தமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள்  பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும். அதற்கு நாம் இட­ம­ளிக்கக் கூடாது. நாம் அனை­வரும் ஒற்­று­மை­யாக ஒரு­மித்து ஓர் தூணாக நிற்க வேண்டும்  என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்பந்தன்  தெரி­வித்தார்.

வட முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வ­ரனது உரைகள் அடங்­கிய ‘நீதி­ய­ரசர் பேசு­கின்றார்’ என்ற நூல் வெளி­யீ­டா­னது நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந் நிகழ்வில் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­யாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர்  தொடர்ந்து  உரை­யாற்­று­கையில்,

எம்­மி­டையே வேறு­பட்ட கருத்­துக்கள் இருக்­கலாம். நாம் வேறு­பட்­டி­ருக்­கலாம். அவற்றை நாம் பேசித் தீர்த்­துக்­கொள்ள வேண்டும். நாம் ஒற்­று­மை­யாக நிற்க வேண்டும். ஒரு­மித்து நிற்க வேண்டும். தமிழ் மக்­க­ளது ஒற்­று­மை­யா­னது தம்­மு­டைய தலை­வி­தியை மாத்­தி­ர­மின்றி இந் நாட்டின் தலை­வி­தி­யையே மாற்றும் என்பதை வெளிக்காட்டியுள்ள நாம் அதனை எப்­போதும் பாது­காக்க வேண்டும்.

தமிழ் மக்­களின் உரி­மைகள் அவர்­களின் உரித்­துக்கள் இலங்கை அர­சாங்­கத்தால் மறுக்­கப்­பட்ட காலத்தில் அதனை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஆயு­த­மேந்­திய தமி­ழீழ விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்கு உத­விய சர்­வதே­சத்­துக்கு,   தமிழ் மக்­களின் நீண்ட கால இனப் பிரச்­சி­னைக்­கு­ரிய தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கு­ரிய தார்­மீக கடமை உள்­ளது என்­பதை புரிந்­து­கொண்டு செயற்­பட வேண்டும்.

நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வரன் ஆற்­றிய உரைகள் ஆழ­மான கருத்­துக்­க­ளையும்  சிறப்­பான கருத்­துக்­க­ளையும் பல்­வேறு விட­யங்கள் சம்பந்­த­மாக அவ­ரது அறிவின் அடிப்­ப­டை­யிலும்  செயலின் அடிப்­ப­டை­யிலும் அமைந்­துள்­ளன.  இந் நிகழ்வில் பலர் தமிழ் மக்கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சினை தொடர்­பாக பேசி­யி­ருந்­தார்கள். அதா­வது அவர்கள் பேசிய விடயம் தமிழ் மக்­க­ளது இனப்பிரச்­சினை க்கு தீர்வு பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் என்­ப­தாகும்.

சாதா­ர­ண­மாக ஒரு நாடு சுதந்­திரம் அடைய முன்பு அந் நாட்டில் வாழ்­கின்ற மக்­களின் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வா­னது முன்­வைக்­கப்­பட்டு அந்த தீர்­வுகள் ஒரு அர­சியல் சாச­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்டு அவை நட­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆனால் துர­திர்ஷ்ட வச­மாக இலங்­கையை பொறுத்தவரையில் அவ்வித­மாக நடை­பெ­ற­வில்லை. அவ்­வாறு நடை­பெற்­றி­ருந்தால் 1948 இலங்கை சுதந்­திரம் அடையும் போது தமி­ழர்­க­ளது தேசிய பிரச்­ச­ினைக்கு தீர்வு காணப்­பட்­டி­ருக்கும்.

இது தொடர்­பாக நான் சில விட­யங்­களை கூற வேண்டும்.  நாடு சுதந்­திரம் அடைய முன்பு இங்கு வந்த டொனமூர் ஆணைக்­குழு முன்பு கண்­டிய தலை­வர்கள் கருத்­துக்­களை கூறும் போது, இந் நாட்டில் சமஷ்டி ஆட்சி முறை ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனக் கூறி­னார்கள். ஆனால் அதனை நாம் ஏற்­க­வில்லை. யாழ்ப்­பா­ணத்து இளைஞர் கழகம், தமக்கு  பூரண சுதந்­திரம் கேட்­டது. அதா­வது சிறு­பான்மை இனத்­த­வ­ருக்கும் பெரும்­பான்மை இனத்­த­வ­ருக்கும்  ஐம்­ப­துக்கு ஐம்­பது கேட்டோம்.  ஆனால் பிராந்­திய ரீதி­யான அதி­கா­ரங்­களை நாம் ஒரே நாட்­டுக்குள் கேட்­க­வில்லை.

