தலைவர்தனதுஅறிமுகத்திலேயேஊடகங்களால்விமர்சிக்கப்படுகின்றவர், ஊடகங்களைவிமர்சிப்பவர்எனக்கூறியிருந்தார். இத்தலைப்பில்என்னைபேசஅழைத்தபோதுதேர்தல்கூட்டங்களில்உதயன்உட்படமூன்றுவெவ்வேறுபத்திரிகைகளைதூக்கிக்காட்டிதவறானசெய்திஎனபேசியஒருவனானஎன்னைஇப்படியொருபேச்சுக்குதுணிந்துஅழைத்திருக்கிறார்களோஎனயோசித்தேன். ஊடகங்களின்செல்நெறியும்ஊடகங்கள்பயணிக்கவேண்டியதிசையும்என்றதலைப்பில்பேசும்போதுஉதாரணங்களின்றிபேசமுடியாது. அதிலும்உதயன்பத்திரிகைகளுக்குஎதிரானஉதாரணங்களையேகூடுதலாகசொல்லதலைப்படுகின்றேன். இதுஉள்வீட்டுவிவகாரம், நீங்களேஅழைத்துள்ளீர்கள், நாங்கள்எங்களையேவிமர்சனம்செய்வதுநல்லது. ஆகையால்வெளிநின்றுபேசுபவனாகஅல்லாமல்உதயன்குடும்பத்தில்சேர்ந்துநின்றுபேசவிழைகிறேன்., பொதுவெளியில், நீதிமன்றிலேஉதயனுக்காகவாதாடுகிறவனும்நான்தான்என்றவகையில் அதற்கானதகுதியும்உரித்தும்சற்றுஎனக்குஇருக்கின்றதுஎன்பதால்அந்தஉரித்தோடுசிலஉண்மைகளையும்பகிரலாமெனநினைக்கின்றேன்.

இன்றுகாலையிலேஒருபத்திரிகைசெய்தித்தலையங்கம்போட்டுள்ளது- ‘முஸ்லீம்மக்கள்விவகாரம்- தலைப்பில்ஏற்பட்டதவறுக்குவருந்துகின்றோம்’ என28ம்திகதிஇடப்பட்டதலையங்கத்துக்குமனம்வருந்தி இன்று(02.05.2018) ஒருபிரசுரம்வந்துள்ளது. கிழக்கில்தமிழர்களுக்குஎதிராகதலைதூக்கும்முஸ்லீம்இனவாதம்(முஸ்லீம்இனவாதம்- சிவப்பெழுத்தில்) என்றுதலைப்பிட்டதுக்குநான்குநாட்களின்பின்இன்றுமனம்வருந்துகிறார்கள்.

அதன்பின்னணியைசற்றுஆராய்ந்துபார்த்தல்இப்பத்திரிகைகிழக்கிலேசிலஊர்களிலே விற்பனைசெய்யப்படதடைவிதிக்கப்பட்டபிறகு  இந்தமன்னிப்புக்கோரல்இன்றுபிரசுரமாகியுள்ளது. அப்பிரசுரத்தைசற்றுவாசித்துப்பார்த்தால்28ம்திகதிபிரசுரிக்கப்பட்டசெய்திஎங்களுடையதல்லஎனஅவ்வாசிரியர் கூறுகிறார். ஓர்பத்திரிகையின்முதன்மையானமுற்பக்கத்தில்சிவப்பெழுதில்’முஸ்லீம்இனவாதம்’ எனஇடப்படும்செய்திக்குபொறுப்பேற்காமல்அதுஎங்களுடையசெய்திஅல்லஎன்றுகேவலமானமுறையிலேமன்னிப்புக்கோரியுள்ளார் அவ்ஆசிரியர். இதுஇன்றையதமிழ்ப்பத்திரிகைகளிலேஇருக்கின்றவருத்தத்திற்குரியஇலட்சணமாகஇருக்கிறது.

இன்னொருசிறியஉதாரணத்தையும்கூறவிழைகிறேன். அண்மையில்ஒரேதினத்தில்யாழில்வெளிவந்தமூன்றுபத்திரிகைகளின்செய்திகள்இவை. (1) பெண்போலிஸுக்குபிளேட்வெட்டு(2) பெண்கான்ஸ்டபிள்கத்திக்குத்தில்காயம். (3) பெண்போலீசார்மீதுபுத்தூர்சந்தியில்வாள்வெட்டு. ஒரேநாளில்வெளிவந்தமூன்றுபத்திரிகைகளில்ஒன்றில்  ‘பிளேட்வெட்டு’ இன்னொன்றில்   ‘கத்திக்குத்து’  மற்றயதில்’வாள்வெட்டு’ என்றிருந்தால்எதாவதுஒன்றுதானேஉண்மையாகஇருக்கலாம்? அல்லதுமூன்றுமேபொய்எனவேநினைக்கத்  தோன்றும். அல்லதுமூன்றுபத்திரிகைகூறுவதால்எதோஒன்றுஇருக்கிறது, ஆனால்விபரங்கள்எதுவும்உண்மையில்லைஎன்றுதான்நினைக்கதோன்றும். இப்படியொருபத்திரிக்கைக்கலாசாரத்தில்தான்நாங்கள்வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இன்னொருஉதாரணம்; தந்தைசெல்வாநினைவுஉரையைஅண்மையில் கலாநிதி.விக்கிரமபாகுபரணாரட்னகடந்த26ம்திகதிநடத்தியிருந்தார். 27ம்திகதிஅவரதுபேச்சுபத்திரிகைகளில்பிரசுரமானது.  அந்நிகழ்வில்இருந்தவன்என்றரீதியிலும், அவர்சிங்களத்தில்பேசியதைசரியாகவிளங்கிக்கொண்டவன்என்றரீதியிலேயும், அதைதமிழிலேசிவகுருநாதன்சரியாகமொழிபெயர்த்ததையும்  விளங்கிக்கொண்டவன்என்றரீதியிலும்அந்தப்பத்திரிகைகளில்வந்தசெய்தியைபார்த்தபோதுஅவைஎனக்குசரியாகவே  பட்டது. ஆனால்அதற்கடுத்தநாள்28ம்திகதிஉதயன்பத்திரிகையில்வந்தஆசிரியர்தலையங்கம்’தனிநாட்டுக்கானகோரிக்கைஇன்னும்தணியவில்லையே’ எனஇருந்தது. அதைப்படித்துப்பார்த்தால், கலாநிதி.விக்கிரமபாகுபரணாரட்ன, ‘தனிநாட்டுக்குகோரிக்கையைநீங்கள்கைவிடக்கூடாது’ என்றுதனதுஉரையிலேசொன்னாராம்.  ஒன்றுக்குமூன்றுதடவைஅவ்வாசிரியர்இவ்வாறுசொல்லுகின்றார். அதையும்விட, அவரேதெற்கிலிருந்துவந்துஇப்படிசொல்லுகின்றார், இங்குள்ளவர்கள்அதைநாங்கள்கைவிட்டுவிட்டோம்எனஎப்படிச்சொல்லலாம்என்றதோரணையிலே  அவ்வாசிரியர்எழுதியுள்ளார், இவ்வளவுசெம்மையாக நான்செவிமடுத்தபேச்சிலேஎதையாவதுதவறவிட்டுவிட்டேனோ!? இருமொழிகளிலும்நான்கேட்டேன். ஒருதடவைநான்உதயன்பத்திரிகையில்தவறொன்றைசுட்டிக்காட்டியிருந்தபோதுமொழிபெயர்ப்பாளர்மீதுகுறைபோட்டுவிட்டார்கள்.

