காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளைத் தேடும் உற­வி­னர்­கள், தங்­க­ளின் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்­பில் நிலை­யற்ற நிர்க்­கதி நில­மை­யில் இருக்­கின்­றார்­கள். உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்தி பல மாதங்­க­ளா­கப் போரா­டு­கின்­றார்­கள்.

இது தொடர்­பில் எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் எமது எதிர்­பார்ப்­புக்­களை முழு­மைப்­ப­டுத்­தும் வகை­யில் இல்லை. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார்.

இலங்­கைக்கு வந்­துள்ள பெல்­ஜி­யம் நாடா­ளு­மன்ற நட்­பு­ற­வுக் குழு­வி­ன­ருக்­கும் எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும் இடை­யி­லான சந்­திப்பு நாடா­ளு­மன்­றக் கட்­டி­டத் தொகு­தி­யில் உள்ள எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் பணி­ய­கத்­தில் நேற்­று­ முன்­தி­னம் செவ்­வாய்க்கிழமை இடம்­பெற்­றது.

மிஸ் பண்ணிடாதீங்க…!!

இது தொடர்­பில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் ஊட­கப் பிரி­வி­னால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

அர­ச­மைப்பு
நாட்­டில் தற்­போது காணப்­ப­டும் அர­ச­மைப்பு எல்­லோ­ரி­ன­தும் இணக்­கப்­பாட்­டு­டன் ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட ஒன்­றல்ல என்­ப­த­னைச் சுட்­டிக்­காட்­டி­னார். அதே­வேளை நாட்­டின் பன்­மு­கத் தன்­மை­யை­யும் பல இனங்­க­ளை­யும் அனு­ம­திக்­கும் ஒரு புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான முயற்­சி­கள் இடம்­பெற்று ஒரு வரைபு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

மேலும் இந்த முயற்­சி­கள் கைகூ­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் காணப்­ப­டு­வ­த­னை­யும் நீண்­ட­கா­ல­மாக தொட­ரும் தேசி­யப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வினை எட்­டும்­மு­க­மாக நில­வும் சூழ்­நி­லை­மை­யைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்த வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தி­னை­யும் எடுத்­து­ரைத்­தார்.

இந்த நாட்டை ஒரு புதிய பாதை­யில் கொண்டு செல்­லும் நோக்­கில் புதிய அர­ச­மைப்­பா­னது ஆண்­டி­று­திக்­குள் நிறை­வேற்­றப்­பட வேண்­டும். நாட்டை முன்­னேற்­ற­மான பாதை­யில் இட்­டு­செல்­வதா? அல்­லது மீண்­டும் பின்­னோக்கி நகர்த்­து­வதா? என்­பதே இன்­றுள்ள தெரி­வு­க­ளா­கும். நாட்டை முன்­னேற்­ற­மான ஒரு பாதை­யில் கொண்­டு­செல்ல வேண்­டு­மா­னால் ஒரு புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­வது இன்­றி­ய­மை­யா­த­தா­கும்.

மக்­கள் விரக்தி
தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தாம் எதிர்­பார்த்த உட­னடி உத­வி­கள் கிடைக்­கா­மை­யால் மக்­கள் விரக்தி அடைந்­தி­ருப்­ப­த­னை­யும், மக்­கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக நூற்­றாண்டு காலம் வாழ்ந்த நிலங்­களை படை­யி­னர் கைவ­சப்­ப­டுத்தி வைத்­துள்­ள­த­னை­யும் இவற்­றினை விடு­விப்­பது தொடர்­பில் எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் மிக மந்­த­க­தி­யில் இடம்­பெ­று­கின்­றது.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம்
காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளைத் தேடும் உற­வி­னர்­கள் தொடர்ந்­தும் தங்­கள் அன்­புக்­கு­ரி­யர்­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்­பில் ஒரு நிலை­யற்ற நிர்க்­கதி நில­மை­யில் இருக்க முடி­யாது. உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்­டும். அதே­வேளை எமது மக்­கள் பல மாதங்­க­ளாக இந்த விட­யங்­கள் தொடர்­பில் தொடர்ச்­சி­யான போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டு­வ­ரு­கி­றார்­கள். இந்த விட­யங்­கள் தொடர்­பில் எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் எமது எதிர்­பார்ப்­புக்­க­ளைப் பூர்த்தி செய்­யும் வண்­ணம் இல்லை.

கடந்த காலங்­க­ளில் இலங்கை தொடர்­பில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் பங்­க­ளிப்­பு­க­ளுக்கு நன்றி தெரி­வித்த எதிர்க்­கட்­சி­த­லை­வர், நாட்டு மக்­க­ளுக்கு பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக் கூடிய நட­வ­டிக்­கை­க­ளைச் சீர்­செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு அரசை வலி­யு­றுத்­த­வேண்­டும் என­வும் கேட்­டுக்­கொண்­டார்.

 

http://newuthayan.com/story/10/காணா%C2%ADமல்-ஆக்%C2%ADகப்%C2%ADபட்%C2%ADடோர்-விவ%C2%ADகா%C2%ADரத்%C2%ADதில்-அர%C2%ADசின்-நட%C2%ADவ%C2%ADடிக்கை-திருப்%C2%ADதி%C2%ADயாக-இல்லை.html