தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அரசு புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வந்தே தீரும். பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு அளித்த வாக்­கு­று­தி­யி­லி­ருந்து இந்த அரசு பின்­வாங்­காது என்ற நம்­பிக்கை எமக்கு இருக்­கின்­றது. இவ்­வாறு தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன்.

மகா­நா­யக்க தேரர்­கள் மற்­றும் சிங்­கள புத்­தி­ஜீ­வி­கள் ஆகி­யோ­ரின் எதிர்ப்­பை­ய­டுத்து புதிய அர­ச­மைப்­பைக் கொண்­டு­வ­ரும் முயற்­சி­யில் இருந்து அரசு பின்­வாங்­கு­கின்­றது என்று நேற்று வெளி­யான செய்­தி­கள் தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஒரு நல்ல காரி­யம் நடக்க இருக்­கின்­ற­தெ­னில் அதைக் குழப்­பி­ய­டிக்க சில கும்­பல்­க­ளும் இருக்­கும். அந்­தக் கும்­பல்­க­ளின் வதந்­திக் கருத்­துக்­களை எவ­ரும் நம்­பக்­கூ­டாது. உண்­மையை நிலையை நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும். இந்த அரசு மீண்­டும் ஆட்­சி­ய­மைக்க நாம் வெளி­யில் இருந்து அதா­வது எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்ந்­து­கொண்டு ஆத­ர­வ­ளித்­தோம். பல கோரிக்­கை­களை அர­சி­டம் நாம் முன்­வைத்­தி­ருந்­தோம். அதில் முக்­கி­ய­மா­ன­து­தான் இந்­தப் புதிய அர­ச­மைப்பு. இதைக் கொண்டு வரு­வ­தில் அரசு உறு­தி­யாக உள்­ளது. அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளில் அரசு இறங்­கி­யுள்­ளது. நம்­பிக்­கை­யு­டன் நாம் பய­ணிக்க வேண்­டும். அதைக் குழப்­பி­ய­டிக்­கும் விதத்­தில் எவ­ரும் செயற்­ப­டக்­கூ­டாது

புதிய அர­ச­மைப்­புக்­கான நிபு­ணர்­கள் மற்­றும் சட்ட வல்­லு­நர்­க­ளின் உத்­தேச வரை­வுத் திட்­டத்தை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அர­ச­மைப்பு நிர்­ண­ய­ச­பை­யான நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பித்­து­விட்­டார். இதை நிறை­வேற்­று­வ­தற்­கான பணி­களை அவர் தலை­மை­யி­லான அரசு முன்­னெ­டுக்­கும். நாமும் எம்­மா­லான சகல ஒத்­து­ழைப்­பு­க­ளை­யும் வழங்­கு­வோம்.

Source: https://newuthayan.com/story/11/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%c2%ad%e0%ae%95%e0%af%81%c2%ad%e0%ae%b1%e0%af%81%c2%ad%e0%ae%a4%e0%ae%bf%c2%ad%e0%ae%af%e0%ae%bf%c2%ad%e0%ae%b2%e0%ae%bf%c2%ad%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%c2%ad%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%c2%ad%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81.html