மனக்குழப்பத்தில் இருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மனக்குழப்பத்தை நீக்கி சரியான பதில் ஒன்றை தெரிவிப்பாராக இருந்தால், அதன் பின்னர் அடுத்த மாகாணசபை தேர்தல் குறித்து கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை  வெளிப்படுத்தும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்  குறித்தே கேட்ட மேற்கண்டவாறு கூறிய அவர்,

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. இந் நிலையில் முதலமைச்சர் உரையாற்றும்போது தன் முன் மூன்று தெரிவுகள் முன்னர் இருந்ததாகவும்,  தற்போது நான்கு தெரிவுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆகவே நாட்கள் செல்ல.. செல்ல.. தெரிவுகளின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புக்கள் உள்ளது. அவருடைய மனக்குழப்பங்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல. அவர் தனது மனக்குழப்பம் தெளிந்து, தெளிவான ஒரு தெரிவினை கூறியதன் பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றார்.

http://www.virakesari.lk/article/39567