இரா. சம்பந்தன்

கௌரவ சபாநாயகர் அவர்களே 

தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க தங்களது அனுமதியை வேண்டுகிறேன்.

2015ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர் பாராளுமன்றம் செப்டம்பர் 2015ல் கூடியபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இரண்டாவது அதி கூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக என்னை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் . 

பாராளுமன்றத்தில் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அதி கூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக என்னை நீங்கள் மீண்டுமொருமுறை ஏற்றுக்கொண்டீர்கள் . அந்த தீர்ப்பினை நீங்கள் வழங்கிய போது அதுவே எனது இறுதி முடிவு எனவும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். 

நேற்றைய தினம் டிசம்பர் 18ம் திகதியன்று, கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்களை எதிர்க்கட்சி தலைவர்  பதவிக்கு நியமிக்கவேண்டும் என்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்று நீங்கள் மஹிந்த ராஜபக்ச அவர்களை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதாக அறிவித்தீர்கள். இரண்டுமுறை நீங்கள் மீளுறுதி செய்து எதிர்க்கட்சி தலைவராக நீங்கள் நியமித்த என்னை பதவியிலிருந்து நீக்காமல் இந்த அறிவிப்பினை நீங்கள் செய்ததுமன்றி, இந்த செயலானது தற்போதைய பாராளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியினை தக்க வைத்திருப்பதாகவே புலப்படுகின்றது. மேலும் என்னை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவதில் உங்களிற்கு பூரண திருப்தி இருக்கவில்லையா என்ற கேள்வியினை இது தோற்றுவிக்கின்றது

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விட அதிகளவு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொண்டுள்ளதனை கேள்விக்குட்ட்படுத்த முடியாது.பாராளுமன்றத்தில்  இரண்டாவது பெரும்பான்மை கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் என்னை எதிர்க்கட்சி தலைவராக நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். இதற்க்கு காரணம் என்னவெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றின் தலைவரான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட இந்த இரு கட்சிகளினதும்  ஒரு சாரார் அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தார்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாட்டின் தலைவர், நிறைவேற்று அதிகார தலைவர்,அரசாங்கத்தின் தலைவர் மட்டுமல்லாது பல்வேறு அமைச்சு பதவிகளை வகிக்கும் ஒரு அமைச்சராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுகிறார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான இன்னும் பலர் அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தனர். அவர்கள் எல்லோரும் கூட்டாக பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள்.

இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்படுவதானது முறையற்ற செயலாக அமைந்திருக்கும். இந்த பின்னணியில் தான், உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் பாராளுமன்ற சம்பிரதாய மற்றும் சாசன முறைப்படி பாராளுமன்றில் இரண்டாவது பெரும்பான்மையுள்ள கட்சியின் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்படுவதனை நடைமுறைப்படுத்தி என்னை நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக இரண்டுமுறை ஏற்றுக்கொண்டீர்கள்.

கடந்த அக்டோபர் 26ம் திகதியிலிருந்து பிரதமர் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றம் தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. எமது அரசியல் யாப்பு சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு  அமைய உயர் மட்டதில் நீதித்துறையினால் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் சில முடிவுகள் இந்த விடயங்கள் தொடர்பில் எட்டப்பட்டுள்ளன. இந்த பின்னணியில்தான் மேற்குறித்த எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் நீங்கள் தீர்மானமொன்றினை வழங்கியிருக்கின்றீர்கள்.

நீதிமன்ற தீர்ப்பிக்கமைய கடந்த 16ம் திகதி பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், ஆனால் அமைச்சரவை ஒன்றோ அல்லது அரசாங்கம் ஒன்றோ இன்னமும் முறையாக நியமிக்கப்படவில்லை. நேற்றைய தினம் 18ம் திகதியன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள் சபையிலே கடந்து வந்து அரசாங்க தரப்பில் அமர்ந்து கொண்டனர்.  அரசாங்கம் ஒன்று நியமிக்கப்படாத இந்த பின்னணியில் அவசரமாக இன்னொமொருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கான தேவை இல்லை என்பதனை நான் வலியுறுத்த விரும்புகிறேன் 

தற்போது பதவியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரை நீக்காமல் அப்படியான அறிவிப்பினை செய்தமையானது விடயங்களை இன்னும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது

மேலும் நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அறிவித்த உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் அக்கட்சியிலிருந்து விலகி  ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையானது வெற்றிடமாக உள்ளது என்ற குற்ற சாட்டும் உள்ளது.

நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அறிவித்த குறித்த உறுப்பினர் நீங்கள் அறிவித்த அந்த நாளில் பாராளுமன்ற உறுப்பினராக கூட இல்லை என்பதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நீங்கள் எடுத்த தீர்மானமானது அவசரமாகவும் எமது அரசியலமைப்பை மீறும் வகையிலும் இருக்கின்றதாகவே கருதப்படுகின்றது.

மேலே நான் குறிப்பிட்டுள்ள விடயங்கள் இலங்கை தனது மிக முக்கிய சட்டமான அரசியலமைப்பினை மதிக்காத ஒரு தோல்வியை நோக்கி நகருகின்ற நாடாக மாறுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது. 

