தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொங்கல் விழா நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த பொங்கல் விழா, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் பட்டிப்பளை பொது விளையாட்டு மைதானத்தில்  நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது, வரவேற்பு நடனம், அதிதிகள் உரை, கிராமிய நடனம், பட்டிமன்றம், வசந்தன் கூத்து போன்ற பல கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

பொங்கல் விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் ரீ.சரவணபவன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ப.அரியநேத்திரன் உட்பட தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Source : http://athavannews.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a/