தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் கூறியுள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பின்போது சிவராத்திரி வாழ்த்துக்களைஅமெரிக்கத் தூதுவர், இரா சம்பந்தனுக்குத் தெரிவித்தார் என்றும், இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா தன்னாலான முழுமையான ஆதரவையும் வழங்கும் என்றும் அந்த நாட்டின் தூதுவர் அலெய்னா ரெட்லிட்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் பூர்த்தியடையவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன என அமெரிக்கத் தூதுவர் தமது கீச்சகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆயினும், தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பிலேயே இந்தச் சந்திப்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டதாகக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய அரசமைப்பு முயற்சி வெற்றியளிக்க அமெரிக்கா தன்னாலான முழுப் பங்களிப்பையும் வழங்கும் என அமெரிக்கத் தூதுவர் சம்பந்தனிடம் எடுத்துரைத்துள்ளார்.

இந்த அரசமைப்புப் பணிகள் இழுத்தடிக்கப்படாமல் ஓரிரு மாதங்களுக்குள் பூர்த்தியாக்கப்படவேண்டும் என்றும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார். இந்த அரசமைப்பு முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், தடைகள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தூதுவருக்கு விளக்கிக்கூறினார். அத்துடன், ஜெனீவாவில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள காலநீடிப்பு தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டது.

Source: https://www.tamilcnn.lk/archives/827544.html