பங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தலைமையிலான குழுவினருக்குமிடையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு வைத்து பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி ஒன்றையும் வழங்கியிருந்தார்.

அந்த செவ்வியில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவிக்காத நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தலைமையிலான குழுவினர் இன்று எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்கள்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்இ அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முதற்கட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்த தயாராகவுள்ளதாக குறிப்பிட்டார்.

 

http://www.ibctamil.com/politics/80/101326