இவ்வாறுஇருக்கநான்சென்றுஅவர்ஆற்றியிருந்தஉரையின்காணொளியைமூன்றுதடவைகள்முழுமையாகசெவிமடுத்தேன். அதவாதுசிங்களம், பின்தமிழில்மொழிபெயர்ப்புஎனமொத்தமாகஆறுதடவைகள்கேட்டுப்பார்த்தபோதுஒருதடவையேனும்அவர்அப்படிச்சொல்லவில்லை. தெளிவாகதமிழரசுஎனகூறுகின்றார்ஆனால்ஒவ்வொருதடவையும்தமிழரசுஎன்பதுடன்சேர்த்துசமஷ்டிஎனசொல்லுகிறார். இவ்வாறுசமஷ்டிஅமைப்பிலானதமிழரசுஎன்பதைதெளிவாகஅவர்கூறியிருக்க, சிவகுருநாதனும்அதைசரியாகவேமொழிபெயர்த்திருக்க, தமிழரசுஎன்றதனிநாட்டுக்கோரிக்கையைநீங்கள்கைவிடக்கூடாதுஎனஅவர்கூறியதாகஆசிரியர்தலையங்கத்திலேஇவ்வாசிரியர்எழுதியுள்ளார். அக்கூட்டத்திற்குவந்தவர்கள்சொற்பஎண்ணிக்கையானவர்கள். ஆசிரியர்தலையங்கத்தைவாசிக்கும்மக்கள்அநேகர்உள்ளனர். அவர்கள்என்னநினைப்பார்கள்? விக்கிரமபாகுகருணாரட்னதெற்கிலிருந்துஇங்குவந்துதனிநாட்டுக்கோரிக்கையைகைவிடவேண்டாம்என்றுசொல்லிவிட்டுபோயுள்ளார்எனவேநினைப்பர். அவர்அவ்வாறுசொல்லிவிட்டுசென்றிருந்தால்எனக்குஅதில்பிரச்சனையில்லை. ஆனால்சொல்லாததைசொன்னார்எனக்கூறுவதில்எனக்குநிறையபிரச்சனைகள்உள்ளன.

இன்றுபத்திரிகைசுதந்திரநாள். இதைஊடகசுதந்திரநாள்என்றும்சொல்வர். பத்திரிகைக்குஏன்சுதந்திரம்இருக்கவேண்டும்? எதற்காக? உண்மையைசொல்வதற்காகவேசுதந்திரம்இருக்கவேண்டும். அதுவேபத்திரிகைக்கானசுதந்திரம். பொய்யைசொல்வதற்கானசுதந்திரம்சுதந்திரமல்ல. அதுபொய்! சுதந்திரம்எனும்சொல்லோடுஎதிர்மறையான(negative) சிந்தனையைசேர்க்கமுடியாது. பொய்சொல்வதற்கானதுஎன்பதுசுதந்தரமல்லமாறாகஉண்மையைசொல்வதற்கேசுதந்திரம்! ஆகவேபத்திரிகைசுதந்திரநாளிலேபத்திரிகைகளின்  செல்நெறியும்பயணிக்கவேண்டியபாதையும்எனஒருதலைப்பைஎன்னிடத்தில்கொடுத்தால்நான்விசேஷமாகதமிழ்ப்பத்திரிகைகளுக்குசொல்வது- நீங்கள்சென்றுகொண்டிருக்கும்பாதையிலிருந்து180 பாகைதிரும்பிநடவுங்கள். அப்போதுதனஉங்கள்பத்திரிகைகளைநீங்கள்சுதந்திரமாகநடத்துவீர்கள்.

180 பாகைதிரும்பவேண்டும்!  பொய்சொல்லுவதுசுதந்திரமல்ல, பத்திரிகைசுதந்திரமும்அல்ல!. தெரிந்துகொண்டேசொல்லுவதுமோசமானகுற்றம்.

அண்மையில்உதயன்ஆசிரியரிடம்கேட்டேன், நான்நேற்றுபத்திரிகையாளர்மாநாட்டில்ஆற்றியஉரையில்நான்சொன்னதாகஒருவாக்கியம்போட்டுள்ளீர்களே, நான்அப்படிச்செல்லவேஇல்லையேஎன்று.  நான்ஈ.பி.டீ.பியோடுபேரம்பேசவில்லைஎன்றெல்லாம்நான்கூறியதாகபோடப்பட்டிருந்தது. அந்தச்சொற்களையேநான்உபயோகிக்கவில்லை. காணொளிபதிவுகள்இதற்குஆதரமாகஉள்ளது. பார்த்துஉறுதிசெய்துகொள்ளுங்கள். ஒருவர்சொன்னதாகசொல்வதுஒருவகை. இன்னொன்றுஒருவர்கூறுவதைமாற்றமின்றி   அப்படியேமேற்கோள்குறிகளுக்குள்இட்டுகூறுவது. நான்சொன்னதைகவனமாகஒப்புவிக்கவேண்டும்என்பதுகூறுவதுபோலமேற்கோள்குறிகளினுள்எழுதியுள்ளார்.. ஆனால்அதில்ஒருசொல்லுக்கூட  நான்சொன்னசொல்இல்லை. (அவர்  பின்னர்அது தவறுதான்எனகூறிஎன்னோடுபேசியிருந்தார்)அதெப்படிவந்தது?! இல்லாத  ஒன்றுமேற்கோள்குறிகளுக்குள்புகுந்துவந்துமக்களிடத்தில்அனுப்பப்படுவதன்நோக்கம்என்ன?

மேமுதலாம்திகதிநிகழ்வுதொடர்பாக நானும், நண்பர்துரைராஜசிங்கமும்ஊடகசந்திப்பொன்றைநடத்திவர்த்தகநிலையங்களும்ஏனையவர்களும்எமக்குஒத்துழைக்குமாறுஓர்கோரிக்கையைமுன்வைத்துபேசுமாறுதலைவர்சேனாதிராஜாஅவர்கள்கூறியிருந்தார், அவ்வாறே  அதேஊடகசந்திப்பில்நாம்எம்கருத்துக்களைகூறினோம். பேசும்வரைஅமைதியாககமராவைபோட்டுவிட்டுஅமர்ந்திருந்தஊடகவியலாளர்கள்முடிந்தவுடன்அவர்கள்வைத்திருந்தகேள்விகளைகேட்டிருந்தனர். அடுத்தநாள்பத்திரிகைகளைபார்த்தால்நாம்சொன்னமுக்கியமானவிடயங்கள்எந்தப்பத்திரிகைகளிலும்  இருக்கவில்லை. உதயனில்கடைசிஒருவரியில்மட்டும்இருந்தது. வேறு எந்தப்பத்திரிகையிலும்நாம்எதற்குஊடகசந்திப்புநடத்தினோமோஅந்தச்செய்திஇருக்கவில்லை. நான்பின்னர்ஒவ்வொருபத்திரிகைஆசிரியர்களையும்ஒவ்வொருவராகதொடர்புகொண்டுநாம்நடத்தியஊடகசந்திப்பின்நோக்கத்தைகூறிஅதைபிரசுரிக்குமாறுவேண்டியிருந்தேன். அடுத்தநாள்உதயன்முற்பக்கத்திலும்ஏனையபத்திரிகைகள்வெவ்வேறுஇடத்தலும்பிரசுரித்துஇருந்தனர்.

