நாட்டிலும் நாடாளுமன்றிலும், ஜனநாயகத்தை இல்லாதொழிக்க எடுக்கப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியுடன் கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதில், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் தலைவர் அனுகுமார திஸாநாயக்க, பிமல் ரத்நாணயக்க, லால் காந்த ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அரசியலமைப்பு பிரச்சினை, ஜனநாயகத்தை நிலைநாட்டுவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

source: http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/