தமிழ் மக்கள் தாம்  மிகவும் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்த பிர­தே­சங்­களில் எமது உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில் எமது இறை­யாண்­மையின் அடிப்­ப­டையில் பிராந்­திய சு­யாட்சி வேண்டும் என்று கேட்­க­வில்லை. நாங்கள் நாடு பூராக ஐம்­ப­துக்கு ஐம்­பது கேட்டோம். பிராந்­திய சுயாட்சி கேட்­டி­ருந்தால் இந்த பிரச்­ச­ி னையை அப்­போது தீர்த்­தி­ருக்­கலாம். ஆனால் கேட்­க­வில்லை. இதனால் பிரச்­சினைகள் இப்­போதும் தொடர்­கின்­றன.

நாடு சுதந்­திரம் அடைந்த பிற்­பாடு முதல் நட­வ­டிக்­கை­யாக இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிரஜா உரிமை பறிக்­கப்­பட்­டது. பெரும்­பான்மை இன மக்கள் தமிழ் பிர­தே­சங்­களில் குடி­யேற்­றப்­பட்­டார்கள். கிழக்கு மாகா­ணத்தின் தோற்றம் மாற்­ற­ம­டைந்­தது. அது தற்­போது வடக்கு மாகா­ணத்தில் இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அது நிறுத்­தப்­பட வேண்­டிய விடயம். இவ்­வி­த­மான கரு­மங்­களை, நாங்கள் பிராந்­திய சுயாட்­சி­யுடன் அதி­கா­ரங்­களை பெற்­றி­ருந்தால் தவிர்த்­தி­ருக்­கலாம். அது முடிந்த கதை. இதனை கதைப்­பதால் எந்த பிர­யோ­ச­னமும் வரப்­போ­வ­தில்லை.

இன்­றுள்ள பிரச்­சி­னையை எதிர்­நோக்க வேண்டும். நாடு பூரா­கவும் உள்ள மக்கள் இதனை என்ன வித­மாக பெறப் போகின்றோம். சர்­வ­தேச ரீதி­யாக என்­ன­வி­த­மாக அணுகப் போகின்றோம். வட­கி­ழக்கில் இதனை என்னவித­மாக அணு­கப்­போ­கின்றோம் என்­பன  தொடர்­பாக முடி­வெ­டுக்க வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.

இன்று நாட்டில் எல்லா மாகா­ணங்­களும் கூடிய அதி­கா­ரங்­களை கேட்­கின்­றன. காணி அதி­காரம், சட்ட ஒழுங்கு அதி­காரம் என கேட்­கின்­றார்கள். அந்த விட­யத்தில் நாம் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்றோம். இவை தவிர மத்­திய அர­சாங்­கத்தின் தலை­யீடு இருக்கக்கூடாது எனவும், ஆளு­நரின் அதி­கா­ரங்கள் கட்­டு­ப்ப­டுத்­தப்­பட வேண்டும் எனவும்  கேட்­கின்­றார்கள். அண்­மையில் தென்­மா­காண முத­ல­மைச்சர் ஆளுநர் பதவி நீக்­கப்­பட வேண்டும் என கூறி­யி­ருக்­கின்றார்.

இந்­நி­லையில் நாங்கள் யாரையும் பகைக்க வேண்­டி­ய­தில்லை. எல்­லோ­ரு­டனும் நட்­பு­றவை பேண வேண்டும். நியா­யத்தை நீதியை விளக்க வேண்டும். பல்­வேறு நாடு­களில் பல இனம் வாழ்­கின்ற நிலையில் அங்கு எவ்­வி­த­மான ஆட்­சி­மு­றையை பின்­பற்­றி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதை விளக்க வேண்டும். அதனை தென்­ப­குதி மக்கள் அறிய வேண்டும். அதனை தற்­போது அவர்கள் அறிந்­து­கொண்டு வரு­கின்­றார்கள். தென்­ப­குதி மக்கள் எல்­லோரும் துவே­ச­மா­ன­வர்கள் இல்லை. துவே­ச­மா­ன­வர்கள் இருக்­கின்­றார்கள். ஆனால் அவர்கள் பெரும்­பான்­மையில் இல்லை.