நான்கூறவருவதுஎன்னவென்றால், அவ்ஊடகசந்திப்பில்வழமையாககேட்கவேண்டியஅவர்களின்அதேசிலகேள்விகளையேகேட்டுஅவற்றையேஅடுத்தநாள்பிரதானசெய்திஎன்றனர். அதிலும்ஒருகேள்வியைதிரும்பத்திரும்பக்கேட்டனர்-  ‘வடமாகாணத்துக்கானமுதலமைச்சர்வேட்பாளர்யார்?’. அதற்குநான்சொன்னபதில்எந்தப்பத்திரிகையிலும்இடம்பெறவில்லை. நான்ஒருபதில்கேள்வியைகேட்டிருந்தேன். என்னருகில்கிழக்குமாகாணத்தின்முன்னாள்விவசாயஅமைச்சர்துரைராஜசிங்கம்அவர்கள்அமர்ந்திருந்தார். கிழக்குமாகாணசபைசெயலிழந்துஒருவருடமாகிவிட்டநிலையில்அதற்கானதேர்தலைஉடனடியாகவைக்கஅழுத்தம்கொடுப்பீர்களா? உங்களதுகிழக்குமாகாணமுதலமைச்சர்வேட்பாளர்யார்? என்றவாறானகேள்விகளைஏன்ஒருநாள்கூடஎந்தஊடகமும்கேட்கவில்லை? உங்களுக்குகிழக்குமாகாணம்வேண்டாமா? வெறுமனேவடகிழக்குஇணைப்புஎன்பதைஒருகோஷமாகமட்டும்போட்டுக்கொண்டும்  வடகிழக்குஇணைப்புசாத்தியமில்லைஎனஇவர்கூறிவிட்டார்என்பதைமட்டும்கோடிட்டுகாட்டிக்கொண்டும்இருப்பதுதானாஉங்கள்வேலை? உங்களுக்குஅதுபற்றிஎந்தஅக்கறையுமில்லையா? எனக்கேட்டிருந்தேன். அதைபிரசுரித்துஇருக்கதானேவேண்டும்! ஆனால்இல்லை!

கிழக்குமாகாணத்தைக்குறித்துஇதுவரைகாலமும்கரிசனைஇல்லை. அதைக்குத்திக்காட்டியபின்னும்  அக்கரிசனைவரவில்லைஎன்பதில்என்னதெரிகின்றது?  கிழக்குமாகாணத்தைப்பற்றிஇவர்களுக்குஉள்ளஇரட்டிப்பானகரிசனையின்மையேதெரிகின்றது. இப்படியாகஇருந்துகொண்டுவடகிழக்குஇணைப்புவேண்டுமாம். இன்றைக்குகிழக்கில்முஸ்லீம்மக்களேவட-கிழக்குஇணைப்புவேண்டாம்என்கின்றனர். ஆனால்கிழக்கின்கணிசமானதமிழ்மக்களும்வட-கிழக்குஇணைப்புவேண்டாம்எனகூறஆரம்பித்துவிட்டனர். வெகுநாள்செல்லமுன்பேஉங்களின்இக்கரிசனையின்மையால்பெரும்பான்மையானகிழக்குவாழ்தமிழ்மக்களேஇதைசொல்லநேரிடும். நாங்கள்சொல்லும்யதார்த்தநிலைக்காகஅல்ல.- உங்கள்கரிசனையின்மையால்! எல்லாவற்றிற்கும்வடக்கு, ஆனால்கோஷத்திற்குமட்டும்,வடகிழக்குஇணைப்புவேண்டும்! இணைக்கவிரும்புகின்றநாம்அதற்கானவழிகளைபின்பற்றுகின்றபோது, ஆ.. அதுவேறு, அதைதொட்டுகூடப்பார்க்ககூடாதென்கிறனர்.

தமிழ்பேசும்முஸ்லீம்மக்களோடுஇணங்கித்தான்வடகிழக்குஇணைப்புசத்தியம்எனநான்சொன்னால்- அதைநான்இப்போதுதிரும்பவும்சொல்லுகிறேன்! வடகிழக்குஇணைப்புவேண்டும்எனும்காரணத்தினாலேயேஇதைசொல்லுகிறேன். ஆனால்அந்தஉறவைபாதிக்கும்வகையில்  செயற்படுபவர்கள்தான்வடகிழக்குவேண்டாம்எனும்பாணியில்பேசிக்கொண்டுகோஷம்மட்டும்எழுப்பிக்கொண்டுஇருப்பவர்கள். பத்திரிகைகளும்இதற்குஉடந்தை. நான்எப்போதும்சொல்வது’இப்போதைக்குவடகிழக்குஇணைப்புசாத்தியமில்லை’ என்பதே. ஆனால்’இப்போதைக்கு’ எனும்வார்த்தையைவிட்டுவிடுவார்கள். நான்இப்போதைக்குசாத்தியமில்லைஎனகூறுவதுஅந்தஉறவுதிருத்தப்படவேண்டும், அவர்களும்இணங்கிவரவேண்டும்என்றகாரணத்துக்காகவே. அதற்கானமுன்னெடுப்புக்களைமேற்கொண்டுவருகின்றோம்.  வடகிழக்குஇணைப்பைஎதிர்க்காதகட்சியொன்றுடன்  இம்முறைதேர்தலில்கூடஇணைந்துபோட்டியிடலாமாஎனபரிசீலித்துபார்த்தோம்.  ஏனெனில்வடக்கில்அவர்கள்மட்டுமேவடகிழக்குஇணைப்பைஎதிர்க்காதஒருமுஸ்லீம்கட்சி. அவ்வாறுசெய்திருந்தால்இவர்களோடுகூட்டுசேர்ந்துவிட்டனர்எனஆர்ப்பாட்டம்பண்ணிஇருப்பார்கள்.

