sampanthanநாடு எதிர்­கொண்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து விடு­பட வேண்­டு­மாயின் விரைவில் அர­சியல் தீர்வை முன்­வைப்­பதைத் தவிர

மாற்று வழி­யில்லை. இன்­றைய அரசு இதனை உணர்ந்து செயல்­ப­டு­வ­தா­கவே நாம் உண­ரு­கின்றோம் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

அர­சியல் தீர்­வொன்றை நோக்கி நாங்கள் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். இந்த நல்ல

தொரு சூழ்­நி­லையில் புலம்­பெ­யர்ந்­த­வர்கள் வருகை தந்து பாரிய

முத­லீ­டு­களைச் செய்து எமது இளை­ஞர்­க­ளுக்கும் யுவ­தி­க­ளுக்கும் வேலை­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

நியா­ய­மான அதி­காரப் பகிர்வு கொண்டு வரப்­பட்டால் அதுவும் நாங்கள் எதிர்­பார்க்கும் வண்ணம் ஏற்­பட்டால் சட்டம், ஒழுங்கு, பாது­காப்பு, கல்வி, விவ­சாயம் என பல விட­யங்கள் எமது கைக­ளுக்கு வந்து சேரும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அவுஸ்­தி­ரே­லியா திரு­கோ­ண­ம­லைச்­சங்கம் மற்றும் அவுஸ்­தி­ரே­லியா மருத்­துவர் உதவி அமைப்பு, சிட்னி சைவ மன்றம் (முருகன் ஆலயம்) ஆகி­ய­வற்றின் 4.5 மில்­லியன் ரூபா நிதி­யு­த­வி­யுடன் பாதிக்­கப்­பட்ட கிரா­ம­மான தென்ன மர­வடி கிரா­மத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட சமூக நிலைய கைய­ளிப்பு வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை எட்டும் ஆண்­டாக இவ்­வ­ரு­டத்தை நாம் எதிர்­பார்க்­கின்றோம். எங்கள் மக்­களின் வாழ்­வா­தா­ரத்தில் மறு­ம­லர்ச்சி காணப்­பட வேண்­டு­மாயின் புலம்­பெயர் சமூகம் பாரிய முத­லீ­டு­களை மேற்­கொள்ள தாய் நாடு திரும்ப வேண்டும் அவர்­க­ளுக்கு பகி­ரங்க அழைப்­பொன்றை யான் விடுக்­கின்றேன். இந்த வாய்ப்­பான சந்­தர்ப்­பத்தை புலம்­பெயர் சமூகம் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டு­மென்­பது எம் எதிர்­பார்ப்­பாகும்.

நாட்டில் காணப்­படும் பிரச்­சி­னை­க­ளான பொரு­ளா­தாரப் பிரச்­சினை, மீள் குடி­யேற்றம் காணிப் பிரச்­சினை, வீட்டு வசதி, தொழில்­வாய்ப்பு என்ற எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் காரணம் அதி­காரம் என்­பது மத்­தியில் குவிந்­தி­ருந்­துப்­ப­துதான். அர­சியல் தீர்­வொன்று வழங்­கப்­பட்டு அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும். அவ்­வ­தி­கா­ரங்கள், பிராந்­தி­யங்­க­ளுக்கு மாகா­ணங்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு பகிர்ந்­த­ளிக்கும் பட்­சத்தில் தான் மக்கள் இறை­மையின் அடிப்­ப­டையில் தாங்கள் தெரிவு செய்யும் பிர­தி­நிதி ஊடாக இறை­மை­யினைப் பயன்­ப­டுத்தி தமது பிரச்­சி­னை­க­ளுக்கு பரி­காரம் காண முடியும்.

இதற்­கா­கவே தற்­பொ­ழுது புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கு­வ­தற்கு சில ஒழுங்­குகள் மேற்­கொள்­ளப்­பட்டு பாரா­ளு­மன்றம் ஓர் அர­சியல் சாசனப் பேர­வை­யாக மாறி­யி­ருக்­கி­றது. அது தற்­பொ­ழுது செயற்­பட்டு வரு­கின்­றது. நாட்­டுக்­கா­கவும் நாட்டில் வாழும் அனைத்து மக்­க­ளுக்­கா­கவும் தமிழ்ப் பேசும் மக்­களின் தேசியப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கா­கவும் ஒரு அர­சியல் தீர்வு அவ­சியம் என்­பதை நாம் அத்­தி­யா­வ­சி­ய­மாகக் கரு­து­கிறோம். இக்­க­ருத்­தா­னது நாட்டில் உண்டு. சர்­வ­தே­சத்தில் காணப்­ப­டு­கி­றது. எல்­லா­வற்­றுக்கும் மேலாக மக்கள் மத்­தியில் அவ­சி­ய­மென உண­ரப்­பட்­டிக்­கி­றது. அர­சியல் தீர்­வென்­பது அவ­சி­ய­மா­னது. அதைக் குழப்ப யாரும் முயற்சி செய்­யக்­கூ­டாது. அர­சியல் தீர்வு விட­யத்தில் முன்­னேற்றம் இல்­லை­யென்று கருத முடி­யாது முன்­னேற்றம் காணப்­ப­டு­கி­றது.