இன்று ஒரு அர­சியல் சாச­னத்தை உரு­வாக்க ஒரு முயற்சி நடை­பெற்று  வரு­கின்­றது. அத­னூ­டாக நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வினை எட்­டு­வ­தற்கு வழி­யி­ருக்­கு­மாக இருந்தால் அந்த சந்­தர்ப்­பத்தை நாம் பயன்­ப­டுத்த வேண்டும். அதனை இழக்க கூடாது. எங்­க­ளு­டைய பங்­க­ளிப்பை செய்ய வேண்டும். அடிப்­படை விட­யங்­களை நாம் அதற்­காக விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது. ஆனால் நாங்கள் ஈடு­பட்டு எமது மக்­க­ளுக்கு உரிய பாது­காப்பை, அவர்­க­ளுக்கு உரிய உர­ிமை­களை அங்­கீக­ரிக்கக்கூடிய வழி இருந்தால் அதனை நாம் இழக்கக்கூடாது. அதனை நாம் தெளி­வாக புரிந்­து­கொள்ள வேண்டும்.

சர்­வ­தேச சமூ­கத்தின் பொறுப்பு

இலங்கை பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கு­சர்­வ­தேச சமூ­கத்­திற்கு ஒரு தார்­மீக கடமை இருக்­கின்­றது. 1987ஆம் ஆண்டு  ராஜிவ்   காந்­தியின் தலை­யீட்­டி­னா­லேயே 13ஆவது அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட்டு மாவட்ட சபை­களே பெற முடி­யாத எமக்கு மாகாண சபைகள் வழங்­கப்­பட்டு வட கிழக்கு இணைக்­கப்­பட்டு பல்­வேறு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டன, முத­ல­மைச்சர் அமைச்­சுக்கள் உரு­வாக்­கப்­பட்டு பல கரு­மங்கள் நடை­பெற்­றன. ஆனால் அதனை நாம் நிரந்­தர தீர்­வாக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

அண்ணன் அமிர்­த­லிங்கம் நான், உட்­பட மூவர் கையொப்­ப­மிட்டு ராஜீவ் காந்­திக்கு 1987ஆம் ஆண்டு எழு­திய கடிதத்தில் தெளி­வாக  மாகாண சபை ஒரு தீர்­வாக அமைய முடி­யாது என குறிப்­பிட்டோம். நாம் நிரந்­த­ர­மான தீர்வு நோக்கி பய­ணிக்­கின்றோம்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே தமி­ழீழ விடு­தலைப் புலிகள் எமது மக்கள் சார்­பாக அவர்­க­ளது உரி­மை­க­ளுக்காக தீவி­ர­மான ஆயுத போராட்­டத்தை நடத்­தி­னார்கள். அந்த முயற்­சியில் அவர்கள் வெற்­றி­பெ­ற­வில்லை. அந்த முயற்­சியில் நீதி நியாயம் இருந்தது. அது மறுக்­கப்­பட முடி­யாது.  தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாத நிலையில் அவர்கள் உரிமை உரித்­துக்கள் வழங்­கப்­ப­டாத நிலை­யி­லேயே ஆயு­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தார்கள்.

அதனை எல்­லோரும் ஏற்­றுக்­கொண்­டார்கள். சர்­வ­தேச சமூ­கமும் ஏற்­றுக்­கொண்­டது. ஆனால் தமி­ழீழ விடு­தலைப்போராட்­டத்தை ஓர் முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு சர்­வ­தேச சமூகம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு உத­வி­யது. இந்­தியா, அமெ­ரிக்கா, ஜரோப்­பிய ஒன்­றியம், ஜக்­கிய இராச்­சியம், கனடா, அவுஸ்­திரே­லியா ஆகிய நாடுகள் உத­வின. இந்த நாடு­களில் தமி­ழீழ விடு­தலைப்  புலிகள் தடை செய்­யப்­பட்­டார்கள். அதனால் இலங்கை அர­சாங்கம் தமி­ழீழ விடு­தலைப் புலி­களை இல­கு­வாக தோற்­க­டித்­தது.