ஈ.பி.டீ.பிஉடன்கூட்டுசேர்ந்துவிட்டனர்எனபத்திரிகைகளேகூறிக்கொண்டுஇருக்கிறது-  நாங்கள்அசொல்லவில்லை. அண்மையில்கூட  ஆதரங்களைவெளிப்படுத்திஅதைஉறுதிசெய்யுமாறுசவால்விடுத்திருந்தேன். யாரவதுவெளிப்படுத்தினார்களா? ‘அவர்களோடுஇருந்துபேச்சுவார்த்தைநடத்தினீர்களா?’ என்றகேள்விக்குஎனதுபதில்’அவர்களோடுஇருந்துபேச்சுவார்த்தைநடத்துவதற்குஅவர்கள்ஒன்றும்பெரியஆக்களில்லை’ என்பதே. ஆனால்ஊடகங்கள்அவர்களோடுபேசவில்லைஎனஎழுதியிருந்தது. பேசவில்லைஎன்பதற்கும்பேச்சுவார்த்தைநடத்தவில்லைஎன்பதற்கும்  வித்தியாசம்தெரியாதஊடகங்கள்!

மகிந்தராஜபக்சவுடன்நாங்கள்பேசினோம். 2011 ம்ஆண்டுஜனவரிமுதல்டிசம்பர்வரை  மகிந்தராஜபக்சவுடன்18 சுற்று  பேச்சுவார்த்தைகளை  நாங்கள்  நடத்தியதுஎதாவதுதரப்போகிறார்என்றநம்பிக்கையிலா? அனாலும்அந்தநேரத்தில்பேசவேண்டாம்என்றுயாரும்சொல்லவில்லையே.

ஸ்ரீன்நல்லாட்சிபற்றிசொன்னவுடனேயேதலைவர்சேனாதிராஜாஅருகிலிருந்துசொன்னது அவ்வாறுநாங்கள்  சொல்வதில்லையே  என்பதே.  எனக்கும்மனதில்வந்ததுஅதுதான். நான்ஒருநாளும்இவ்வரசங்கத்தைநல்லாட்சிஅரசாங்கம்எனகூறியதில்லை. ஆனால்மக்கள்மத்தியில்நாங்கள்இதைநல்லாட்சிஅரசாங்கம்எனக்கூறுவதாகஒருபிரம்மைஏற்படுத்தப்பட்டுள்ளது. நான்இவ்வரசங்கத்தைநல்லாட்சிஅரசாங்கம்என்றுசொல்லிஇருக்கின்றேனாஎனஎங்கேயும்போய்தேடிப்பாருங்கள்.

2015ம்ஆண்டுதேர்தலின்முன்நானும்தலைவர்சேனாதிராஜாவும்பல்வேறுஇடங்களில் நடாத்தியபல்வேறுமக்கள்சந்திப்புகளில்ஒன்றானஅம்பாறைகனகர்கிராமத்தில்நடாத்தியசிறியசந்திப்பில், ஓர்சிறுபையன்எழுந்துகூறினான், ‘ஐயா, மஹிந்தவும்எங்களுக்குஎதிரி, மைத்ரியும்எங்களுக்குஎதிரி. ஆனால்எங்களுக்குஅவசரமாகஒருஎதிரிமாற்றம்தேவையாகஇருக்குதைய்யா’ என்று. இதைத்தான்நாங்களும்மேடைமேடையாககூறிவந்தோம். அதைஎந்தபத்திரிகையும்போடவில்லைபோல. ஏன்அந்தஎதிரிமாற்றம்தேவைஎனநான்இன்றைக்குகேட்டாலும்நியாப்படுத்துவேன்.

தேர்தலுக்குமுன்கனடாபத்திரிகைஒன்றுஎன்னிடம்கேட்டபோதுநான்கூறியது, ‘வீடுபற்றி எரிகிறது, வீட்டுக்குள்இருப்பவர்கள்  எழும்பிஓடவேண்டும்என்றுகேட்க்கிறார்கள். அதுவேஇந்ததேர்தல்- அதாவதுஎரியும்வீட்டிற்குள்ளிருந்துவெளியேஓடுவது. ஆனால்ஓடவேண்டாம், அதற்குள்ளேயேஇருந்துசாவுங்கள்என்பவர்களேஅதைபகிஷ்கரிக்கசொல்லுபவர்கள்’ எனச்சொன்னேன். எரியட்டும்எரிந்துசா. அவ்வாறுசெத்தால்இனஅழிப்புக்குஎமக்குகூடுதலானஆதாரம்கிடைக்கும்எனச்சொல்பவர்களே  தேர்தலைபகிஷ்கரிக்கசொல்லுபவர்கள். அதைகனடாஊடகங்களில்போட்டிருந்தாலும்இங்குயாரும்போட்டதாகதெரியவில்லை.

இந்தஅரசாங்கத்தைநாங்கள்கொண்டுவந்தோம்என்பதுபற்றியவிமர்சனங்களைஏற்றுக்கொள்கின்றோம். ஏனெனில்இவ்அரசாங்கம்சொன்னசொல்லக்காப்பாற்றவில்லை. அதைநாமும்பாராளுமன்றத்திலும்எல்லாஇடத்திலும்அவர்களிடத்தில்சொல்லி  வருகின்றோம். ஆனால்2005 ம்ஆண்டுமகிந்தராஜபக்சவைஆட்சிக்குகொண்டுவந்ததுயார்எனஎந்தபத்திரிகையாவது கேட்டுள்ளதா? கேட்கதுணிவிருக்கின்றதா? ஆனால், 2015ம்ஆண்டுமகிந்தராஜபக்சவைவீட்டுக்குஅனுப்பியதாதவறு? இல்லாததைவாய்க்குள்திணித்து, சொன்னதைசொல்லாமல்விட்டுகொண்டிருக்காமல்உண்மையைஒழுங்காக  வெளிகொண்டுவந்தால், சிறப்பு!

 

‘உண்மைதான்உங்களைவிடுவிக்கும்’ என்பதுகிறிஸ்தவவேதவாக்கியமாகும். அதுதான்சுதந்திரம். உண்மையைஎழுதுவதுதான்ஊடகசுதந்திரம். உண்மையைசோனாலாவதுஎழுதவேண்டும். செல்நெறிஎன்பது  சொல்லுவதைதிரிபுபடுத்தாமல்எழுதுவதே.இதுஅடிப்படையானவிடயம்.

 

