03.11.2018

ஊடக அறிக்கை

கடந்த, ஒக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை, பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இம்மாதம் 2ம் திகதி பிற்பகல் 5 மணிக்கு கூடி ஆராய்ந்து பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.

 

  1. இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பதவியிலிருக்கும் பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. 19ம் திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19ம் திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது.ஆகையால் பிரதம மந்திரியை நீக்குவதாகவும், வேறொருவரை பிரதம மந்திரியாக நியமிப்பதாகவும் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புகள்அரசியலமைப்பிற்கு முரணானதும் சட்டவிரோதமானவையுமாகும்.
  2. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்தியதாக ஜனாதிபதி அவர்கள் விடுத்த பிரகடனத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக விரோத செயலாகவும் பாராளுமன்றத்தின் மீயுயர் தன்மையை பாதிக்கின்ற செயலாகவுமே நோக்குகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை பிரதம மந்திரியாக அறிவித்து விட்டு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டிய தேவையை தாமதிப்பதற்கும் முறியடிப்பதற்கும் எதுவாக செய்யப்பட்ட கால நீடிப்பே இதுவாகும். இக்கால நீடிப்பை உபயோகித்து மந்திரிப் பதவிகளையும் பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு முறைகேடாக இழுத்தெடுத்து பாராளுமன்ற பெரும்பான்மையை கபடமாக பெற்றுக் கொள்வதற்கான இந்த ஜனநாயக விரோத செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு தனது எதிர்ப்பையும் தெரிவித்து கொள்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இந்த சதி முயற்சிக்கு பலியானதை குறித்து எமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுகிறோம். அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.
  3. மேற்சொல்லப்பட்ட காரணங்களுக்காக, அரசியலமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் இத்தகைய சந்தர்ப்பத்தில் “நடுநிலை”வகிப்பதென்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் என்பதே எமது நிலைப்பாடு.

 

The Party Leaders’ meeting of the constituent parties of the Tamil National Alliance took place at 5 p.m. on 2nd November 2018 and arrived at the following decisions concerning the actions taken by President Maithripala Sirisena on Friday, the 26th of October after the Parliamentary sessions concluded for that day:

  1. According to the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka, the President does not possess the authority to remove a Prime Minister who is in office. Such authority that vested in the President previously was specifically repealed by the 19th Amendment to the Constitution. In these circumstances the Gazette notification declaring that the Prime Minister had been removed and another Prime Minister appointed are unconstitutional and illegal.
  2. Thee Tamil National Alliance also considers the President’s decision to prorogue Parliament made following the above actions as undemocratic and in violation of Parliamentary Supremacy. After having declared as Prime Minister a Member who does not command the confidence of Parliament, this had been done in order to create delay and prevent such Member from having to prove a majority in Parliament. The Tamil National Alliance strongly condemns and opposes the undemocratic efforts to use such delay to bribe Members of Parliament with both money and Ministerial posts to induce them to cross over in order to fraudulently obtain a majority in Parliament. We strongly oppose and condemn Tamil National Alliance Member of Parliament S. Viyalendran being a part of this conspiracy. Necessary action will be taken against him immediately.
  3. For the above reasons, the Tamil National Alliance will vote in support of the No Confidence Motion to be brought against the Government headed by Mahinda Rajapaksa, who has been unconstitutionally and illegally appointed as Prime Minister. Remaining “neutral” in such a situation, would pave the way for achieving an undemocratic end by force.

මාධ්‍ය නිවේදනය

පසුගිය ඔක්තෝබර් මස 26 වන සිකුරාදා දින, පාර්ලිමේන්තු රැස්වීම් අවසන් වීමෙන් පසු, ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මහතා ගත් ක්‍රියාමාර්ග සම්බන්ධයෙන් දෙමළ ජාතික සන්ධානයට අයත් පක්‍ෂවල නායකයින් සමග පැවති සම්බන්ධීකරණ කමිටුව මෙම මස 2 වන දින ප.ව. 5.00ට රැස්වී පහත සඳහන් තීරණවලට එළඹී ඇත.

