07.11.2018

ஊடக அறிக்கை

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்தலைமையில், திரு செல்வம் அடைக்கலநாதன் பா. திரு. .சித்தார்த்தன் பா திரு.எம் .சுமந்திரன் பா ஆகியோர்இன்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதிஅதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார் இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும்  அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் அதிமேதகு ஜனாதிபதிஅவர்களுக்கு எடுத்துக்கூறினார்கள். இத்தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும் அத்தீர்மானங்களின்படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ் தேசியகூட்டமைப்பினர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கிகூறினார்கள்

அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின்அரசியல் சூழ்நிலையை  சுமூக நிலைக்குக் கொண்டுவருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவைக் கொடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு குறிப்பாகஅதிமேதகு ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்கள்.

இந்நிலையை விரைவாக அடைவதற்கு தற்போதுயோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதிக்கு தே கூ வலியுறுத்தியது.இவ்வேண்டுகோளை தான் கவனமாகஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

 

எம். சுமந்திரன் பா.

பேச்சாளர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு

 

07.11.2018

Press Release

A delegation of the Tamil National Alliance (TNA) comprising of Mr. R. Sampanthan Leader of the TNA, Mr. Selvam Adaikkalanathan MP, Mr. D. Siddaarthan MP, Mr. M.A.Sumanthiran MP, on the invitation of His Excellencey the President Mr. Maithiripala Sirisena met with him at the Presidential Secretariat on Wednesday 7th. The said meeting lasted one and half hours.

The situation currently prevailing in the country was discussed at length. His Excellency the President explained to the TNA delegation the circumstances under which certain decisions were made. The TNA delegation explained to the President the reasons for the decisions that have been made by the TNA and its members of Parliament, which decisions had been made public and are well known to the country and the world.  The TNA delegation also explained to His Excellency the President that the decisions taken by the TNA cannot be reversed and that the TNA will stand by the said decisions.

The TNA delegation also specifically told HE the President that in consultation with the President it would extend to the President its fullest support with regard to any future steps taken by him to stabilize the political situation in the country with the cooperation of all political parties. To enable this to be achieved at the earliest the TNA also urged HE the President to convene Parliament for a date earlier than now contemplated. HE the President stated that he would give his earnest consideration to this request.

M.A. Sumanthiran MP

Spokesperson

Tamil National Alliance