ஈ.பி.டீ.பியிடம்மண்டியிட்டுவிட்டதுகூட்டமைப்பு- ஒருநாள்ஒருபத்திரிகையின்தலையங்கம்இது. அதிலிருந்துகிளம்பியதுதான்தலைவர்சொன்னஆதங்கம்.நாங்கள்கூட்டாகஆட்சிஅமைத்துள்ளோம்என்பதற்குஒருசபையாவதுகாட்டுங்கள்பார்ப்போம். அவர்கள்எங்களைகவிழ்த்ததைநான்மூன்றுநாலுசபைகளில்காட்டுவேன். நான்தேர்தலுக்குஅடுத்தநாளேசொல்லியிருந்தேன், இத்தேர்தல்முறையில்நிர்வாகத்தைஅமைக்கும்முறையிலுள்ளசிரமங்கள்காரணமாகவும், இவைமக்களுக்குசேவையாற்றவேண்டியசபைகள்  என்பதன்காரணமாகவும், ஓர்சபையில்எவருக்குகூடுதலானஆசனங்கள்உள்ளதோ அக்கட்சிஅங்குநிர்வாகத்தையமைக்கஏனையகாட்சிகள்இடங்கொடுக்கவேண்டும்என்று. இதற்குபலபொதுநிறுவனங்கள்ஒன்றிணைந்துஆதரவானஅறிக்கைகளைவெளியிட்டிருந்தனர். நடுநிலையாளர்களும்மற்றகட்சிகளோடுபோய்பேசினார்கள். ஆனால்அவ்வாறுநடக்கவில்லையே.வேலணையில்எமக்கு  கூடுதலானஆசனங்கள்இருந்தும்மஹிந்தராஜபக்சதரப்போடு  சேர்ந்துஈ.பி.டீ.பிஅதைத்தட்டிப்பறித்தது. அதைவிடமோசமானசெயலொன்றையும்செய்யபார்த்தனர், கரவெட்டியில்நமக்குகூடுதல்ஆசனங்கள்இருந்தநிலையில், ஸ்ரீலங்காசுதந்தரகட்சியோடுஇணைந்துஅச்சபையைதாங்கள்எடுப்பதற்கல்ல, எடுத்து ஸ்ரீலங்காசுதந்தரகட்சியிடம்கொடுக்கமுயன்றார்கள். நல்லகாலம்அதுசரிவரவில்லை. யாழ்ப்பாணசபையிலும்அதற்காகபோட்டியிட்டனர். ஆனால்முதலாவதுபத்திரிகை ஈ.பி.டீ.பியிடம்  மண்டியிட்டுவிட்டது  கூட்டமைப்பு  என்றுகூறிவிட்டதால்  நாம்  திரும்பதிரும்ப இவ்வுண்மைகளை சொன்னாலும்அவைகாதிலேறுவதில்லை.

கூட்டமைப்புக்குபின்னடைவுஎன்பதைநாங்களுமேசொல்கின்றோம், அதைநாங்கள்ஆராயவேண்டும். ஆங்கிலப்பத்திரிகைஒன்றில்வந்த கட்டுரையையேஒருதமிழ்பத்திரிகைதமிழ்ப்படுத்திபோட்டிருந்தனர்ஒழியவேறுஎவரும்ஆராயவில்லை. எங்களிடமிருந்துவெளியேசென்றவாக்குகள்எங்குசென்றுள்ளதுஎன்பதுஆராயவேண்டியமுக்கியகேள்வி. ஆராய்ந்தால்மூன்றில்ஒருபகுதிஅகிலஇலங்கைத்தமிழ்க்காங்கிரஸிடம்போயிருக்கின்றது. மிகுதிமூன்றில்இரண்டுஎங்கே? ஈ.பி.டீ.பியிடம்போயுள்ளது. இவ்ஒன்றரைவருடகாலஇடைவேளையில்ஈ.பி.டீ.பியின்வாக்குவாங்கிஇரட்டித்துள்ளது. ஈ.பி.டீ.பியிலிருந்துவிலகிகிளிநொச்சியில்40 சதவீதவாக்குகளைப்பெற்றசந்திரகுமாரின்வாக்குகளையும்சேர்த்தால், அகிலஇலங்கைத்தமிழ்க்காங்கிரஸைவிட  ஈ.பி.டீ.பிகூடுதல்  வாக்குகளைபெற்றுள்ளது.மிகுதியானவாக்குகள்தேசியக்கட்சிகளானஐக்கியத்தேசியக்கட்சிக்கும், ஸ்ரீலங்காசுதந்தரகட்சிக்கும்மேலும்சிலதமிழர்விடுதலைக்கூட்டணிக்கும்சென்றுள்ளது. இதைஏன்ஆராய்ந்துதமிழ்மக்களின்மனத்திலுள்ளதைஅறியயாரும்முன்வரவில்லை? சிலபத்திரிகைகள்ஆராய்ந்துள்ளனஎனும்நல்லவிடயத்தையும்கூறிக்கொள்கின்றேன்..

பெரும்பான்மையானஎண்ணக்கருவைமக்களிடத்தில்ஏற்படுத்துவதுஅதிரடிதலையங்கங்களாகும். தலைப்பிற்கும்உள்ளடக்கத்திற்கும்சிலவேளைகளில்தொடர்புகண்டுபிடிக்கமுடியாதிருக்கும். வேறுஒருசெய்தியின்தலையங்கத்தைதவறுதலாகஇதற்குபோட்டுவிட்டனரோஎனவும்நான்நினைத்ததுண்டு. ஊடகங்களின்கொள்கைஅதாவதுஅடிப்படைசெல்நெறிஎன்னவாகஇருக்கவேண்டுமென்றால்அதுஉண்மையைபேசுதல்தான். வேறொன்றுமேஇல்லை.சிலமிகஅரிதானசந்தர்ப்பங்களில், நாட்டில்குழப்பம்ஏற்படவாய்ப்பிருந்தால்உண்மையைசொல்லாமல்விடவேண்டியதேவைப்பாடுஇருக்கும்  – அதுமிகஅரிதே.

இத்தனைபத்திரிகையாளர்களின்மரணத்தைகுறித்துஇதுவரையில்ஒருவிசாரணைகூடஆரம்பிக்கவில்லை. கடந்த28ம்திகதிமட்டக்களப்பில்ஒருபேரணியொன்றுநடத்தப்பட்டுசிவராமின்கொலைக்கானவிசாரணைஆணைக்குழுவொன்றுநியமிக்கப்படவேண்டும்எனவலியுறுத்தியுள்ளார்கள். நாங்கள்சிவராம்மற்றும்எனையோருக்கானநீதிவேண்டும்என்றுநேற்றுமேதினத்தன்றும்ஏனையபொழுதிலும்சொல்லிவருகின்றோம். சிலருக்குஇதில்ஓரிருவரின்கொலைகளைவிசாரிப்பதற்குவிருப்பமில்லை. இதைச்செய்தவர்கள்இப்போதுஎங்களோடுதானேஉள்ளனர்என்றஆதங்கமும்உண்டு. எங்களோடுஇருந்தாலென்ன எழுகதமிழில்இருந்தாலென்னகுற்றவாளிகண்டுபிடிக்கப்படத்தான்  வேண்டும்.  உண்மைகண்டறியப்படவேண்டும்என்பதில்ஊடகங்கள்அழுத்தத்தைச்செலுத்தவேண்டும். உதயன்வருடாந்தம்இந்நிகழ்வைநடாத்துவதுபாராட்டுக்குரியவிடயம்ஏனெனில்உண்மையின்அடிப்படையிலானநீதிகிடைக்கும்வரைஇந்நினைவுமாறாமல்இருக்கவேண்டும்.

லசந்தவிக்ரமதுங்கவினுடையமரணத்தின்பின்9 வருடங்களாகியும்இன்னமும்இழுபடுகின்றது. சி.ஐ.டிநீதிமன்றிற்குகொடுத்தஅறிக்கைகளைவாசித்துப்பார்த்தால்முன்னாள்பாதுகாப்புசெயலாளர்இரண்டுமூன்றுதடவைகைதுசெய்யப்பட்டுஇருக்கவேண்டும்என்பதுதெரியும். யாருக்குகீழ்இதுநடந்ததென்பதுஎழுத்தில்போடப்பட்டுள்ளது.