  1. ශ්‍රී ලංකාවේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට අනුව තනතුර දරමින් සිටින අග්‍රාමාත්‍යවරයා සිය තනතුරෙන් පහකිරීමේ බලය ජනාධිපතිවරයාට නොමැත. 19 වන ආණුඩුක්‍රම ව්‍යවස්ථා සංශෝධනයට පෙර ජනාධිපතිවරයාට තිබූ එම බලය, 19 වන සංශෝධනය මගින් පැහැදිලිවම ඉවත්කරන ලදී. එබැවින් අග්‍රාමාත්‍යවරයා තනතුරෙන් පහකරන බවත්, වෙනත් කෙනෙකු අග්‍රාමාත්‍ය තනතුරට පත්කරන බවත්, සඳහන් කරමින් ජනාධිපතිවරයා විසින් ගැසට් නිවේදන ප්‍රකාශයට පත්කරීම ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට පටහැනි හා නීති විරෝධී ක්‍රියාවන් වේ.
  2. ඉහත ක්‍රියාවෙන් පසු පාර්ලිමේන්තු සැසිය කල්තබා ඇති බවට ජනාධිපතිවරයා කර ඇති ප්‍රකාශය ද දෙමළ ජාතික සන්ධානය ප්‍රජාතන්ත්‍ර විරෝධී හා පාර්ලිමේන්තුවේ උත්තරීතරභාවයට හානියක් ගෙනදෙන ක්‍රියාවක් ලෙස දකී. පාර්ලිමේන්තුවේ බහුතර බලයක් නොමැති පුද්ගලයෙකු අග්‍රාමාත්‍යවරයා වශයෙන් ප්‍රකාශකර, පාර්ලිමේන්තුවේ දී ඔහු විසින් බහුතරය පෙන්වීම ප්‍රමාද කිරීමට ගත් ක්‍රියාවක් ලෙස මෙම කල්මැරීම සඳහන් කිරීමට පුළුවනි. මෙලෙස කල්දමා අමාත්‍ය තනතුරු හා මුදල් අල්ලස් වශයෙන් ලබාදී පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් තම පිලට නීති විරෝධී ලෙස ගෙන පාර්ලිමේන්තුවේ බහුතරය කපටි ලෙස ලබාගැනීමේ මෙම ප්‍රජාතන්ත්‍ර විරෝධී ක්‍රියාව දෙමළ ජාතික සන්ධානය දැඩි ලෙස හෙලා දකින අතර සිය ඊට විරෝධයද ප්‍රකාශ කර සිටී.

දෙමළ ජාතික සන්ධානයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී එස්. වියාලේන්ද්‍රන් මහතා ද මෙම කුමන්ත්‍රණයට හසුවීම දැඩිලෙස හෙලා දකින අතර, ඊට සිය විරෝධය ද ප්‍රකාශ කර සිටිමු. ඔහුට විරුද්ධව වහාම නිසි ක්‍රියාමාර්ග ගැනීමට ද බලාපොරොත්තු වෙමු.

  1. ඉහත හේතූන් නිසා, ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාව දැඩි දෙස උල්ලංඝණය කරමින්, නීති විරෝධී ලෙස අග්‍රාමාත්‍යවරයා ලෙස පත්කර සිටින මහින්ද රාජපක්‍ෂ ප්‍රමුඛ රජයට එරෙහිව ගෙන එන විශ්වාසභංග යෝජනාවට පක්‍ෂව දෙමළ ජාතික සන්ධානය සිය ඡන්දය භාවිතා කරනු ඇත. මෙවන් අවස්ථාවක “මධ්‍යස්ථව සිටීම” යනු අරාජිකත්වය ජයගැනීමට ඉඩදෙන ප්‍රජාතන්ත්‍ර විරෝධී ක්‍රියාවක් යන්න අපගේ ස්ථාවරය වේ.