ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையையும் இணைத்து  தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கை விடயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் எழுத்துமூல அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில்  பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும். இதில் இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்க வேண்டும். அதனூடாகவே சர்வதேசத்தின் கண்காணிப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வரவு- செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதை குறிப்பிட்டார்.

Source:http://www.virakesari.lk/article/51412