன்று சமஷ்டி கோரிய போதும் எமது மக்கள் ஏற்­றுக்­கொள்ளவில்லை. 1956ஆம் ஆண்டு தனி சிங்­கள கொள்கை கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் தான் தமிழ் மக்கள் சமஷ்­டியை விரும்­பி­னார்கள். இந்த உண்­மை­களை சிங்­கள மக்கள் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.
கேள்வி:- இன­வாத கருத்­துகள் ஒரு­புறம் இருக்­கட்டும், அர­சாங்­கத்தில் உள்ள பிர­தான இரண்டு கட்­சி­க­ளுமே வடக்கின் செயற்­பா­டு­களை எதிர்த்து நிற்­கின்­ற­னவே?
பதில்:- பிர­தான கட்­சிகள் எதிர்க்­க­வில்லை. ஏனெனில் பிர­தான கட்­சி­களின் இரண்டு தலை­வர்­களும் எமது கருத்தை எதிர்க்­க­வில்லை. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தொடர்ந்து அதி­கார கோரிக்கை நியாயம் என்ற வகையில் தான் கருத்­து­களை முன்­வைத்து வரு­கின்­றனர். அர­சி­ய­ல­மைப்பு சட்டம் ஒன்றும் அஞ்­சக்­கூ­டிய விடயம் இல்லை என தெரி­வித்­துள்­ளனர். ஆனால் அந்த கட்­சி­களை சேர்ந்த சிலர் முரண்­பட்டு தெரி­விப்­பது கருத்­தில்­கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை.அவர்கள் சிங்­கள மக்கள் மத்­தியில் வாக்­கு­களை பெறவும் தம்மை சிங்­க­ள­வர்கள் என காட்­டிக்­கொள்­ளவும் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றனர். எமது மத்­தி­யிலும் இவ்­வாறு நடக்­கின்­றது. எம்­முடன் இருக்கும் சிலர் கூட தமி­ழீழம் பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறி மக்கள் மத்­தியில் கதைக்­கின்­றனர். ஆனால் இவைகள் எல்லாம் சுய­ந­லம் மற்றும் அர­சியல் சூழ்ச்­சி மட்­டு­மே­யாகும். இவை வடக்­கிலும் உள்­ளன. தெற்­கிலும் உள்­ளன.
கேள்வி:- சமஷ்டி தீர்வு விட­யத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர் மீது நம்­பிக்கை வைத்­துள்ளோம் என்­பதா உங்­களின் கருத்து?
பதில் :- ஒருவர் மீதும் நம்­பிக்கை இல்லை, ஏற்­பட்­டுள்ள இந்த சந்­தர்ப்­பத்தின் மீது மட்­டுமே எமக்கு நம்­பிக்கை உள்­ளது. ஏனெனில் எமது நீண்­ட­கால பிரச்­சினை தீர்க்­கப்­பட வேண்டும் என்­பதில் ஜனா­தி­பதி ஆர்­வ­மாக உள்ளார். பிர­த­ம­ருக்கும் அந்த எண்ணம் உள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவும் ஆத­ரவு வழங்­கு­கின்றார். அவ­ரு­டைய காலத்தில் முன்­வைக்­கப்­பட்ட தீர்வில் ஒற்­றை­யாட்சி என்ற பதம் நீக்­கப்­பட்டு இருந்­தது. அது அப்­போது நிறை­வேற்றப் பட்­டி­ருந்தால் இன்று நாம் வித்­தி­யா­ச­மான அர­சியல் அமைப்பின் கீழ் இருந்­தி­ருப்போம். அடிப்­படையில் சமஷ்­டியை உள்­ள­டக்­கிய வகையில் இன்­றைக்கும் அவ்­வா­றான ஒரு தீர்வு வரு­மாக இருந்தால் அதை நாம் ஏற்­றுக்­கொள்வோம். சர்­வ­தேச அழுத்­தமும், ஆட்­சி­மாற்­றமும் எமக்கு நல்­ல­தொரு சந்­தர்­ப்பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அந்த சந்­தர்ப்­பத்தை நாம் சரி­யாக உப­யோ­கித்தால் எம்மால் நிச்­ச­ய­மாக எமது இலக்கை அடைய முடியும்.
கேள்வி:- சந்­தர்ப்பம் உள்­ளது, ஆனால் தமிழ் அர­சியல் தலை­மைகள் ஒற்­று­மை­யில்­லாத நிலையில் உள்­ளன. தனித்தனி அமைப்­புகள் உரு­வாக்கம் என்­பன இலக்கை அடை­வதில் தடை­யாக அமை­யுமே?
