வடமராட்சியில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்குக் கடந்த 4 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கழுட்டிலேயே இந்த விளையாட்டு உபகரணங்கள் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனும் கலந்துகொண்டார்.

Source: http://www.newsuthanthiran.com/2019/01/08/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/