கீத்நோயர்  உடையதாக்குதல்யாருடையஉத்தரவின்பேரில்நிகழ்ந்ததென்பதும்சி.ஐ.டிநீதிமன்றிற்குசொல்லியிருக்கின்றதுஎனினும்அதுவும்இன்னமும்நகரவில்லை. லசந்தவிக்ரமதுங்ககொலைசெய்யப்படமுன்னர்முன்னாள்பாதுகாப்புசெயலாளர்சண்டேலீடர்பத்திரிகைக்குஎதிராக2 வழக்குகள்தாக்கல்செய்திருந்தார். ஒன்றிலே, இனிமேல்என்னைப்பற்றிஅவதூறாகபிரசுரிக்ககூடாதுஎனஇடைக்காலஉத்தரவுகூடப்பெற்றிருந்தார். லசந்தபடுகொலைசெய்யப்பட்டவுடனேஅப்பத்திரிகைக்காகஆஜரானசட்டத்தரணிகள்பயந்துவிலகிவிட்டதால்வேறுசட்டத்தரணிகளிடத்தில்கொடுக்கப்பட்டது. முதல்நாள்நீதிமன்றில்லசந்தவின்இறுதிஆசிரியர்தலையங்கம்வெளிவந்ததன்  பின்கோத்தபாயராஜபக்சவினுடையசட்டத்தரணிகள்பெரியசத்தமிட்டு  இவர்கள்இடைக்காலதடைஉத்தரவைமீறிஇவ்வாறுபிரசுரித்துளார்கள்எனகூறியவுடனேஅந்தசட்டத்தரணிகளும்அடுத்தநாள்வரமறுத்துவிட்டதன்விளைவாகஎன்னிடத்தில்அவர்கள்வர, நான்தனஅதைபொறுப்பெடுத்துநடத்தினேன். முதல்நாள்நான்அவ்வழக்கில்ஆஜராகிவிட்டுவீடுதிரும்பும்போதுபாதுகாப்புஅமைச்சினுடையஉத்தியோகஇணையதளத்தில்எனதுபடத்தையும்என்னோடுஆஜரானஇளம்சட்டத்தரணிகளின்படத்தையும்போட்டுகறுப்புக்கோட்போட்டதுரோகிகள்(traitors in black coat ) எனஒருகட்டுரைவந்தது.அதுஇருவாரகாலமாகஅதிலிருந்துபின்சட்டத்தரணிகள்சங்கத்தின்முறைப்பாட்டைதொடர்ந்துநீக்கப்பட்டது. அதற்குஎதிர்ப்புதெரிவிக்கும்வண்ணமாகஅடுத்தநாள்நான்ஆஜரானபோதுஎன்னோடுசேர்ந்து33 சட்டத்தரணிகளும்ஆஜரானார்கள்.  அந்தவழக்கிலேகோத்தபாயராஜபக்சவைதலா3 மணித்தியாலங்கள்படிஇருதடவைகள்நான்குறுக்குவிசாரணைசெய்தேன். அதைஎந்தப்பத்திரிகையும்பிரசுரிக்கவில்லை.. இன்றுவரைபிரசுரிக்கவில்லை! ஏனென்றால்  டி.ஐ.ஜிஅனுரசேனநாயக்கநீதிமன்றவாசலில்நின்றுஒருஊடகவியலாளரையும்உள்ளேசெல்லஅனுமதிக்கவில்லை. தப்பித்தவறிவந்தோரையும்வெளியேஅனுப்பிவிட்டனர். உத்தியோகபூர்வநீதிமன்றநடவடிக்கை(proceedings)  வெளிவந்தபின்புகூடஎந்தபத்திரிகையும்அதைபிரசுரிக்கவில்லை.

 

உதயன்பத்திரிகைக்குஎதிராககூட8  மானநஷ்டவழக்குகள், முன்னாள்இராணுவதளபதிஅவர்இவர்எனபலர்- தாடிவைத்தவேட்டிக்காரனும்கூடபோட்டுள்ளனர். அவரையும்நான்பலதடவைகளில், ஏறத்தாழ7 நாட்கள்  குறுக்குவிசாரணைசெய்துள்ளேன்.  அவர்இந்தியாவில்செய்ததாகசொல்லப்பட்டவிடயங்களுக்குசரவணபவன்இந்தியநீதிமன்றில்திரட்டிவந்தபதிவுகளையெல்லாம்அவரிடம்காட்டிசூலமேட்டுச்சம்பவம்- தேடப்படும்குற்றவாளிஎன்பதையெல்லாம்காட்டிகுறுக்குவிசாரணைசெய்துள்ளேன். எதாவதுபத்திரிகையில்வெளிவந்ததா?? உதயனில் கூடஅப்பிடிஇப்பிடித்தான்வந்துது. உதயன்போடாததற்குகாரணம்இருக்கலாம்.

இன்றைக்குமிகமோசமானஅடக்குமுறைக்கு, தாக்குதலுக்குஉள்ளாக்கப்பட்டபத்திரிகைசங்கம்என்றால்உதயன்தான். அதில்மாற்றுக்கருத்துகிடையாது. 41 தரம்என்றுஷ்ரீன்சொன்னார். 21 தடவைநேரடியாகவேஅலுவலகத்துக்குள்ளேயேவந்துதாக்கப்பட்டஒரேநிறுவனம். வேறுஎந்தஊடகநிறுவனத்திற்கும்கிட்டகூடவரமுடியாது. அடக்குமுறைகாலத்தில்உதயன்பத்திரிக்கையைச்சேர்ந்தவர்கள்6 பேர்கொல்லப்பட்டார்கள், இன்றுவரைஒருவர்காணாமல்போயிருக்கிறார். இத்தகையஇழப்புவேறஎந்தஊடகநிறுவனத்திற்கும்வந்ததில்லை. அப்படியானஊடகநிறுவனத்தைதங்களுடையஆட்சிக்காலத்திலேயேவழக்குவைத்துமுடக்கிவிடலாம், பெரியதொகையிலேயேநஷ்டஈடுபெற்றுவிடலாம்என்றுஒருமுன்னெடுப்புசெய்யப்பட்டபோதுசகோதரஊடகநிறுவனங்கள்என்னசெய்தன? ஒருவரும்வரவில்லை, காரணம்ஊடகங்களுக்குள்போட்டி. உதயன்இவ்வாறுதுணிந்துஇவருக்குஎதிராகசெய்ததுஎன்றுசொன்னால், உதயனைஅதிகம்வாங்கிவிடுவார்களே, உதயனிற்குபெருமைகூடிவிடும்என்பதனால்ஒருவரும்போகவில்லை. நானும்மற்றபத்திரிகைகளிடம்கேட்டுப்பார்த்தேன்இவ்வாறுஊடகத்திற்குஎதிராகஒருவழக்குஉள்ளதுஎன்பதைப்பற்றி, ஆனால்ஒருவசனம்கூடஇதைப்பற்றிஎழுதமாட்டார்கள்.

