தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

இதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்ய ஒப்புக்கொள்ள மாட்டேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அத்தோடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் கூறிருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, மக்கள் விடுதலை முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளது.

Source: http://athavannews.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf-2/