தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கவே கடந்த காலங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன, அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷவிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தை பாதிக்காமல் செயற்பட கூடிய ஒருவரை தெரிவு தெரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தற்போது புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டுக்குள் அதியுயர் அதிகார பகிர்வை தருவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார் என கூறினார்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்களின் வாக்குகளினால் மட்டும் வெல்வேன் என கூறிவருவதனால், அவரது இந்த நிலைப்பாடு தமிழ் மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு தீர்வைத் தராது என்றும் கூறினார்.

எனவே எமது பிச்சினைகளை சுதந்திரமாக பேச வல்ல சஜித் பிரேமதாசவுக்கு 95 விகிதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Source: http://athavannews.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a/