 

அரசியல்வாதிகள்வாக்குகளுக்காகபொய்பேசுகிறவர்கள், அதுஉண்மை. பொய்பேசாவிட்டால்மிகவும்விமர்சிக்கப்படுவார்கள், அதுவும்உண்மை. ஆனால்இன்னொருஉண்மையும்உள்ளது. பத்திரிகைகளும்விற்பனைக்காகபொய்எழுதுகிறவர்கள். மக்களுக்குஇதுவிருப்பமாகஇருக்கும்என்பதற்காக. ஒருதடவைபத்திரிக்கைஒன்றுமுதலமைச்சர்விக்னேஸ்வரன்முதலமைச்சராகபதவியேற்றபோது, அந்தநாட்களில்அவரின்சந்திப்புக்கள்எல்லாவற்றிற்கும்அவரோடுகூடப்போவதுநான்தான். அவரோடுஅன்றைக்கிருந்தஆளுணரைச்சந்திக்கப்போயிருந்தேன். யாரிற்குமுன்னால்சத்தியப்பிரமாணம்செய்வதென்றகேள்விஎழுந்தது. அவர்தனக்குமுன்னால்எடுக்கவேண்டுமென்றுசத்தியப்பிரமாணம்எல்லாம்அடித்துவைத்திருந்தார். நான்சொன்னேன்அதுவெளியில்இருக்கும்ஒருJP முன்னால்கூடசெய்யலாம்ஆனால்உங்களுக்குமுன்எடுக்ககூடாதுஎன்பதல்லஎங்கள்நிலைப்பாடு. ஜனாதிபதியோடுகட்சித்தலைவர்பேசிஒருமுடிவுக்குவருவார்என்றுசொல்லிவிட்டுவந்தேன். வெளியில்வந்துஅதைத்தான்ஊடகங்களுக்குச்சொல்லிவிட்டுவந்தேன். அடுத்தநாள்தலையங்கம், “உங்களுக்குமுன்னால்சத்தியப்பிரமாணம்செய்யவேமாட்டோம், அடித்துக்கூறினார்விக்கி”. குறித்தபத்திரிக்கையின்ஆசிரியருக்குநான்நேரடியாகவேஇதுதான்நடந்ததென்றுசொல்லியிருந்தேன். நான்அந்தஆசிரியரைக்கூப்பிட்டுகேட்டேன்நான்தானேஉனக்குசெய்திசொன்னேன், நான்இவ்வாறுஏதும்சொன்னேனாஎன்று. அவர்சொன்னார், சொல்லவில்லைஆனால்இவ்வாறுபோட்டால்தான்மக்களுக்குவிருப்பமாகஇருக்கும். அதுஅவர்சொன்னஉண்மை, ஆனால்பத்திரிக்கையில்பிரசுரித்ததுபொய். ஏனெனில்மக்களின்காதிற்குஇனிதாகஇருக்கும்என்றுநினைக்கின்றவிடயங்களைசொன்னால்பத்திரிகையும்விற்பனையாகும். இன்னும்இரண்டுஉதாரணங்களைசொல்லிமுடிக்கிறேன்.

ஒன்றுஐக்கியநாடுகள்மனிதஉரிமைபேரவைசம்பந்தமானசிலவிடயங்களைஷ்ரீன்சொல்லியிருந்தார். 30/1 நிறைவேற்றப்படவேண்டும்என்பதுதான்எங்களின்நிலைப்பாடு. 30/1 இதுவரைநிறைவேற்றப்படவில்லை, இனிநிறைவேற்றப்படவேண்டுமெனில்எப்பொழுதுநிறைவேற்றுவது? நேற்றா, இல்லையேஇன்றுதான்நிறைவேற்றவேண்டும். அதைத்தான்நாங்கள்சொன்னோம்காலஅவகாசம்என்பதுதவறானவார்த்தைப்பிரயோகம். இதை108 தடவையாகஇன்றைக்குநான்சொல்கிறேன். சர்வதேசமேற்பார்வைநீடிக்கப்படுகிறதுஎன்பதுதான்சரியான, உண்மையானநிலைப்பாடு. 2017ம்ஆண்டுமார்ச்மாதம்இன்னொருதீர்மானம்34/1 நிறைவேற்றப்பட்டிருக்கவிட்டால் சர்வதேசமேற்பார்வைஅன்றோடுமுடிந்திருக்கும். முடியக்கூடாது, சர்வதேசமேற்பார்வைஇன்னும்இரண்டுவருடங்களுக்குநீடிக்கப்படவேண்டும்என்றநிலைப்பாட்டைத்தான்நாங்கள்திரும்பதிரும்பச்சொன்னோம். ஆனால்இன்றைக்கும்ஊடகங்கள்என்னஎழுதுகிறது, இரண்டுவருடஅவகாசம்வாங்கிகுடுத்தார்கள்என்று. இதுமுற்றிலும்தவறானகருத்து. இன்றைக்கும்நாங்கள்நிறைவேற்றப்படவேண்டும்என்றநிலைப்பாட்டில்தான்இருக்கிறோம். ஷ்ரீன்குதெரியும், ஃபெப்ரவரிமாதம்நானும்ஜெனீவாவிற்குபோயிருந்தேன், அவருடையஅமைப்பிலிருந்துஅவரும்ஒருவரைஅனுப்பியிருந்தார். நாங்கள்இருவரும்26 நாடுகளின்பிரதிநிதிகளோடுபேசினோம். அவர்களிடம்நான்சொன்னேன், இதுமுழுமையாகநிறைவேற்றப்படவேண்டும்என்றஅழுத்தத்தைகொடுங்கள்என்று.

 

 