இதனை எல்­லோரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். சர்­வ­தேச சமூகம் அவர்­களை அழிக்க முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யது. இந்த அடிப்­ப­டையில் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு ஓர் வாக்­கு­று­தியை கொடுத்­தது. நியா­ய­மான அர­சியல் தீர்வை நாம் ஏற்­ப­டுத்­துவோம் என்ற வாக்­கு­று­தியை கொடுத்­தது.

அது மாத்­தி­ர­மல்ல தமி­ழீழ விடு­தலைப் புலிகள் செயற்­பட்ட காலத்தில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு பல முன்­மொ­ழி­வு­களை வைத்­தது. அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக இவற்றை முன்­வைத்­தார்கள். அவ்­வி­த­மான தீர்­விலே இலங்கை அர­சாங்கம்  இன்­று­வரை பின்­னிற்­கின்­றது. இதனை சர்­வ­தேச சமூகம் புரிந்­து­கொள்ள வேண்டும்.

இலங்­கையில் தமிழ் மக்­க­ளது நீண்­ட­கால இனப் பிரச்­ச­ினையை தீர்ப்­பதில் சர்­வ­தே­சத்­திற்கு தார்­மீக கடமை இருக்­கின்­றது என்­பதை சர்­வ­தேச சமூகம் புரிந்­து­கொள்ள வேண்டும். இலங்­கையில் வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வினை காண்­ப­தற்கு தங்­க­ளது பங்­க­ளிப்­பினை செய்ய வேண்டும் என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும். இதில் அவர்கள் தவற முடி­யாது. இதில் அவர்கள் தவ­றினால் அவர்­க­ளு­டைய செயற்­பாடு சர்­வ­தேச ரீதி­யாக அர்த்­த­மற்­ற­தாக போய்­விடும்.

தமிழ் மக்­களின் ஒற்­றுமை

எல்­லா­வற்­றிற்கும் மேலாக இவற்றை நாம் அடை­வ­தாக இருந்தால் நாம் ஒரு­மித்து நிற்க வேண்டும். ஒரு தூணாக நிற்க வேண்டும். அதனை பெரும்­பான்­மை­யினர் உணர வேண்டும். பெரும்­பான்­மை­யின  ஆட்­சி­யா­ளர்கள் உணர வேண்டும். 2015ஆம் ஆண்டு  ஜன­வரி 8 ஆம் திகதி நாம் வழங்­கிய தீர்ப்பு நாட்­டிற்கு பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ் மக்கள் தமது ஒற்றுமையின் மூலமாக தம்முடைய தலைவிதியை மாத்திரமல்ல இந்த நாட்டின் தலைவிதியையே நிர்ணயிக்கக் கூடிய வல்லமை அவர்களிடம் இருக்கின்றது என்பதை நாம் அவர்களிடம் காட்டியிருக்கின்றோம். அந்த நிலைமை தொடர வேண்டும். அந்த ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.

எம்மிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். நாம் வேறுபட்டிருக்கலாம். அவற்றை நாம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். ஒருமித்து நிற்க வேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கு, தமிழ் மக்களின் ஆதரவை தாம் பெற வேண்டும். அவர்களை தாம் தொடர்ந்தும் புறக்கணிக்க முடியாது. தமிழ் மக்களின் ஆதரவை பெற்றால் தான் நாம் ஆட்சிக்கு வர முடியும் என்ற சிந்தனை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். இதனைக்கூற வேண்டியது எனது கடமை. அதனை நாம் பாதுகாக்க ஒற்றுமையாக ஒருமித்து நிற்க வேண்டும். நாம் பிரிவோமானால் எமது மக்களை நாம் அழிப்போம். அதற்கு நாம் இடமளிக்க கூடாது. நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றார்.

 

Source: http://www.virakesari.lk/article/35492