தற்போதைய சூழ்நிலையில் தமிழினம் மீளெழுவதற்கு ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டியது அவசியமென நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் மற்றும் நீதியை மதிக்காத இந்த அரசு, எமது தமிழினத்தின் விடிவுக்காக எதனை செய்யப்போகின்றதென்பது தெரியவில்லையென சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா  கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்க்கையை, முன்னேற்றப் பாதையின் கீழ் கொண்டு செல்வதற்கு, ஏதேனும் நடவடிக்கையை எடுக்குமா என்பதும் சந்தேகமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால் தமிழினம் மீளெழுவதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வலியுறுத்தியுள்ளார்.

source :http://athavannews.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b1/h