தமிழ்த் தே­சியக் கூட்­ட­மைப்­பின் மே தினக்­கூட்­டம் இம் முறை யாழ்ப்­பா­னம் வட­ம­ராட்­சி­யில் எதிர்­வ­ரும் முத­லாம் திகதி செவ்­வாய்­கி­ழமை நடாத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ளது.

வட­ம­ராட்சி அல்­வாய் மைக்­கல் விளை­யாட்டு மைதா­னத்­தில் பேர­ணி­யு­ட­னான மே தினக் கூட்­டம் இடம் பெறும். அன்­றைய தினம் பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் நெல்­லி­யடி பொதுச்­சந்­தை­யில் இருந்து ஆரம்­ப­மா­கும் பேரணி யாழ்ப்­பா­ணம் – பருத்­தி­த்துறை பிர­தான வீதி வழி­யாக மைக்­கல் விளை­யாட்டு மைதா­னத்தை அடைந்­ந­தும் பொதுக்­கூட்டம் ஆரம்­ப­மா­கும்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், மாகாண சபை உறுப்­பி­னர்­கள், உள்­ளு­ராட்சி மன்ற தலை­வர்­கள் எனப் பல­ரும் கலந்து கொள்­ள­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

Source: http://newuthayan.com/story/87628.html