கடலட்டை பிரச்சனை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனின் முகப்புத்தக பதிவு பின்வருமாறு :

 

கடலட்டை பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அத்துமீறி இரவு நேரத்தில் கடலட்டை பிடியில் 100 கணக்கன படகுகள் ஈடுபட்டன. அவற்றில் 3 படகினை முன்எச்சரிக்கையாக கட்டைக்காட்டு மக்களுடன் இனைந்து நள்ளிரவு 11 மணியளவில் பிடித்து இன்று காலை 10மணியளவில் நீரியல் மீன்பிடி தினைக்கள அதிகாரகளூடாக நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் மக்களுடன் நானும் சயந்தன் அண்ணா, தம்பி பிரசாத், தம்பி நெல்சன், பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை தலைவர் உட்பட்டோரும் பங்குபற்றி இருந்தோம். கடற்படையினரால் மேற்கொள்ள வேண்டிய வேலையினை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். எனியும் சம்மந்த பட்டோர் சரியான நடவடிக்கை எடுக்காவிடின் வடமராட்சி கிழக்கின் ஒவ்வரு பிரதேச மக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இன்றய நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றிகள்

Image may contain: sky and outdoor

Image may contain: sky, car, tree and outdoor