தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை மையப்படுத்திய விடயங்களை கவனத்தில் கொண்டே  உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையில் மாற்றம் இல்லை என தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரித்ததாவது,

தற்போது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது மாத்திரம் பிரச்சினை அல்ல. அரசியல் தீர்வு போன்வற்றையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். இவற்றுக்கு ஒன்றாக தீர்வினைப் பெற்றுக்கொள்ள கூடிய வகையிலான அரசியல் அமைப்பு தொடர்பாகவே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

1978 ஆம் ஆண்டு நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை கொண்டுவரப்பட்டது. எனினும் 1948 ஆம் ஆண்டு முதல் தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்றது. இவை அனைத்தையும் தீர்க்கும் வகையிலான அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையில் 20 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் எதிர்வரும் திங்கட் கிழமை பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்துரையாடிய பின்னரே தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியும் என்றார்.

 

http://www.virakesari.lk/article/33107