இலங்கைக்கான கனேடிய தூதுவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிற்கும் இடையேயான சந்திப்பொன்று இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பில் கனடா உட்பட்ட பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைமைகளின் அடைப்படையில் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு அமையவேண்டியதன் அவசியத்தினை இரா. சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தியதுமன்றி, இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கனேடிய அரசாங்கம்  மேற்கொள்ளும் பணிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
இச்சந்திப்பின் புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன