இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள முக்கிய பிரதிநிதிகளுடன்  இலங்கை தமிழரசுக் கட்சியினர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், வவுனியா அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய சட்டத்தரணி இராதாகிருஸ்ணன், கவிஞர் இனியபாரதி, தினமணி பத்திரிகையின் ஆசிரியர் ஆகியோருடனேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், குறித்த சந்திப்பில் கலந்துகொள்ள ஊடகங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதோடு, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் தகவல் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வட. மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வட. மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், து.ரவிகரன் வவுனியா வடக்கு மற்றும் தெற்கு பிரதேச சபைகளின் தலைவர்கள், வவுனியா கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் முன்னாள் பீடாதிபதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Source: http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F/