யாழில் தமிழ் பத்திரிகையாளரின் மீதான தாக்குதலுக்கு கடுமையாக கண்டனத்தை த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

யாழில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கான ஒரு எச்சரிக்கையா என சந்தேகம் எழுகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://www.tamilwin.com/parliment/01/207585?ref=home-feed