ஊடக அறிக்கை

 

இலங்கை வந்துள்ள பெல்ஜியம் இலங்கை பாராளுமன்ற நட்புறவு குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பாராளுமன்ற கட்டிட தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் அவர்கள், நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் யாப்பானது எல்லோரினதும் இணக்கப்பாட்டுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பதனை சுட்டிக்காட்டிய அதேவேளை நாட்டின் பன்முகத்தன்மையையும் பல இனங்களையும் அங்கீகரிக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று ஒரு வரைபு யாப்பானது புதன் கிழமையன்று வழிநடத்தல் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதனையும் எடுத்துக் காட்டினார். மேலும் இந்த முயற்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதனையும் நீண்டகாலமாக தொடரும் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை எட்டும் முகமாக நிலவும் சூழ்நிலைமையை சாதகமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்திக் கூறினார்.

 

இந்த நாட்டினை ஒரு புதிய பாதையில் கொண்டுசெல்லும் நோக்கில் புதிய அரசியல் யாப்பானது இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன் அவர்கள், இந்நாட்டினை முன்னேற்றமான பாதையில் இட்டு செல்வதா? அல்லது மீண்டும் பின்னோக்கி நகர்த்துவதா? என்பதே இன்றுள்ள தெரிவுகளாகும், நாட்டினை முன்னேற்றமான ஒரு பாதையில் இட்டு செல்ல வேண்டுமேயாகில் ஒரு புதிய அரசியல் யாப்பினை நிறைவேற்றுவது இன்றியமையாததாகும் என்றும் இரா. சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தினார்.

 

நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள், தமது பிரச்சினைகளுக்கு தாம் எதிர்பார்த்த உடனடி நிவாரணங்கள் கிடைக்காமையால் மக்கள் விரக்தி அடைந்திருப்பதனையும், விசேடமாக மக்கள் பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலம் வாழ்ந்த நிலங்களை  ஆயுத படையினர் கைவசப்படுத்தி வைத்துள்ளதனையும் இவற்றினை விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிக மந்த கதியில் இடம்பெறுவதனையும் எடுத்துக் கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் அவர்கள் இவர்களின் உறவினர்கள் தொடர்ந்தும் தங்கள் அன்புக்குரியர்வர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஒரு நிலையற்ற நிர்க்கதி நிலைமையில் இருக்க முடியாது என்பதனையும் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்திய அதேவேளை எமது மக்கள் பல மாதங்களாக இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் இந்த விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எமது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வண்ணம் இல்லை எனவும் எடுத்துக்கூறினார்.

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் நாட்டு மக்களுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்த கூடிய நடவடிக்கைகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

 

Press Release

 

The Visiting Belgium-Sri Lanka Parliamentary Friendship Group met with the Leader of the Opposition and the Tamil National Alliance today at the office of the Leader of the opposition in parliament.

 

Briefing the delegation Mr Sampanthan highlighted that the present Sri Lankan Constitution is not enacted based on consensus. The processes of enacting a new Constitution which recognizes the multi-ethnicity and pluralistic nature of this country has begun and the draft Constitution will be placed before the steering committee on this Wednesday. Further speaking Mr Sampanthan said that he wants the processes to succeed and there are opportunities for this process to succeed and we should take maximum use of the prevailing circumstances to find a permanent solution to this longstanding national question.   

Mr Sampanthan stressed that the new Constitution must be adopted before the end of this year to take this country on a new journey. Further, he said that the country is faced with a choice either to take the country forward or to drag the country backwards. If they want the country to move forward in every aspect then it is inevitable that they adopt a new Constitution he said.

Speaking on the reconciliation process, Mr Sampanthan highlighted that the people are not happy as they do not receive early relief for their problems. He brought to the notice of the delegation of a number of issues faced by the Tamil people in the North and East. Highlighting the large extent of lands occupied by the armed forces Mr Sampanthan said People have lived in these lands for generations and centuries and they want their lands back, but the progress in this matter has been very slow.

 

On the issue of Missing persons, Mr Sampanthan said people want to know as to what has happened to their loved ones and people cannot live in uncertainty forever. The truth must be ascertained said Mr Sampanthan. Our people are staging a protest for a number of months regarding these matters, but the progress made in these matters are not up to the expectations.

 

Appreciating the EU role in the past Mr Sampanthan appealed to the delegation to impress upon the government to take the necessary steps to cure its ways to prevent adverse impacts on its people in the future.

 

The Delegation led by Hon (Prof) Ms Petra De Sutter, Senator, President of the Belgium – Sri Lanka Parliamentary Friendship Group comprised of Hon Ms Ozlem Ozen, Member of the House, Vice President of the Belgium – Sri Lanka Parliamentary Friendship Group, Hon. Georges Dallemagne, Member of the House, Vice President of the Belgium – Sri Lanka Parliamentary Friendship Group, Hon. Alain Destexhe Senator, Member of the Belgium – Sri Lanka Parliamentary Friendship Group, hon Andries Gryffroy Senator, Member of the Belgium – Sri Lanka Parliamentary Friendship Group, Mr Marc Jolling, Secretary of the Inter-Parliamentary Union Office in the Belgium Federal Parliament, and the Belgium Ambassador to Sri Lanka His Excellency Jan Luykx.