பிளவுபடாத பிரிக்க முடியாத இலங்கை நாட்டில் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ விரும்பும் பிரஜைகள் இந்த நடவடிக்கையினை இந்த நாடு இன்றைக்கு இருக்கும் இந்த  துர்ப்பாக்கிய நிலைக்கு மூல காரணமாக அமைந்த  பெரும்பான்மைவாத சிந்தனையாகவே கருதுகிறார்கள்

இந்த சூழ்நிலையானது தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் உள்ளடங்கலான அனைத்து மக்களும் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டியதன் அதி முக்கியத்துவத்தினை உணர்த்தி நிற்கிறது.

முழு நாட்டினதும் நன்மை கருதி எமது மிக பிரதானமான சட்டமான அரசியல் யாப்பின் புனித தன்மையை பாதுகாக்கும் முகமாக தேவையான மாற்று நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது மிக அவசியமானதொன்றாகும். 

இரா. சம்பந்தன் 

பாராளுமன்ற உறுப்பினர்

Statement Made by R. Sampanthan Member of Parliament pertaining to the position of Leader of the Opposition in the current Parliament

Hon Mr Speaker, 

I seek your indulgence to make a statement pertaining to the post of Leader of the opposition in the current Parliament. 

You recognized me as the Leader of the Opposition as the Leader of the Ilankai Thamil Arasu Katchi (ITAK) the second largest party in opposition in the Sri Lankan Parliament in September 2015 when Parliament was convened after the General Elections in 2015. 

After questions were raised in Parliament by some other opposition members you once again recognized me as the Leader of the Opposition as the leader of the IlankaiThamil Arasu Katchi(ITAK) the second largest party in Parliament in August 2018. In the course of the order you stated that was your final decision. 

Yesterday on the 18th of December 2018, you made an announcement in Parliament that you recognized Hon. Mahinda Rajapaksa as the Leader of the opposition consequent to a request made by the United Peoples Freedom Alliance (UPFA) that he be appointed as the Leader of the Opposition.  You made the said announcement without removing me from the post of the Leader of the opposition to which position you yourself had appointed me twice over and consequently it would seem that there are two persons holding the position of the Leader of the Opposition in the current Parliament.The question arises as to whether you lacked the conviction to remove me from the post of the Leader of the Opposition. 

That the United Peoples Freedom Alliance (UPFA) had many more seats in Parliament than the ITAK has never been questioned. I was recognized as the Leader of the Opposition consequent to your accepting me as the Parliamentary Leader of the ITAK the second largest party in Parliament. This was for the reason that a section of the UPFA including His Excellency President MaithiripalaSirisena the Leader of the United Peoples Freedom Alliance (UPFA) and the Sri Lanka Freedom Party (SLFP)were part and parcel of the Government. President Maithiripala Sirisena is the Head of State the Head of the Executive and of the Government Member of the Cabinet of Ministers holding several portfolios and Head of the Cabinet of Ministers. Several other members of Parliament elected to Parliament on the ticket of UPFA held positionsin Cabinet. All of them were collectively answerable to Parliament. 

In this situation it would have been incongruous for a member of the UPFA to be the Leader of the Opposition. It is in this context in keeping with Parliamentary practice and convention as recognized the world over the second largest party in opposition in parliament has been able to have its parliamentary leader recognized as the Leader of the Opposition and it was for this very reason you recognized me twice over as the Leader of the Opposition. 

From 26th of October 2018 certain events have taken place in this country pertaining to the Prime Minister the Cabinet of Ministers the Government and Parliament. Some finality had been arrived at in regard to these issues, in keeping with our constitution the rule of Law and democratic values through judgments delivered by our judiciary at the highest level. It is in this background that you have made the ruling referred to above pertaining to the office of the Leader of the Opposition.

In keeping with the judicial verdict, a Prime Minister was sworn in on Sunday 16th of December the Cabinet of Ministers has not yet been constituted and a Government has not yet been formed. Three members of Parliamentelected on the ticket of the UPFA crossed the floor and occupied seats on the benches of the Government on the 18th of December. In these circumstances when a Government has not yet been fully constituted I submit there was no need for another person to be recognized as the Leader of the Opposition in haste. Doing so withoutremoving the functioning Leader of the Opposition has further complicated the issue. 

It is further alleged that the Member of Parliament whom you have recognized as Leader of the Opposition has ceased to be a member of the recognized political party/ UPFA on whose nomination paper his name appeared atthe time of becoming such Member of Parliament and that his seat had become vacant since one month has expired from the date of his ceasing to be a member of such recognized political party. 

You would observe that the person recognized by you as Leader of the Opposition does not even hold the position of a Member of Parliament as at the date of such recognition.  This would again suggest that your decision has been taken in haste and that your decision is in violation of our constitution. 

The events that I have outlined above tend to raise the question as to whether Sri Lanka is moving towards becoming a failed state which does not recognize the supremacy of its Constitution the primary law. 

Sri Lankan Citizens who wish to live in an undivided indivisible Sri Lankan State in unity and harmony view this as an act of majoritarianism which has been the primary cause of the pathetic state in which the country is in today. 

This emphasizes the urgent and utmost importance of framing a new Constitution that would enable all people inclusive of the Tamil and Tamil Speaking people to live with self-respect and dignity.   

To take early corrective action in the interest of the country as a whole and to preserve the sanctity of our constitution the primary law is urgently needed. 

R Sampanthan

Member of Parliament