உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது விடுதலையை வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) 13 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களை சென்று பார்வையிட்டுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 8 அரசியல் கைதிகள், கடந்த 14 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் ஆர்.தவரூபன், எஸ்.ஜெயசந்திரன், எஸ்.தில்லைராஜ் மற்றும் டி.நிமலன் ஆகியோரின் உடல் நிலைமை பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source:http://athavannews.com/உண்ணாவிரதத்தில்-ஈடுபட்-2/