எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவிற்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று நண்பகல் 12.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு அபிவிருத்திகள், முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“மிகவும் பயனுள்ள வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தோம்.

அத்துடன், விவசாயம், தெருக்கள், குளங்கள் என்பவற்றின் அபிவிருத்திகள் தொடர்பிலும் நாம் இதன்போது பேசியிருந்தோம்“ என கூறியுள்ளார்