தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப்போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது – என காலியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சிங்கள மொழியில் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.

 

நிலையான பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமானது. சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஒத்துக்கொள்வதுடன் ஏனைய மக்களுக்காக மறுசீரமைப்பு மற்றும் நீதிக்காக முன்வரவேண்டும்  என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக தெற்கில் நடைபெற்ற தொடர்ச்சியான கூட்டங்களில் இது 7வது கூட்டமாகும்.

 

 

A new Constitution is a fundamental necessity. The Sinhala majority should accept it – M. A. Sumanthiran speaking in Sinhala in Galle

 

All the problems of Tamil People won’t b solved by a new Constitution, but a new Constitution is fundamental. Without this, no issue an be addressed, said TNA Spokesman M. A. Sumanthiran speaking in Sinhala an an event in Galle on Constitutional Reform. Speaking further, he said:

In a country with a permanent majority it is important to share powers of governance in such a way that all peoples have equal citizenship rights. Sri Lanka’s Sinhala majority must itself acknowledge injustice of simple majoritarian rule & clamour for reform & justice for other peoples.

 

There has been a series of meetings in the south on constitutional reforms. This was the seventh meeting.