பதில்:- இது தான் ஜன­நா­யகம். அந்த ஜன­நா­யகம் உள்­ளதன் கார­ணத்­தினால் தான் தேர்­தலில் மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்ட நபர்­களும் முத­ல­மைச்­சரின் பெயரை வைத்து கூட்­டணி அமைப்­பதும், நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்­களும் கொழும்பில் கூட்­டணி அமைப்­பதும் என பல வேலை­களை செய்து பார்க்­கின்­றனர். இவர்கள் முயற்சி எடுக்­கலாம். ஆனால் மக்கள் விழிப்­புடன் உள்­ளனர். தமக்­கான சரி­யான இலக்கை எந்த தலை­மைத்­துவம் கொண்டு செல்­கின்­றது என்­பது அவர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். வடக்கு, கிழக்கு மக்கள் எம்­முடன் உள்­ளனர். நாம் தேசிய ரீதியில் செயற்­பட்டு இலக்கை நோக்கி பய­ணிக்­கின்றோம் என மக்கள் கூறு­கின்­றனர். ஆகவே இந்த அணி­களை கண்டு நாம் அஞ்­ச­வில்லை. எமக்கு மக்கள் கொடுத்­துள்ள ஆணை­களை சரி­யாக நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எமது கூட்­ட­மைப்பின் மீதுள்ள மக்­களின் நம்­பிக்­கையும் பிழைக்­காது.
கேள்வி:-வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இடையில் இப்­போதும் முரண்­ப­டுகள் தொடர்­கின்­றதா?
பதில்:- இப்­போது முரண்­பா­டுகள் தொட­ர­வில்லை. எதிர்க்­கட்சி தலை­வரும், வட­மா­காண முத­மைச்­சரும் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். அதற்­குப்­பி­றகு ஒரு சுமுக நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என நம்­பு­கின்றேன்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் இரு வேறு­பட்ட கருத்­துகள் நிலவும் நிலையில் கூட்­ட­மைப்பை பலப்­ப­டுத்த முடி­யுமா ?
பதில்:- முரண்­பட்ட கொள்கை இல்லை. தாங்கள் தான் வீரர்கள் என கூறும் நபர்கள் எல்லா கட்­சி­க­ளிலும் உள்­ளனர். மக்கள் மத்­தியில் தம்மை வேறு­ப­டுத்த இந்த நிலைமை உள்­ளது. நிரா­க­ரிக்­கப்­பட்ட இந்த நபர்­களின் செயற்­பா­டு­களை மக்கள் கவ­னத்தில் கொள்ள மாட்­டார்கள். அது கட்­சி­யையும் பல­வீ­னப்­ப­டுத்­தாது.
கேள்வி:- வடக்கில் தொடர்ச்­சி­யாக முன்னாள் போரா­ளிகள் கைது­செய்­யப்­பட்டு வரு­கின்­றனர். எது தொடர்பில் உங்­களின் செயற்­பா­டுகள் எவ்­வா­றாக அமைந்­துள்­ளன?
பதில்:- இதில் கைது­செய்­யப்­ப­டு­கின்ற அநே­க­மா­ன­வர்கள் இரா­ணுவப் புல­னாய்வு பிரி­வுடன் வேலை­செய்­த­வர்கள். இது எல்­ேலா­ருக்கும் தெரியும். எனினும் இந்த கைது­களின் பின்­னணி எமக்கு தெரி­ய­வில்லை. முன்னர் இரா­ணு­வத்­துடன் நெருங்கி வேலை­செய்த இவர்­களை இப்­போது ஏன் கைது­செய்­கின்­றனர் என புரி­ய­வில்லை. எனினும் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வரும் ஒரு நட­வ­டிக்­கை­யா­கக்­கூட இது அமை­யலாம். எனினும் பொது­வாக இது மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அது தொடர்பில் நாம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளோம். எனினும் விசா­ர­ணைகள் நடை­பெறும் நிலையில் இந்த விவ­கா­ரங்­களை அர­சாங்கம் வெளி­யி­டாமல் இருக்­கலாம். எனினும் மக்கள் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை.
கேள்வி:- சம்பூர் விவ­காரம் தொடர்பில் என்ன புதிய நகர்­வுகளை மேற்கொண்டு வருகிறீர்கள்?
