தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியை இழக்காது என எனவும், அதனை இழக்கும் வகையில் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளாது எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியல்தீர்வு வரும் வரையில், மக்களின் அபிவிருத்திகளைப் புறக்கணிக்க கூடாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்காக, மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியததை பெற முயற்சிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.