முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் ஒழுங்கமைப்பில் நேற்று பிற்பகல் 1 மணியில் இருந்து 3 மணி வரைக்கும் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் முல்லைத்தீவு மாவட்ட மக்களை மாங்குளத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

பூர்விக நிலங்கள் இராணுவத்தால் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பது தொடர்பாகவும், பொதுமக்களின் பிரச்சினைகளிள் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பாகவும், அத்துமீறிய மீன்பிடித்தல் தொடர்பாகவும், மற்றும் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்கள் அவரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
முக்கியமாக கேப்பாப்புலவு இராணுவ முகாம் அகற்றப்பட்டு அங்கு பொதுமக்கள் குடியேற்றப்படுவார்கள், மற்றும் கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் உடனடியாக தீர்க்கப்படும்.

மக்களின் பிரச்சினைகளில் இராணுவத்தினரின் தலையீடு தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் நீங்கள் பிரச்சினைகளுக்கு அமைதியாக முகம் கொடுங்கள் என்னுடைய காலம் முடிவதற்குள் மக்களின் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும்.

தொடர்ந்து இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நான் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா அவர்களுடன் தொடர்பு கொண்டு செயற்படுவேன் என்று உணர்வுபூர்வமாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.

கேப்பாப்பிலவு காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை!