இரங்கல் செய்தி

 

இன்று இந்தியா தனது ஒரு மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் ஒரு சிறந்த அறிவாளியுமான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை இழந்துள்ளது. முன்னாள் பாரத பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான வாஜ்பாய் அவர்கள் ஒரு மிகச்சிறந்த தலைவர் மட்டுமல்லாது அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அநேக சாதனைகளை நிலைநாட்டுவதற்கும் வழிவகுத்தார்.

தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால்  இந்தியாவை வழிநடாத்திய வாஜ்பாய் அவர்கள் உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான மக்களினால் நேசிக்கப்பட்ட மதிக்கப்பட்ட ஒரு தலைவராவார். மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் அவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர் மட்டுமல்லாது நல்ல நகைச்சுவை உணர்வு மிகுந்த ஒருவருமாவார். இந்திய பாராளுமன்றத்திலும் வெளியிலும் அவர் ஆற்றிய உரைகள் என்றைக்கும் நினைவிலிருக்கும்.

இந்திய மக்களுக்கு அவர் ஆற்றிய  தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்திய அரசினால் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் விருதுகள்அவருக்கு வழங்கப்பட்டன.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும் , பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

 

அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

 

இரா.  சம்பந்தன்

எதிர்க்கட்சி தலைவர்இலங்கை பாராளுமன்றம்

தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு

 

Condolence Message

Today India has lost one of its most regarded Intellectual and statesmen Atal Bihari Vajpayee. The former Prime Minister of India and the Bharatiya Janatha Party (BJP) was an outstanding leader and under his visionary leadership, India achieved many milestones in its history.

He served the great country of India with humility and honesty, and he was much loved and respected by millions of people across the world. Former three-time Prime Minister Vajpayee is also an exceptional orator and a leader with great sense of humour, his speeches within the Indian parliament and outside will always be remembered.

He was honoured with Bharat Ratna and Padma Vibushan awards by the Government of India for his selfless services to the people of the country.

On behalf of the Tamil People in Sri Lanka, I extend my sincere condolences to his family, to the Bharatiya Janatha Party, to the Government of India and to the people of India.

 

May His Soul Rest in Peace

 

Sampanthan

Leader of the Opposition – Parliament of Sri Lanka

Leader – Tamil National Alliance