எமது விடு­தலைப் போராட்டம் மிக
விரைவில் கௌர­வ­மான நிலையை எட்­டு­மென நினைக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக்கூட்­ட­மைப்பின் தலை­
வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.
சர்­வ­தேச ஊடக தினத்­தினை முன்­
னிட்டு, ஈழத்தில் படு­கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் நினைவு
தினம் நேற்று திங்­கட்­கி­ழமை யாழ். பொது­நூ­லக கேட்போர்
கூடத்தில் நடை­பெற்­றது.
இந்த நிகழ்வில், பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,
2005ஆம் ஆண்­டுக்கும் 2015ஆம் ஆண்­டுக்கும் இடையில் ஜன­நா­யகம் கேள்­விக்­கு­றி­யாக இருந்­தது. அதனை எவரும் மறுக்க முடி­யாது. தேர்­தல்கள் நடந்­து­விட்டால், ஜன­நா­யகம் மலர்ந்து விட்­டது என எவரும் கருத முடி­யாது. தேர்­தல்கள் நடை­பெ­று­வது, ஜன­நா­ய­கத்தின் ஒரு அங்கம். ஆனால், அது முடி­வல்ல.
குறிப்­பிட்ட காலத்தில் நடை­பெற்ற படு­கொ­லைகள் கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கின்­றன. தமது கட­மை­யினை சுதந்­தி­ர­மாக செய்த கார­ணத்தின் நிமித்தம் 13 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள்.
ஜன­நா­யகம் இந்த நாட்டில் பாது­காக்­கப்­பட வேண்டும். இந்த நாட்டில் ஜன­நா­யகம் பாது­காக்­கப்­பட வேண்­டு­மாயின், பத்­தி­ரிகை சுதந்­திரம் நிலவ வேண்டும்.
பத்­தி­ரிகை சுதந்­திரம் அத்­தி­ய­ாவ­சியம். உரிமைப் போராட்­டத்தில் உயி­ரி­ழந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பங்­க­ளிப்பு பாரிய பங்­க­ளிப்­பாக இருந்­துள்­ளது. அவற்­றினை அழிக்க முடி­யாது. எனவே, எமது விடு­தலைப் போராட்டம் விரைவில் கௌர­வ­மான நிலைக்கு வரும் என நினைக்­கின்றோம். அவற்­றினை நம்­பு­கின்றோம். அவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டு­கின்ற பொழுது, உயி­ரி­ழந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் அனை­வரும் கௌர­விக்­கப்­பட வேண்டும்.
உயி­ரி­ழந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பங்­க­ளிப்­பினை மறந்­து­விட முடி­யாது. அவ்­வி­த­மான சூழலில், அவர்­க­ளுக்­கு­ரிய கௌர­வத்­தி­னையும், மரி­யா­தை­யி­னையும், செலுத்த வேண்­டி­யது எம் எல்­லோ­ரி­னதும் கடமை.
இந்த நிகழ்­வினை நடாத்தும் இந்த கட்­டி­டமும் ஒரு சரித்­திரம் மிக்க கட்­டிடம். ஆசி­யா­வி­லேயே சிறந்த நூல­க­மாக விளங்­கிய ஒரு நூலகம். இது அழிக்கப்பட்டது வன்முறையின் உச்சக்கட்டம். இவைகள் அனைத்திற்கும் மத்தியில் எமது மக்கள் சலிக்காமல் உறுதியுடன் தமது உரிமைப் போராட்டத்தினை தொடர்ந்து வந்துள்ளார்கள். அதற்கு ஏற்றவாறு பலன் கிடைக்கும் என்றார்.