இரண்டாவதுசர்வதேசஈடுபாடு. இளவரசர்செய்ட்அறிக்கைவந்திருந்தது. நாங்கள்அதைவரவேற்றோம். அதிலும்அவர்இறுதியாகசொன்னதைவிசேடமாகவரவேற்றிருந்தோம். இறுதியாகசொல்லியிருந்தது, உலகளாவியநியாயாதிக்கத்தைநாடுகள்உபயோகிக்கவேண்டும்(universal jurisdiction). அதைதமிழ்பத்திரிகைகள்எல்லாம்சர்வதேசநியாயாதிக்கம்என்றுஎழுதினார்கள். ஒவ்வொருஎடிட்டராகக்கூப்பிட்டுச்சொன்னேன்universal jurisdiction என்பதுinternational jurisdiction இல்லை, இரண்டுக்கும்வித்தியாசம்உள்ளது. அவர்சொன்னதுசர்வதேசகுற்றவியல்நீதிமன்றம்( international criminal court)  இல்லை. அவர்சொன்னதுuniversal  jurisdiction. அதற்குஉதாரணம்கூடசொல்லியிருந்தார். பிரேசிலில்முன்னாள்இராணுவத்தளபதிக்குஎதிராகக்கொண்டுவரப்பட்டதைப்போலஉறுப்புநாடுகள்உங்கள்நாடுகளிலேஉலகளாவியநியாயாதிக்கத்தைஉபயோகப்படுத்துங்கள்என்றுகேட்டிருந்தார். முன்பேசிலஇடங்களில்இதுநடந்துள்ளது. உறுப்புநாடுகள்இதைசெய்யவேண்டும்என்றுசொல்லும்போதுநாங்கள்அதைவரவேற்றோம். ஆனால்இன்றைக்கும்மக்கள்மத்தியில்தெளிவுகிடையாது. உலகளாவியநியாயாதிக்கம்என்றால்என்ன, நாங்களும்அதைதொடர்ச்சியாகவரவேற்கிறோம், அதற்கானபலஎத்தனங்களைச்செய்திருக்கிறோம், சர்வதேசகுற்றவியல்நீதிமன்றம்என்பதுஎன்ன, அதில்என்னஉள்ளது, அங்குபோகமுடியுமாஇல்லையா. இவை  இரண்டுவித்தியாசமானவிடயங்கள். ஆனால்இரண்டையும்ஒன்றாகவைத்துகொண்டு  இளவரசர்செய்டேசொல்லிவிட்டார், ஆனால்சுமந்திரனுக்குஅதுதெரியாதுஆகவேஅங்குபோகமுடியாதென்று  இவர்சொல்லுகின்றார்என்றுதவறாகவிளங்கிக்கொண்டுள்ளனர். செய்ட்சொன்னதுஎன்னஎன்றவிளக்கத்தைஊடகங்கள்சொன்னால்நல்லது.

 

இதுமக்களின்உணர்வுகளோடுசம்பந்தப்பட்டவிடயம். ஷ்ரீன்சொன்னார்ஒன்றும்நடக்கவில்லை, எதிர்பார்ப்பைகூட்டிவிட்டார்கள்என்று.சர்வதேசவிசாரணைநடந்ததுஎன்றுஅவரும்சொன்னார். அதைநான்சொன்னால், சர்வதேசவிசாரணைநடந்துமுடிந்ததென்றுஇவர்சொல்கிறார்என்பர். அந்தவிசாரணையும்தான்நடத்தது, அதுசர்வதேசவிசாரணைதான், OISL report உலகவிசாரணைஇல்லை.

 

நல்லஒருஉதாரணத்தைசொல்லிமுடிக்கிறேன். 2014ம்ஆண்டுமார்ச்சர்வதேசவிசாரணைக்கானதீர்மானம்நிறைவேற்றப்பட்டபோதுநாங்கள்அதனைவரவேற்று, சர்வதேசவிசாரணைகொண்டுவரப்பட்டதுஎன்றுசொன்னபோதுதொடர்ச்சியாக6 மாதகாலமாகயாழ்ப்பாணத்தில்சர்வதேசவிசாரணைஇல்லையென்றுபெரியஒப்பாரி. அந்தநேரத்தில்நான்ஜெனீவாவில்இருந்தேன். சம்பந்தன்ஐயாகொழும்பில்இருந்தார். BBC தமிழ்சேவைஐயாவிடம்ஒருபேட்டிஎடுத்தார்கள். பேட்டிஎடுத்தவர்கேட்டார், சர்வதேசவிசாரணைஇல்லைஎன்றுசொல்கிறார்களே, நீங்கள்என்னசொல்கிறீர்கள்?. ஐயாகேட்டார்இந்தவிசாரணையைநடத்தப்போவதுயார்? ஐக்கியநாடுகள்மனிதஉரிமையின்உயர்ஸ்தானிகர்அலுவலகம்என்றுபதில்சொன்னார்பேட்டிகேள்விகேட்டவர். ஐயாகேட்டார்அதுஉள்நாட்டுவிசாரணையோ? என்று. அவ்வளவுதான்பேட்டி. இதுBBC தமிழ்சேவையில்போனது. ஆனால்இன்றுவரைஒருவிசாரணையும்நடக்கவில்லைஎன்றுதான்சொல்லப்படுகிறது.

 

குற்றவியல்நடைமுறைவேறு, அதுநடக்கவேண்டும்ஆனால்அதுநடக்கவில்லை. அதற்கானநீதிமன்றபொறிமுறைஎப்படியாகஇருக்கவேண்டும்என்பதுதான்அந்ததீர்மானத்தில்உள்ளது. சர்வதேசத்தில்இருந்து, பொதுநலவாயநாடுகளில்இருந்துஎந்தெந்ததரத்தவர்கள்அதில்ஈடுபடவேண்டும்என்றுஅதில்சொல்லப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்கள், நீதிபதிகள்அதில்பங்கேற்கவேண்டும்என்றுசொல்லப்பட்டுள்ளது. அதைத்தான்எங்களுடையமக்களும்இன்றுகேட்கிறார்கள். ஆனால்அதுவேறு, சர்வதேசவிசாரணைநடந்துமுடியவில்லை, இவர்பொய்சொல்கிறார். அப்படியெனில், எல்லோரும்கையில்கொண்டுதிரியும்OSL report என்பதுஎன்னது.

 

ஊடகங்களுக்குபாரியபங்குஇருக்கிறது. இந்தஉணர்ச்சிபூர்வமானசூழ்நிலையில்மக்களின்எதிர்பார்ப்புஉயர்வாகஉள்ளபோது, ஒருசிறியதகவல்கிடைத்தாலும்அவர்களிற்குஅதுபாரியவெற்றிபோன்றது. ஜனாதிபதிஎங்களைகாம்ப்போய்பாக்கவிட்டுட்டார்என்று. நான்அந்தஅம்மாமாரிடம்போய்கேட்டேன், நீங்கள்உண்மையாகநம்புறிங்களாஜனாதிபதிகாம்ப்புக்குகொண்டுபோனால்மேசைகதிரைகளுக்குக்கீழ்யாரையாவதுகண்டுபிடிப்பீர்கள்என்றுநம்புகிறீர்களா?. அவர்கள்இல்லைஎனசொன்னார்கள். அப்படியெனில்ஜனாதிபதிசொல்வதைஏன்ஏற்றுக்கொள்கிறீர்கள்?. ஒழுங்கானவிசாரணைஒன்றுவேண்டும். அதுகாணாமல்போனவர்கள்அலுவலகத்தின்மூலமாகத்தான்நடக்கமுடியும். ஜனாதிபதிகாம்ப்புகுள்விட்டுட்டார்என்பதற்காகநீங்கள்ஒருவரையும்கண்டுபிடிக்கப்போவதில்லை. இதுஅவர்களுக்கும்தெரியும். ஆனால்எங்கேயாவதுஇருக்கிறார்களா, நாங்களாவதுபோய்கண்டுபிடித்துவிடலாம்என்றஅவர்களின்ஆதங்கம்அது. ஆனால்தவறுஎங்கேஉள்ளதென்றால்அந்தஆதங்கத்தில், உணர்ச்சியில், அவர்கள்எதையும்நம்புவதற்குதயாராகஇருக்கும்போதுஅந்தஉணர்வலைகளைவைத்துபத்திரிக்கைவிற்கநினைப்பதுமகாபாதகமானஒருசெயற்பாடு.

நன்றி