ஆட்சி மாற்றத்தின்  ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் பூர்த்தி செய்யப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் நடைபெற்றது.

இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “ஆட்சி மாற்றத்தின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல விடயங்கள் கிடைக்கவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை

ஆனால் எவையும் இடம்பெறவில்லையெனக் கூற முடியாது. காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களில் முழுமையாக இல்லாதுவிட்டாலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று அரசியலமைப்பு விடயத்திலும் ஒரு யாப்பு வரையப்பட்டு இறுதிக் கட்டத்தைத் எட்டிய நிலையில் உள்ளது.” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: http://athavannews.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d/