TNA-Sampanthan-Sumanthiran(18/04/2016) தினக்குரல் தலைப்புச் செய்தியாக ‘2016 தீர்வு எனது கணிப்பு மட்டுமே – சம்பந்தன் திடீர் குத்துக் கரணம்? என்று பிரசுரிக்கப்பட்டிருப்பது உண்மைக்கு மாறானதாகவும், வேண்டுமென்றே விஷமத்தனமானதாகவும் செய்யப்பட்ட பிரசுரிப்பு என்பதை தங்களுக்கு மிகுந்த கவலையுடன் தெரிவிக்க விரும்புகின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ம. ஆ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கோப்பாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் விசுவாசமாக எல்லோரும்  செயற்பட்டால் இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்பதே என்னுடைய கணிப்பு என்றுதான் கூறியிருந்தாரெனவும் அப்படியிருக்க, தனது இந்த கணிப்பு சம்பந்தமாக அவர் குத்துக் கரணம் அடித்தார் என்று தலைப்பிலும், பின் மீண்டும் ஒருமுறையும் சொல்லப்பட்டிருப்பது மிகவும் தவறான தகவலானது, வேண்டுமென்றே விஷமத்தனமாக செய்யப்பட்ட பிரசுரம் என்றே நாம் கருதக் கூடியதாக உள்ளது என்றும் சுமந்திரன் எம். பி. நேற்று குறிப்பிட்டுள்ளார்

செய்தி பிரசுரத்திலே அதை எழுதிய செய்தியாளருடைய எண்ணக் கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் கூடுதல்  இடமளித்திருப்பதை நாம் காணத்தவறமுடியாமல் உள்ளது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

http://epaper.thinakkural.lk/thinakkural/ page 2.