புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணி­யில் தம்­மு­டன் இணைந்து செயற்­ப­டு­மாறு மகிந்த அணி­யி­ன­ருக்கு அழைப்பு விடுத்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன்.

ஒக்­டோ­பர் மாதம் ஏற்­பட்ட அர­சி­யல் குழப்­பத்­தின்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நில­மையை திறம்­ப­டக் கையாண்­ட­மைக்­காக அதன் பேச்­சா­ளர் சுமந்­தி­ர­னுக்கு பருத்­தித்­து­றை­யில் நேற்று பாராட்டு விழா முன்­னெ­டுக்­கப்­பட்­டது. நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டார் அவர்.

நிகழ்­வில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள், உரி­மை­கள் ஆகி­யன தொடர்­பில் மட்­டுமே பேசி­யது என்று தெரி­வித்த சிங்­கள மக்­கள், ஒக்­டோ­பர் மாதம் ஏற்­பட்ட அர­சி­யல் புரட்­சி­யின் பின்­னர் நாட்­டின் பிரச்­சி­னை­க­ளை­யும் கூட்­ட­மைப்பு பேசி­யது என்று தெரி­விக்க ஆரம்­பித்­துள்­ளார்­கள். இது நல்ல சகு­ன­மும்­கூட.

மக்­க­ளும் ஊட­கங்­க­ளும் புதிய அர­ச­மைப்­புக்­கான வரை­பில் என்ன உள்­ளது என்­ப­தைப் படித்­துப் பார்த்­துத் தெரிந்­து­கொள்ள வேண்­டும். நாடா­ளு­மன்­றத்­தின் இணை­யத்­த­ளத்­தில் மூன்;று மொழி­க­ளி­லும் அதைப் படித்­துப் பார்க்­கக்­கூ­டிய வாய்ப்பு உள்­ளது. அதை விடுத்;து, அர­சி­யல் வாதி­க­ளின் கருத்­துக்­க­ளின் பின்­னா­லும் கதை­க­ளின் பின்­னா­லும் ஓடு­வது நல்­ல­தல்ல. பெரும்­பா­லான ஊட­கங்­கள் இன்று பொய்ப் பரப்­பு­ரை­களை மக்­கள் மத்­தி­யில் திணித்து வரு­கின்­றன. அர­சி­யல் வாதி­கள் செய்­யும் அர­சி­யலை விட­வும் ஊட­கங்­கள் செய்­யும் அர­சி­யல்­தான் இன்று பெரும்­பா­டாக உள்­ளது.

புதிய அர­ச­மைப்பு உரு­வா­வ­தைத் தடுக்க வேண்­டாம் என்று மகிந்த தரப்­பி­ன­ரைக் கேட்­டுக்­கொள்­கின்­றேன். மகிந்த ராஜ­பக்ச, தனது பொங்­கல் வாழ்த்­தில் தமிழ் மக்­க­ளுக்கு அர­சி­யல் தீர்வு கிடைக்க வேண்­டும் என்ற தனது விருப்­பத்தை வெளி­யிட்­டுள்­ளார். அதற்கு அவ­ருக்கு நன்றி. வெறும் கருத்­தோடு நின்­று­வி­டாது அதற்­கான பய­ணத்­தில் அவ­ரும் எம்­மு­டன் இணைந்து பய­ணிக்க வேண்­டும். அதற்­காக நான் அவ­ருக்கு பகி­ரங்க அழைப்பு விடுக்­கின்­றேன் – என்­றார்.

Source: https://newuthayan.com/story/10/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%c2%ad%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%c2%ad%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%c2%ad%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%c2%ad%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%c2%ad%e0%ae%af%e0%af%81%c2%ad%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%c2%ad%e0%ae%a4%e0%ae%bf%c2%ad%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%c2%ad%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81.html