நாங்கள் மேற்­கொண்­டு­வரும் முயற்­சி­களை குழப்­பு­வதன் ஊடாக அர­சியல் தீர்­வுக்­காண வாய்ப்பை இல்­லாமல் ஆக்­கக்­கூ­டாது. இவ்­வ­ரு­டத்­துக்குள் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டு­மென நாம் எதிர்­பார்க்­கின்றோம். . இவ்­வாய்ப்பை முழு­மை­யாகப் பயன்­ப­டுத்த வேண்டும். இதை எமது மக்கள் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். நிதா­ன­மா­கவும், பக்­கு­வ­மா­கவும் நடந்து கொள்ள வேண்டும். மக்­களை குழப்­பி­வி­டு­வ­தற்கு பல்­வேறு முயற்­சி­களை, பல்­வேறு கொள்­கை­வா­திகள் பல்­வேறு கைங்­க­ரி­யங்­களில் ஈடு­ப­டு­வார்கள். மக்­களைக் குழப்பி வர­வி­ருக்கும் அர­சியல் தீர்வை தடுப்­ப­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டலாம். உண்­மையும். யதார்த்­த­தைத்­தையும் எம்­மவர் கூட புரிந்து கொள்­ளாமல் தங்கள் சுய­லா­பத்­துக்­காக தேவை­க­ளுக்­காக அர­சியல் லாபங்­க­ளுக்­காக சில கரு­மங்­களில் சிலர் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள்.

இவ்­வ­கை­யான போக்­குகள் அர­சியல் தீர்வு விட­யத்தில் குழப்­ப­மான நிலை­மை­களைக் கொண்டு வரலாம். ஆகையால் எமது மக்கள் பொறு­மை­யாக இருந்து எல்லாக் காரி­யங்­க­ளிலும் வெற்­றி­பெற வேண்டும். எதையும் விட்­டுக்­கொ­டுங்கள் என்று யான் கூற­வில்லை. எதையும் இழக்க வேண்­டு­மென்று நான் சொல்ல விரும்­ப­வில்லை. எமது இலட்­சி­யங்­களை வலி­யு­றுத்­து­கின்ற அதே­வே­ளையில் அர­சியல் தீர்வை நோக்­கிய பய­ணத்­துக்­காக நாம் எல்­லோரும் பாடு­பட வேண்டும். அர­சியல் தீர்வை வழங்­கு­வ­தற்­கான அடிப்­ப­டை­யில்தான் அரசு தற்­பொ­ழுது செயற்­பட்டு வரு­கின்­றது.

ஏனெனில் அர­சியல் தீர்வு என்­பது தமிழ் மக்­க­ளுக்கு மாத்­திரம் தேவை­யா­ன­தல்ல. இந்­நாட்­டுக்குத் தேவை­யா­னது. இலங்கை இன்­றைய நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­கப்­பட வேண்­டு­மாயின் கடன் சுமை­யி­லி­ருந்து பாது­காக்­கப்­பட வேண்­டு­மாயின் இந்த நாட்­டுக்கு வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் வர வேண்­டு­மாயின் விரைவில் அர­சியல் தீர்வு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சியம் உள்­ளது. அர­சியல் தீர்வு ஏற்­ப­டாமல் இவ்­வி­த­மான அபி­வி­ருத்­தி­க­ளுக்கு இட­மில்லை. ஆகையால் அர­சியல் தீர்­வென்­பது தமிழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல, தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல. இந்­நாட்­டி­லுள்ள சகல மக்­க­ளுக்கும் நாட்­டுக்கும் அவ­சி­ய­மா­ன­தாகும்.

இதை உணர்ந்து நாட்­டுக்­கா­கவும் நாட்டில் வாழும் சகல இனங்­க­ளுக்­கா­கவும் குறிப்­பாக தமிழ் மக்­க­ளுக்­கா­கவும் தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்­கா­கவும் அர­சியல் தீர்­வைக்­காண முயற்­சிக்க வேண்டும்.

வட கிழக்கில் பாரிய அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ள அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது. யுத்­தத்தால் அழிந்த வட கிழக்கை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மென்று பாரிய பொரு­ளா­தார திட்­டங்­களை வகுப்­ப­தற்கு சர்­வ­தேச சமூ­கமும் உலக நாடு­களும் விரும்­பு­கின்­றன. இன்­றைய இலங்கை அர­சாங்­கமும் அதற்கு அனு­ச­ரணை வழங்க தயா­ராக இருக்­கின்­றது. . திரு­கோ­ண­ம­லையில் பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்­களைக் கொண்­டு­வர வேண்­டு­மென்ற நோக்கின் அடிப்­ப­டையில் சிங்­கப்பூர் நாட்டின் நிபு­ணர்கள் திட்­டங்­களை வகுத்து வரு­கின்­றார்கள். இவ்­வ­ருடம் முடி­வ­தற்கு முன் மேற்­படி திட்­டங்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டலாம்.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் தென்ன மர­வடிக் கிரா­மத்தைச் சேர்ந்­த­வர்­களால் உத­வப்­பட்டு இந்த மக்கள் மண்­டபம் அமைக்­கப்­பட்­டிக்­கின்­றது. இதே­போன்று கன­டா­வி­லுள்ள அன்­பர்­களின் உத­வியும் எமக்கு கிடைக்கப் பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. சம்­பூரில் பல வீடு­களை நிர்­மா­ணித்து தந்­துள்­ளார்கள். தொடர்ந்தும் உதவி வரு­கின்­றார்கள்.

