ஊடக அறிக்கை

 

06.11.2018

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் அவர்கள் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தது கலந்துரையாடினார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தூதுவரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் அவர்கள் கடந்த வாரத்தில் பிரதமரை நீக்கியமை உள்ளடங்கலாக இடம்பெற்ற சம்பவங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானவையாகும் எனத் தெரிவித்தார். மேலும் பாராளுமன்றம் கூடுவதனை காலந்தாழ்ந்த்தும் செயலானது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக செய்யப்பட்ட ஒரு செயலை கட்சி தாவும் நபர்களுக்கு பல்வேறு பதவிகளையும் வேறு காரியங்களையும் கொடுத்து சட்டபூர்வமான ஒன்றாக காட்டுவதற்கு வழிவகுக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் உடனடியாக செயற்பட்டு பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் சபாநாயகரை எழுத்து மூலமாக கேட்டுக்கொண்டதனையும் இரா. சம்பந்தன் அவர்கள் எடுத்துக்கூறினார்.

 

அரசாங்கமானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை போதியளவு கையாளவில்லை என தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலை,மீள்குடியேற்றம் புனர்வாழ்வு,படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு,காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை,போன்ற விடயங்களில் அரசாங்கம் மந்த கதியிலேயே செயற்பட்டது எனவும் தெரிவித்தார்.இந்த விடயங்களில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது தமிழ் மக்களின் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பிளவுபடாத பிரிக்கமுடியாத நாட்டிற்குள் உண்மையான ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றினை அடைவது அத்தியாவசியம் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன் அவர்கள், அத்தகைய தீர்வினை அடைய முடியாத பட்சத்தில் இந்த நாடு எதிர்நோக்கியுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது போகும் எனவும் தெரிவித்தார். மேலும் இலங்கை அரசாங்கமானது சர்வதேசத்திற்கும் .நா.மனித உரிமை பேரவைக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் ஆக்கபூர்வமான பங்களிப்பினை கொடுக்க வேண்டும் என தூதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்க தூதுவர், ஜனநாயக வழிமுறைகள் பின்பற்றப்படுவதனை அமெரிக்கா வலியுறுத்துகின்றது எனவும் தற்போது நிலவும்   சூழ்நிலைக்கு ஜனநாயக வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் .நா. மனித உரிமை பேரவை தீர்மானத்தின் நோக்கத்திற்கும் அதன் நடைமுறைப்படுத்தலிற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் உறுதியளித்தார்.

சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க தூதுவரோடு அமெரிக்க தூதரகத்தின் பிரதி பொறுப்பாளர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் அரசியல் பிரிவின் பொறுப்பாளர் அந்தனி ரென்சூலி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

Press Release

06.11.2018

 

The United States Ambassador for Sri Lanka Ms. Alaina B. Teplitz met with the Leader of the Opposition and the Tamil National Alliance Hon R Sampanthan today at his residence.

 

Briefing the Ambassador on present situation in the country, Mr. Sampanthan said, that the events that have taken place in the past week in removing the Prime Minister are unconstitutional. Further, he said proroguing Parliament for a longer period is only paving the way to legitimize what has been done in an undemocratic manner by offering various benefits to those who want to shift sides. He further stated that he had written to the Speaker to take steps to reconvene the parliament at the earliest.

 

Mr. Sampanthan highlighted that the government did not sufficiently address the issues faced by the Tamil people. He highlighted that on the issues of the Political prisoners, resettlement, and rehabilitation, the release of lands occupied by the armed forces, issue of missing persons the progress has been slow. He further stated inadequate delivery on these matters has caused a sense of disappointment among the Tamil people.

Mr. Sampanthan reiterated that a genuine and acceptable political resolution to the Tamil question within an undivided indivisible Sri Lanka  is a must and the country will not overcome any of its problems until such a resolution is achieved. He further requested the Ambassador to keep a constructive engagement with the government with regards to its commitment to the international community and to the United Nations Human Rights Council.

The Ambassador stated that the United States Government wants the democratic process to take its place and a resolution to the current crisis must be found through the democratic process. The Ambassador further assured that the United States remain committed to the aims and the implementation of the UNHRC resolution and towards achieving lasting reconciliation in Sri Lanka.

Along with Ambassador Alaina Teplitz Deputy Chief of Mission Robert Hilton and the Political Section Chief Anthony Renzulli were also present at the meeting which lasted approximately an hour.