ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காது என்றும், தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே செயற்படும் எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

”தற்போதைய அரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை விபரித்து, சிறிலங்கா அதிபருக்கு கடந்த நொவம்பர் 29ஆம் நாள் கூட்டமைப்பினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

அதில் கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும்.

ஐக்கிய தேசிய முன்னணியினால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Source: http://www.newsuthanthiran.com/2018/12/13/%e0%ae%90%e0%ae%a4%e0%af%87%e0%ae%ae%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d/