வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக அரச தலை­வர் சிறப்­புச் செய­லணி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அர­சி­தழ் கடந்த 4ஆம் திகதி அரச தலை­வ­ரின் பதில் செய­லர் சுமித் அபே­சிங்­க­வி­னால் வெளி­யி­டப்­பட் டுள்­ளது.

வடக்கு அபி­வி­ருத்­திக்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், அரச அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய சிறப்­புச் செய­லணி அமைக்­கப்­ப­டும் என்று, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல கத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில் உரை­யாற்­றும்­போது தெரி­வித்­தி­ருந்­தார்.

இதன் பின்­னர் கடந்த மார்ச் மாதம் முற்­ப­கு­தி­யில் மட்­டக்­க­ளப்­பில் உரை­யாற்­றிய அரச தலை­வர், வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­கான செய­லணி அமைக்­கப்­ப­டும் என்று கூறி­யி­ருந்­தார்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் வடக்கு – கிழக்க மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக அரச தலை­வர் சிறப்­புச் செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. 48 பேர் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­து­டன், இதன் செய­ல­ராக வே.சிவ­ஞா­ன­சோதி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

‘போரின் பின்­னர் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை மீளாய்வு செய்­வ­தற்­கா­க­வும் மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வும் அர­சால் ஆரம்­பிக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி வேலை­க­ளுக்­கான வழி­காட்­டல்­கள் மற்­றும் ஆலோ­ச­னை­களை வழங்­க­வேண்­டும் என்­பது எனக்கு தெரிய வந்­துள்­ள­தா­லும் தேசிய ஒற்­றுமை மற்­றும் ஒரு­மைப்­பாடு, சம­நி­லைப் பொரு­ளா­தார மற்­றும் சமூக ரீதி­யி­லான வரு­மா­னத்­தின் விருத்­திக்­காக அபி­வி­ருத்­திச் செயற்­பாட்­டின் மூலம் அணு­கு­வது இன்­றி­மை­யா­த­தெ­னக் கரு­தப்­ப­டு­வ­தா­லும் இந்­தச் செய­ல­ணியை நிய­மிக்­கின்­றேன்’ என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால அர­சி­த­ழில் தெரி­வித்­துள்­ளார்.

அரச தலை­வ­ரி­னால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள செய­ல­ணி­யின் உறுப்­பி­னர்­கள், வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திப் பணி­களை நெறிப்­ப­டுத்­தல், கூட்­டி­ணைத்­தல் மற்­றும் தொட­ராய்வு செய்­தல் வேண்­டும்.

செய­ல­ணி­யின் பணி­க­ளாக 7 விட­யங்­க­ளும் அரச தலை­வ­ரால் பட்­டி­யல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் தற்­போது செயற்­ப­டுத்­தப்­ப­டும் பல்­து­றை­சார் நிகழ்ச்­சித் திட்­டங்­கள் மற்­றும் கருத்­திட்­டங்­க­ளின் முன்­னேற்ற நில­மையை மீளாய்வு செய்­தல்.

முன்­னு­ரிமை அவ­தா­னம் தேவைப்­ப­டும் துறை­கள் மற்­றும் குழுக்­களை இலக்கு வைக்­கும் புதிய திட்­டங்­களை முன்­னெ­டுத்­த­லும் நிதி வளங்­களை அளித்­த­லும்.

மாகா­ணங்­க­ளின் அனைத்து அபி­வி­ருத்­திச் செயற்­திட்­டங்­க­ளி­லும் தேவை­யான போது தலை­யி­டு­தல், வழி­காட்­டு­தல்.

மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளில் முத­லீடு செய்து நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக தனி­யார் துறை மற்­றும் பல்­த­ரப்பு அபி­வி­ருத்தி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வை­யும் பங்­கேற்­பை­யும் ஊக்­கு­வித்­த­லை­யும் பெற்­றுக்­கொள்­ளல்.

அர­சுக்­கும் மாகாண நிறு­வ­னங்­க­ளுக்­கும் இடை­யே­யும் அரச மற்­றும் தனி­யார் துறை­க­ளுக்கு இடை­யே­யும் மற்­றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள், சிவில் சமூ­கத் துறை­க­ளுக்கு இடை­யே­யும் பணி­களை ஒருங்­கி­ணைப்­புச் செய்­தல்.

மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளின் நடை­மு­றைப்­ப­டுத்­தல் பற்­றிய ஒட்­டு­மொத்த கண்­கா­ணிப்பை நிறை­வேற்­று­தல்.

மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை துரி­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தடை­யாக இருக்­கின்ற ஏதே­னும் தடை­களை இனங்­கண்டு, அவற்­றைத் தவிர்த்­துக் கொண்டு, துரித தீர்­வு­கள் தொடர்­பாக உரிய அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வுரை வழங்­கல், என்­பன குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இந்­தச் செய­லணி உரிய பணி­களை முன்­னெ­டுக்க சகல உத­வி­க­ளை­யும் சகல தக­வல்­க­ளை­யும் வழங்­க­வேண்­டும் என்று அரச பணி­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் அரச தலை­வர் பணிப்­புரை விடுத்­துள்­ளார்.http://newuthayan.com/story/09/வடக்கு-கிழக்கு-அபிவிருத்திக்காக-அரச-தலைவர்-சிறப்புச்-செயலணி.html