எந்த பதவியிலும் நீடித்திருக்க நாம் விரும்பவில்லை. ஆனால், எமது அரசியலமைப்பு மேலும் மீறப்பட கூடாது என்பதில் நாம் திட்டவட்டமாக உள்ளோம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சுநத்திரக் கட்சி எதிர்க்கட்சியில் உள்ளதா என்பது எமது பிரச்சினை. சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் அமைச்சரவையின் தலைவராக செயற்பட்டு, அமைச்சரவையையும் தக்கவைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியாது.

நாடாளுமன்றில் தெரிவுசெய்யப்பட்ட கட்சியில் இருந்து விலகினால் அவரது உறுப்புரிமை நீக்கப்பட வே;ணடும். சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் விலகி இன்னொரு கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். ஆகவே அவர்கள் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழந்துள்ளனர். நாடாளுமன்ற ஏற்பாடுகளுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. நாடாளுமன்ற அங்கத்துவம் இழக்கப்பட்டவர்கள் இங்குள்ளனர். எனவே, இது குறித்து தெரிவுக்குழு ஒன்றை உருவாக்கி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாம் எந்த பதவியிலும் நீடித்திருக்க விரும்பவில்லை. ஆனால், எமது அரசியலமைப்பு மேலும் மீறப்பட கூடாது. ஆகவேதான் நாம் இதனை குறிப்பிடுகின்றோம்” எனத் தெரிவித்தார்.

Source: http://athavannews.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/