தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அமையாத தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இடமளிக்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் சூளுரைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டுக்கு தற்போது புதிய அரசியல் அமைப்பொன்று தேவையாக உள்ளது. அரசியல் அமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ள நாடாளுமன்றத்தினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பு வரைபானது தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் முன்வைக்கப்படும்.

அவ்வாறு கையளிக்கப்படும் அரசியல் அமைப்பின் அனைத்து உப பிரிவுகள் குறித்தும் தமிழ் மக்களை தெளிவூட்ட கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும்.

அது மாத்திரமன்றி தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யாத, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்காத எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இடமளிக்காது.

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு அரசியல் யாப்பு வரைபுக்கும் ஆதரவாக கூட்டமைப்பு ஒருபோதும் நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களிக்க மாட்டாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

<iframe width=”668″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Pn7PCLbPCyI?list=PLXDiYKtPlR7O_Grfj33ie7ln7uvPnQyKN%3Frel%3D0″ frameborder=”0″ allowfullscreen></iframe>

http://www.tamilwin.com/politics/01/101552