பதில்:- சம்பூர் பிரச்­சினை மிகவும் முக்­கி­ய­மான விட­ய­மாகும். ஆரம்­பத்தில் இருந்தே நாம் சம்பூர் விவ­கா­ரத்தில் மக்கள் பக்கம் செயற்­பட்டு வரு­கின்றோம். அப்­ப­கு­தி­யிகுள் மக்கள் வெளி­யேற்­ற­பட்ட போதே நாம் அவர்­களை மீளவும் குடி­ய­மர்த்தும் வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்ள ஆரம்­பித்­து­விட்டோம். அதற்­க­மைய அனல்மின் நிலையம் தவிர்ந்த ஏனைய பகு­தி­களின் மக்­களை குடி­ய­மர்த்த முன்­னைய அர­சாங்­கமும் இணக்கம் தெரி­வித்­தது. அனல்மின் நிலையம் தொடர்பில் இது­வ­ரையில் நாம் வாய் திறக்­காது இருக்க ஒரு காரணம் உண்டு. நாம் அப்­போது அனல்மின் நிலையம் தொடர்பில் கதைத்­தி­ருந்தால் இன்­று­வ­ரையில் எமது மக்கள் அந்த பகு­தி­க­ளுக்கு திரும்­பிச்­சென்­றி­ருக்க முடி­யாது. மக்கள் மீள்­கு­டி­யேற வேண்டும் அவர்­களின் சொந்த நிலங்­க­ளுக்கு போக­வேண்டும் என்பதே எமது பிர­தான நோக்­கமாக இருந்­தது. ஆனால் இன்று வாய் திறக்கும் எவரும் அன்று மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் வாய்­தி­றக்­க­வில்லை. மக்கள் முழு­மை­யாக அங்கு குடி­ய­மர நாம் மட்­டுமே கார­ணம். வழக்கில் கூட நாம் கஷ்­டப்­பட்டே வெற்­றி­பெற்றோம். அந்த கடின முயற்சி இன்று நிறை­வே­றி­யுள்­ளது. இப்­போது எழும் பிரச்­சினை என்­ன­வென்றால் அனல்மின் நிலையம் அமைத்தால் மக்­க­ளுக்கு என்ன கதி­யென கேட்­கின்­றனர். இதை அப்­போது எம்மால் கேட்­டி­ருக்க முடியும். ஆனால் அது மக்­களின் நிலங்­களை அப­க­ரிக்கும் செய­லாக அமைந்­து­விடும். இப்­போது மக்கள் குடி­யே­றி­யுள்­ளனர். எனவே இப்­போது அர­சாங்கம் அந்த பகு­தியில் அனல்மின் நிலையம் அமைப்­பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். மக்­களை வெளி­யேற்ற முடி­யாது. இந்த வேலைத்­திட்டம் மக்­க­ளுக்கு சிக்கல் இல்­லை­யென்றால் விஞ்­ஞான முறைப்­படி ஆராய்ந்து உறு­திப்­ப­டுத்த முடி­யு­மானால் அதை ஏற்­றுக்­கொள்ள முடியும். அவ்­வாறு இல்­லாது மக்­களை பாதிக்கும் வகையில் அமை­யு­மாயின் அதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இந்த விடயம் தொடர்பில் நாம் அர­சாங்­கத்­து­டனும் இந்­திய அர­சு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். ஆராய்ந்து தீர்­மானம் எடுக்க முடியும்.
கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் எந்­த­ளவில் மக்­களின் பிரச்­சி­னைகளை தீர்க்கும் என கரு­து­கின்­றீர்கள்?
பதில்:- புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வது அர­சாங்­கத்­துக்கே மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மா­னது. கடந்த மனித உரி­மைகள் பேர­வையில் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்­துக்கு ஒரு காரணத்தை மட்­டுமே அர­சாங்கம் தெரி­வித்­தி­ருந்­தது. அதா­வது தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகளைத் தீர்க்­கவே அர­சியல் அமைப்பு உருவாக்கம் என தெரிவித்தனர். ஆகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு தரும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு அமையும் என நம்புகின்றோம். மக்களின் பிரச்சினைகள் தீரும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உள்ளதா என நாம் கூறும் கருத்திலேயே இதற்கான தீர்வும் கிடைக்கும். வரைபு வரும் நிலையில் அதில் தீர்வு திட்டம் கூறப்பட்டிருக்குமாயின் அதை நாம் ஆதரிப்போம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாறாக மக்களின் ஆலோசனைக்கு அதை வைப்போம். மக்களின் பூரண ஒத்துழைப்பின் பெயரிலும் ஆலோசனையின் மூலமுமே நாம் இணக்கம் தெரிவிப்போம்.
கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மஹிந்த அணியினர் போட்டிபோட்டுக்கொண்டு உள்ளனர். சிக்கல் வரும் நிலையில் விட்டுக்கொடுப்பீர்களா?
பதில்:- பாராளுமன்ற சம்பிரதாயத்தின் படி நாங்கள் தான் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளோம். எதிர்க்கட்சி எமக்கு வேண்டும் என நாம் வற்புறுத்தவும் இல்லை, எவரும் விரும்பி எமக்குக் கொடுக்கவும் இல்லை. பாராளுமன்ற விதிமுறைக்கு அமைய எமக்கே அது வரவேண்டும். அவ்வாறு இருக்கையில் ஆளும் தரப்பில் இருந்து ஒருசிலர் தனித்து செயற்பட விரும்புவதால் அவர்களுக்கு நாம் விட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் தனித்த கட்சியாக உருவாக்கி பாராளுமன்றம் அங்கீகரிக்கும் வரையில் விதிமுறைகளின் படி நிலைமை மாறும் வரையில் எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொண்டுக்க நாம் தயாரில்லை.

http://epaper.virakesari.lk:8080/shareContent/share?objectid=286441&objecttype=2