இதே­போன்றே எமது புலம்­பெ­யர்ந்த மக்கள் இவ்­வகை அபி­வி­ருத்­தி­க­ளுக்கு உதவ வேண்டும். பங்­கா­ளி­க­ளாக மாற வேண்டும். புலம்­பெ­யர்ந்த எம்­ம­வர்­க­ளுக்கு பகி­ரங்­க­மான அழைப்­பொன்றை விடுக்க விரும்­பு­கின்றேன். அர­சியல் தீர்­வொன்றை நோக்கி நாங்கள் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். இந்த நல்ல தொரு சூழ்­நி­லையில் புலம்­பெ­யர்ந்­த­வர்கள் வருகை தந்து பாரிய முத­லீ­டு­களைச் செய்து எமது இளை­ஞர்­க­ளுக்கும் யுவ­தி­க­ளுக்கும் வேலை­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும்.

இது அவர்­க­ளது தார்­மீ­க­மான கட­மை­யெனக் கரு­து­கிறேன். புலம்­பெ­யர்ந்த சமூகம் அனைத்தும் இவ்­வி­ட­யத்தில் அக்­கறை காட்ட வேண்டும். நியா­ய­மான அதி­காரப் பகிர்வு கொண்டு வரப்­பட்டால் அதுவும் நாங்கள் எதிர்­பார்க்கும் வண்ணம் ஏற்­பட்டால் சட்டம், ஒழுங்கு, பாது­காப்பு, கல்வி, விவ­சாயம் என பல விட­யங்கள் எமது கைக­ளுக்கு வந்து சேரும். ஆனால் மத்­தியில் இருக்க வேண்­டி­யவை மத்­தி­யி­லி­ருந்த பிராந்­திய, மாகா­ணங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட வேண்­டிய அதி­கா­ரங்கள் உரிய முறையில் ஒதுக்­கப்­பட வேண்டும். அவ்­வி­த­மான ஒரு தீர்வைத் தான் நாம் எதிர்­பார்க்­கின்றோம். அவ்­வி­த­மான ஓர் தீர்வு வரு­கின்­ற­போது மாகாண, பிராந்­திய ஆட்­சிக்கு வலு உண்­டாகும். அவை எம்­கையில் இருக்கும். அதை நாம் அடைய வேண்டும்.

தற்­பொ­ழு­துள்ள அர­சாங்கம் நியா­ய­மாக செயற்­பட்டு வரு­கின்ற கார­ணத்­தினால் எமது குறி­கோள்­களை அடை­யக்­கூ­டிய வாய்ப்பு எமக்கு வந்­தி­ருக்­கி­றது. இச்­சந்­தர்ப்பம் தொடர்ந்தும் இருக்­கு­மென நாம் கரு­தி­வி­டக்­கூ­டாது. சந்­தர்ப்பம் இருக்­கும்­வ­ரையில் அதை நாம் முழு­மை­யாக பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். எவ­ருக்கு மாறா­கவும் நாம் செயற்ட விரும்­ப­வில்லை. பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்லர். முஸ்லிம் மக்­க­ளுக்கு மாறா­ன­வர்கள் அல்லர். முஸ்லிம் மக்­க­ளுக்கோ சிங்­கள மக்­க­ளுக்கோ எவ்வித தீங்கையும் இழைக்க நாம் விரும்பவில்லை. முயற்சிக்கவுமில்லை. ஆனால் பல நூற்றாண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக இந்நாட்டில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக சுயமரியாதையுடன் இந்நாட்டில் வாழ்வதற்கு எமக்கு உரிமையுண்டு. என்பதைத்தான் நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம். அந்த உரிமையை நாம் பெற வேண்டும்.

எங்கள் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உண்டு என்பதையும் நான் அறிவேன், தென்ன மரவடியில் காணப்படும் காணிப் பிரச்சினை போல் கங்குவேலி படுகாட்டில் காணப்படுகிறது. படுகாட்டுப் பிரச்சினை அண்மையில் தீர்க்கப்பட்டுள்ளது. தென்னமரவடி மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும். இதுவும் விரைவில் தீர்க்கப்படுமென்று நினைக்கின்றேன். எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலா முக்கியமாக இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு எங்கள் கையில் அதிகாரங்கள் வந்து சேர வேண்டும். அரசியல் சாசன மாற்றங்களின் ஊடாக அதுவர வேண்டும்.

http://epaper.virakesari.lk:8080/home/indexeditionId=13&editionDate=09/05/2016