முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பிரதிநிதிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொருவர்.

நாம் முஸ்லிம் மக்களோடு தொடர்ந்தும் தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Source: https://www.ibctamil.com/srilanka/80/121331