தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாக மகாவலி எல் வலய திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தலைமையில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் சிறப்பு செயலணியின் மூன்றாவது கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எமது செய்திச் சேவைக்கு தொலைபேசி மூலம் கருத்து தெரிவித்த போதே கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் குறித்த தகவலை வெளியிட்டார்.

Source: http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/