ஐக்கிய தேசிய முன்னணியுடன் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தம்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்தால், மஹிந்த ராஜபக்சவும் அவரது சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் தம்முடன் இணங்கிய விடையங்களை அம்பலப்படுத்த நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  உறுதிப்படுத்தினார்.

Source : https://www.ibctamil.com/srilanka/80/110779