இர­ணை­தீ­வில் போரா­டி­வ­ரும் குடும்­பங்­க­ளைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் நேற்­றுச் சென்று பார்­வை­யிட்­ட­னர். அவர்­க­ளுக்கு தற்­கா­லிக கொட்­டகை அமைப்­ப­தற்­காக கிடு­கு­கள் மற்­றும் தண்­ணீர் பெற ஏற்­பா­டு­கள் செய்­வ­தா­க­வும் கூட்­ட­மைப்­பி­னர் உறு­தி­ய­ளித்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை
சோ.சேனா­தி­ராசா, சி.சிறி­த­ரன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் த.குரு­கு­ல­ராஜா, கரைச்சி, பூந­கரி பிர­தேச சபை­க­ளின் தவி­சா­ளர்­கள் உள்­ளிட்ட பல­ரும் தொண்டு அமைப்­பி­ன­ரும் நேற்­றுச் சென்­றி­ருந்­த­னர்.

கூட்­ட­மைப்­பி­ன­ரும், தொண்டு நிறு­வ­னத்­தி­ன­ரும் அங்கு போரா­டும் மக்­க­ளுக்கு உல­ரு­ண­வு­களை வழங்­கி­னர். அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னர். அவர்­கள் தண்­ணீர் எடுத்­து­வ­ரும் தூரம் அதி­கம் என்­ப­தால் லான்­ம­மாஸ்­ர­ரு­டன் தண்­ணீர் தாங்கி (பெரல்) ஒன்­றை­யும் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும், தற்­கா­லிக கொட்­டில்­களை அமைக்­கத் தேவை­யான கிடு­கு­களை வழங்க ஏற்­பாடு செய்­வ­தா­க­வும் மற்­றும் சில தேவை­க­ளை­யும் நிறை­வேற்­று­வ­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உறு­தி­ய­ளித்­த­னர்.

இர­ணை­தீ­வில் கடந்த 12 நாள்­க­ளாக அவர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

Source: http://newuthayan.com/story/90479.html