ஐ.நாவில் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று(திங்கட்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

Source: http://athavannews.com/%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1/