showImageInStoryயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் ப்ர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை மதிப்பீடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், விசாரணைகள் நம்பகமான முறையில் நடத்தப்பட வேண்ட் என்பதே ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதான நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படுவதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130308/language/ta-IN/article.aspx