ஒத்திவைப்பு வேளை பிரேரணை

கௌரவ சுமந்திரன் அவர்களால் 06/07/2018 அன்று முன்னெடுக்கப்படவுள்ள பிரேரணை

2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் 3 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதனால் மேற்கூறிய 3 மாகாண சபைகளினதும் தேர்தல்கள் இன்று வரை நடைபெறாதுள்ள அதேவேளை,

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் மேலும் மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதுடன்,

தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் இன்னும் முடிவடையாதுள்ளதனால் எந்தவொரு மாகாண சபைக்கும் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

தேர்தல் சட்ட விதிகளின் திருத்தமானது உடனடியாக செய்து முடிக்கப்பட வேண்டிய தேவை இதனால் எழுகின்றது. இதன் மூலம் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் உரிமைகள் மேலும் மறுக்கப்படாமல் செய்ய முடியும்.

மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளின் சீர்திருத்தத்தை உடனடியாக மேலும் தாமதமின்றி செய்து முடிக்குமாறு நாம் அரசை வலியுறுத்துகின்றோம்.

எதிர்வரும் 2 மாதங்களிற்குள் இந்த சீர்திருத்தங்களை செய்யத் தவறும் பட்சத்தில் 2017 ஆம் ஆண்டின் மாகாண சபை (திருத்தம்) சட்டம் இல.17 உடனடியாக நீக்கப்படுவதன் மூலம் தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க அரசை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

எம்.ஏ.சுமந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் (யாழ்ப்பாண மாவட்டம்)

04/07/2018

 

 

Adjournment Motion

 

To be moved by Hon M A Sumanthiran on 06/07/ 2018

 

Whereas the terms of office of 3 Provincial Councils came to an end in October 2017.

 

And whereas no election to the said three councils have been conducted to date owing to the fact that the Provincial Council Elections Act was amended in order to introduce reforms to the electoral process.

 

And whereas three more Provincial Councils will end their respective terms of  office by October 2018.

 

No election to any Provincial Council can be held due to the fact that the electoral reforms are not yet complete.

 

An urgent priority has arisen to complete the electoral reforms so that the franchise of the people of the several provinces are not denied any further.

 

We urge the government complete the electoral reforms to the Provincial Councils election laws immediately without any further delay.

 

And if it is not possible to complete the said reforms within the next two months, we urge that the Provincial Councils (Amendment) Act No. 17 of 2017 be repealed immediately so that elections to the provincial councils can be held without any further postponement.

 

M A Sumanthiran

Member of Parliament

(Jaffna District)

04/07/20018